இந்தியாவில் இனப் பாகுபாடு எப்படி தோன்றியது, அதை யார் வளர்த்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பது சிரமம் தவிர அதனால் பெரிய பலன் ஏற்படப்போவதுமில்லை. இன்று நம்மிடையே இந்த பேதங்கள் இருக்கின்றன என்பது நிதரிசனம்.
ஒரு சில இனங்கள் முன்னேறுவதையும் மற்றவர்கள் அப்படி முன்னேறாததையும் நாம் பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆராயவேண்டும்.
சமீப காலங்களில் இரண்டு இனங்கள் தங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த சமூகத்தில் தோன்றிய தலைவர்கள் இந்த மாறுதலைத் தோற்றுவித்துள்ளார்கள். மற்ற இனத்தவர்களை வசை பாடாமல் அமைதியாக முன்னேறியுள்ளார்கள். அவர்கள் நாடார் சமூகத்தினரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகமும் ஆகும்.
மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது. தங்கள் இனத்தவர்களை முன்னேறாமல் வைத்திருந்தால்தான் தாங்கள் கோலோச்சமுடியும் என்று உணர்ந்து அவர்கள் அந்த சமூகத்தினரின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்த இழிநிலை மாறாத வரை அந்த சமூகங்கள் முன்னேற மாட்டா.
nஎ சொன்னதுபோல எல்லாமே அரசியல்தான்
பதிலளிநீக்கு'வசை பாடாமல்' இருந்தால் எதிலிலும் முன்னேற்றம் காணலாம்...
பதிலளிநீக்கு//மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் துரதிருஷ்டமாக அந்தந்த இனத்தை சேர்ந்த மக்கள் படித்தவர்கள் ஆனாலும் சரி, படிக்காதவர்கள் ஆனாலும் சரி அவர்களின் தலைவர்களின் சுயநலத்தை புரிந்துகொள்ளாமல் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதால்தான் அவர்கள் முன்னேறவில்லை என நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வதும் யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஇதற்கு ஒரு காரணம் மேலே வந்த தலைவர்கள் தங்கள் இன மக்களை அதே நிலையில் வைத்திருந்தால்தான் தங்கள் நிலைக்க முடியும் என்பதால் அவர்களுக்கு சில பல எலும்புத்துண்டுகளை போட்டுவிட்டு முன்னேற விடாமல் செய்கிறார்கள். இன்னும் ஆண்டே அடிமை நிலைதான். அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் நிலை மாறும். ஆனால் சிந்திக்க விடாமல் உணர்வுகளை தூண்டி விட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.
பதிலளிநீக்குசேலம் குரு
இராமதாஸால் வன்னியர் இனத்துக்கு பிரயோஜனம் இல்லை, மஞ்சள் துண்டால் தமிழர்களுக்கு பிரயோஜனம் இல்லை, மாறாக அழிவு தான்.
பதிலளிநீக்குமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்
பதிலளிநீக்குதங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவு படிக்க சந்தோஷமாக இருக்கிறது. மற்றவர்களை வசைபாடாமல் முன்னேறி, மற்ற இனங்களுக்கு வழி காட்டும் இரு சமூகத்தினருக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபாசிடிவ் ஆன ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!ஸ்ரீராமைப் பார்த்தவுடன் பாசிடிவ் நினைவுக்கு வந்துவிட்டது!