வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு !

                       

வைகோபாலகிருஷ்ணனின் சிறுகதைகளை சில நாட்களாக மறந்து விட்டேன். அவருடைய சிறுகதைப் போட்டியின் 16 வது கதை இது. இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையைப் படிக்கு முன் என் விமர்சனத்தைப் படித்து விட்டுச் செல்லவும்.  ஒரு வேண்டுகோள். கதையைப் படிக்குமுன் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும்.

விமர்சனம்

VGK 16 - ஜா தி ப் பூ 

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு சிறுகதை ஆகிறது என்பதை இக்கதையில் காண்கிறோம். பாட்டியும் பேத்தியும் வியாபாரத்தில் போட்டி போடப் போக அது எவ்வாறு திருமணத்தில் முடிகிறது என்பதுதான் கதை.


கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. இம்மாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் மனத்திருப்தி பெரிய திருப்பங்களுடன் எழுதப்படும் கதைகளைப் படிக்கும்போது ஏற்படுவதில்லை.

கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

 பழனி.கந்தசாமி

25 கருத்துகள்:

  1. எளிமையான சிறுகதை தலைவருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. திரு வை.கோ அவர்களின் ‘ஜாதிப் பூ’ சிறுகதையையும் அந்த கதை பற்றிய தங்களின் திறனாய்வையும் படித்தேன். ‘கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. ‘ என்ற தங்களின் கருத்து சரியே. ‘கதையைப் படிக்குமுன் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும்.’ என்ற எச்சரிக்கையை படித்தவுடன், நானும் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டுதான் படித்தேன்.ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் கதையை இயல்பாய் நகர்த்திக்கொண்டு போயிருக்கிறார் கதாசிரியர் என்பது எனது கருத்து. கதையை படிக்கும்போது ஏதோ ஒரு நிகழ்வை நாமே நேரில் பார்த்து பரவசம் அடைவதுபோன்ற உணர்வைத் தந்த திரு வை.கோ அவர்களின் கதை ஆளுமையை பாராட்டத்தான் வேண்டும். கதையை படிக்க உதவிய தங்களுக்கும், அருமையான சிறுகதையை தந்த திரு வை.கோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி வெள்ளி, 13 பிப்ரவரி, 2015 ’அன்று’ 7:48:00 முற்பகல் IST

      வணக்கம் Sir.

      //கதையை படிக்கும்போது ஏதோ ஒரு நிகழ்வை நாமே நேரில் பார்த்து பரவசம் அடைவதுபோன்ற உணர்வைத் தந்த திரு வை.கோ அவர்களின் கதை ஆளுமையை பாராட்டத்தான் வேண்டும். கதையை படிக்க உதவிய தங்களுக்கும், அருமையான சிறுகதையை தந்த திரு வை.கோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!//

      தங்களின் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  3. விமர்சனத்தைப் படித்தபோதே கதையின் நுணுக்கம் தெரிந்தது. நனறி.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.

    தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  5. //கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. இம்மாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் மனத்திருப்தி பெரிய திருப்பங்களுடன் எழுதப்படும் கதைகளைப் படிக்கும்போது ஏற்படுவதில்லை. கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். - பழனி.கந்தசாமி//

    ஆஹா, தன்யனானேன். மிகப்பெரிய ஆஸ்கார் அவார்டு கிடைத்தது போல பூரித்துப்போனேன் ஐயா.

    என் கதையின் தலைப்பு ‘ஜாதிப்பூ’ என்று இருந்தாலும், என் நண்பர்கள் பலராலும் பலமுறை பாராட்டப்பட்ட அதில் வரும் முதல் வரியினை இந்தப்பதிவுக்குத் தாங்கள் தலைப்பாக வைத்தது மேலும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    கோதுமை அல்வாவுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  6. நான் அப்பவே..நிணைச்சேன்........பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. கதை எதிர்பாராத திருப்பம்.
    எளிமையான நடை.
    மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது.
    வாழ்த்துக்கள்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எதிர்பாராத திருப்பம்.
      எளிமையான நடை.
      மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது.
      வாழ்த்துக்கள்

      சேலம் குரு//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  8. அந்த இளைஞன் "பாட்டி அந்த பெண்ணை செவ்வாய் வெள்ளி கூட வர வேண்டாம் என்று சொல்லுங்கள். கோயிலுக்கு வரும் இளைஞர்கள் கோயில் உள்ளே உள்ள அம்பாளை பார்ப்பதை விட்டு விட்டு வெளியே உள்ள இந்த அம்பாளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.
    இனிமேல் அந்த பெண்ணை வர வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று சொல்லுவார் என்று நினைத்தால், இது புது மாதிரி இருக்கிறது. ஆனால் நல்ல முடிவு

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் அந்த பெண்ணை வர வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று சொல்லுவார் என்று நினைத்தால், இது புது மாதிரி இருக்கிறது. ஆனால் நல்ல முடிவு

      காயத்ரி மணாளன்//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  9. இத்தனை வகை பூக்களா? இவ்வளவும் எந்த கோயில் வாசலில் விற்கிறது? இளைய தலைமுறையினருக்கு தெரிந்ததெல்லாம் செயற்கை பூக்களால் ஆன பூங்கொத்துதான் (பொக்கே). அவர்களுக்கு இத்தனை வகை பூக்கள் பெயர் புதிதாக இருக்கும்

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை வகை பூக்களா? இவ்வளவும் எந்த கோயில் வாசலில் விற்கிறது? இளைய தலைமுறையினருக்கு தெரிந்ததெல்லாம் செயற்கை பூக்களால் ஆன பூங்கொத்துதான் (பொக்கே). அவர்களுக்கு இத்தனை வகை பூக்கள் பெயர் புதிதாக இருக்கும்

      திருச்சி அஞ்சு//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  10. ஒரு படத்தில் சூர்யா கதாநாயகியைப்பார்த்து பாடும் ஒரு பாட்டில் நூறு பூக்களின் பெயரை சொல்லுவார். அது மாதிரி கோயில் வாசலில் விற்கப்படும் பூக்களின் பெயர்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் என்ன? இத்தனை பூக்களை பார்க்காமல் அந்த பூக்களை விற்கும் பெண்ணை பார்க்கத்தானே இளைஞர் கூட்டம் வந்தது எனும்போது அந்த பூக்கள் கண்டிப்பாக மெளனமாக அழுதிருக்கும்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் வாசலில் விற்கப்படும் பூக்களின் பெயர்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் என்ன? இத்தனை பூக்களை பார்க்காமல் அந்த பூக்களை விற்கும் பெண்ணை பார்க்கத்தானே இளைஞர் கூட்டம் வந்தது எனும்போது அந்த பூக்கள் கண்டிப்பாக மெளனமாக அழுதிருக்கும்.

      திருச்சி தாரு//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  11. ஆனாலும் பணம் படுத்தும் பாடு எப்படி பார்த்தீர்களா?
    தன கண் முன்னாலேயே கோயில் வரும் சாக்கில் தன் பேத்தியை பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தை ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கும் அந்த பாட்டியின் நிலை பாவம்தான். ஒரு சில ரூபாய்களுக்காக இப்படிப்பட்ட வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் பணம் படுத்தும் பாடு எப்படி பார்த்தீர்களா?
      தன கண் முன்னாலேயே கோயில் வரும் சாக்கில் தன் பேத்தியை பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தை ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கும் அந்த பாட்டியின் நிலை பாவம்தான். ஒரு சில ரூபாய்களுக்காக இப்படிப்பட்ட வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது.

      துளசி மைந்தன்//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் மாறுபட்ட கோணத்தில் வருந்தி எழுதியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  12. உண்மைதான். கடவுள் படைத்த அந்த பூக்களை விட மனிதன் படைத்த அந்த பூக்காரி அழகுதான்.

    ....அதுக்கும் மேலே....

    இத்தகைய கதையை படைத்த VGK அவர்களை பாராட்ட வேண்டும்

    ....அதுக்கும் மேலே....

    இந்த கதையை தனது விமரிசனத்துடன் பதிவிட்ட அய்யா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

    ....அதுக்கும் மேலே....

    அந்த கதையில் வரும் அந்த இளைஞன். அந்த பூக்காரபெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி அந்த பாட்டியின் வயிற்றில் பாலை வார்த்தானே.
    அவன்தான் எல்லாத்துக்கும் மேலே.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கடவுள் படைத்த அந்த பூக்களை விட மனிதன் படைத்த அந்த பூக்காரி அழகுதான்.

      ....அதுக்கும் மேலே....

      இத்தகைய கதையை படைத்த VGK அவர்களை பாராட்ட வேண்டும்

      ....அதுக்கும் மேலே....

      இந்த கதையை தனது விமரிசனத்துடன் பதிவிட்ட அய்யா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

      ....அதுக்கும் மேலே....

      அந்த கதையில் வரும் அந்த இளைஞன். அந்த பூக்காரபெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி அந்த பாட்டியின் வயிற்றில் பாலை வார்த்தானே. அவன்தான் எல்லாத்துக்கும் மேலே.

      சேலம் குரு//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மிக நீண்ண்ண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  13. பூக்களை விட .... அந்த பூக்காரி... நல்ல அழகு.
    அந்த பூக்காரியை விட ..... அந்த படத்திலிருந்த பெண்... ரொம்ப அழகு

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்களை விட .... அந்த பூக்காரி... நல்ல அழகு.
      அந்த பூக்காரியை விட ..... அந்த படத்திலிருந்த பெண்... ரொம்ப அழகு

      திருச்சி அஞ்சு//

      ;) வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும்
      அ ழ கோ அ ழ கா ன கருத்துக்களுக்கும்
      என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள். VGK :)

      நீக்கு
  14. சுருக்கமான விமர்சனம். கதையை மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன் அவரது புத்தகத்திலும், தளத்திலும்.

    பதிலளிநீக்கு