நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது கடிதங்கள் எழுதுவது பற்றி சில சட்டங்கள் இருந்தன. ஒரு காகிதத்தை எடுத்தால் அதில் உள்ள எல்லா வெற்றிடத்திலும் காலி விடாமல் எழுதக் கூடாது என்பது முதல் பாடம்.
மேலும் கீழும் போதுமான இடம் விடவேண்டும். இடது பக்கம் இரண்டு விரற்கடை அளவு "மார்ஜின்" (Margin) விடவேண்டும். வலது பக்கத்திலும் குறைந்தது ஒரு விரற்கடை அளவாவது இடம் விடவேண்டும். இவையெல்லாம் அந்த கடிதத்தை சிரமமில்லாமல் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.
பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த தத்துவத்தை மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவேதான் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் மார்ஜின் கோடுகள் போடப்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் தட்டச்சு செய்தாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும் ஒரு அச்சிட்ட பக்கத்தில் மேல், கீழ், இடது, வலது ஆகிய நான்கு பக்கங்களிலும் போதுமான இடம் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
புத்தகங்கள் அச்சிடும்போதும் இதே விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. நான் முதுகலைப் படிப்பு படிக்கும்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இந்த விதி கடுமையாக கவனிக்கப்படும். இந்த விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
அதே போல் வரிகளுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இவையெல்லாம் படிப்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள். ஒரு வரி இவ்வளவு அகலம்தான் இருக்கலாம் என்றும் கணக்குண்டு. ஏனெனில் ஒரு வரியைப் படித்த பின் அடுத்த வரிக்கு வரும்போது வரிகளைத் தெளிவாக அறியும்படி இருக்கவேண்டும்.
பதிவுலகில் எழுதும் பதிவர்கள் தாங்கள் மட்டுமே படிப்பதற்காக எழுதுவதில்லை என்று நம்புகிறேன். அப்படி இல்லாமல் மற்றவர்களும் படிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்களாயின் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கடைப்பிடித்தால் படிப்பவர்கள் சிரமமில்லாமல் படிப்பார்கள்.
இந்தப்படத்தைப் பார்க்கவும்.
இப்படிக் கொச கொசவென்று எழுதினால் படிப்பதற்குள் கண் வலி வந்து விடும்.
இன்னொரு தளம் பாருங்கள்.
ஒரு வரியைப் படித்து விட்டு அடுத்த வரி வருவதற்குள் வரி மாறி விடுகிறது. கொஞ்சம் அகலத்தைக் குறைத்தால் என்ன? கூகுள்காரன் இலவசமாக இடம் கொடுக்கிறான் அதில் கொஞ்சம் தாராளம் காட்டினால் என்ன?
தளம் முழுவதும் இடமிருந்து வலமாக முழு கணினி திரையையும் நிரப்பவேண்டுமா, என்ன?
நான் ஒரு பழமைவாதி. என்னால் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
படங்களை சொடுக்கிப் பார்க்கவும்.
பதிலளிநீக்குஇரண்டு வருடங்களுக்கு முன்... நீங்கள் இந்தப் பதிவில் கொடுக்கவில்லை என்றாலும்... ஒரு நிமிடம்... இதோ உங்களின் பதிவு...
பதிலளிநீக்குhttp://swamysmusings.blogspot.com/2013/01/blog-post_3.html
"ஏதாவது ஆகி விடுமோ...?" என்கிற பயம் கண்களை குருடாக்கி விடும்... இந்த விசயத்தில் நம் கண்கள் மட்டுமல்ல...!
சில இடங்களில் நானும் பத்தி பிரித்து எழுதலாமே என்று சொல்லியிருக்கிறேன். எங்கள் ப்ளாக் பதிவுகளில் போதுமான இடைவெளி இருக்கிறதா, சிறு சிறு பாராக்களாக அமைகிறதா என்று மறுபடி மறுபடி சோதித்தே வெளியிடுகிறேன்! அப்படியும் சில சமயங்களில் சில எடிட்டிங்குகளின் போது அலைன்மெண்ட் மாறிவிடும்!
பதிலளிநீக்கு:))))
தீர்வு 1 : விளக்கமாக இங்கே : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html - அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1)
பதிலளிநீக்குசுருக்கமாக இங்கே : தமிழ்மணம் இல்லாத தளங்களில் (50% தமிழ்மணம் இருக்கும்... ஆனால் .com என்று மாறாததால், ஓட்டுப்பட்டையாக மாறாத தளங்களில்....)
http://thulasidhalam.blogspot.in/2015/02/20.html
http://thulasidhalam.blogspot.in/2015/02/20.html?m=1
இந்த இரண்டையும் வெவ்வேறு tab-ல் திறந்து பார்க்கவும்... இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லையா...? தமிழ்மணம் உள்ள தளங்களில் ஓட்டளித்து விட்டு, இதே போல் செய்கிறேன்... கணினி திணராது... அதை விட (?m=1) என்பதை எந்த தளம் திறக்கும் போதும் செய்தால், "எவ்வளவு சம்பாதித்து உள்ளீர்கள்...?" என்பதை எனக்கு தெரிவிக்கவும்...
சம்பாதித்து = நேரம்...! ஹா... ஹா...
தீர்வு 2 : பல விசயங்களில் நாம் தான் மாற வேண்டும்... நாம் மருத்துவமனை செல்ல வேண்டாம்... இங்கே நம் கண்களை பரிசோதனை செய்வோமா ஐயா...?
இப்படிப்பட்ட தளங்களை வாசிக்கும் போது, ctrl key-யை அழுத்திக் கொண்டு plus key-யை ஓரிரு முறை தட்டவும்... ஐ...! மறுபடியும் அந்த தளத்தை என்று திறந்தாலும் இது போல் செய்ய வேண்டியதில்லை...! (மீண்டும் மாற்ற ctrl key-யை அழுத்திக் கொண்டு minus key-யை ஓரிரு முறை தட்டவும்...)
உண்மைதான் ஐயா
பதிலளிநீக்குதம +1
ஐயா சிலர் பதிவேற்றும்போது html ஐ அழுத்தி பதிவெற்றியிருப்பார்கள். அதனால் தான் பதிவுகள் முழு இடத்தையும் அடைத்துக்கொண்டுள்ளன. நீங்கள் சொல்வது போல் பத்தி பிரித்து படிவேற்றலாம். இது பற்றி திரு திண்டுக்கல் தனபாலன் போன்ற வலையுலகின் தொழில் நுட்ப வல்லுனர்கள் விளக்கலாம்.
பதிலளிநீக்குஅட ராமா!
பதிலளிநீக்குதங்களின் ஆதங்கம் நியாயமானதே பயனுள்ள பதிவு நானும் முயற்சிக்கின்றேன் ஐயா.
பதிலளிநீக்குதமிழ் மணம் 5
சில பதிவுகளில் எழுத்துக்களின் சைஸ் சிறியதாகி இருந்து படிக்க சிரமம் இருந்தால், நான் தனபாலன் சொல்லியது போல் எழுத்துக்களைப்பெரிதாக்கிப் படிப்பேன்.
பதிலளிநீக்குயோசிக்க வேண்டிய விஷயம்தான்! நன்றி!
பதிலளிநீக்குமிக நல்ல உபயோகமான பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குமலர்
உபயோகமான பகிர்வு ஐயா....
பதிலளிநீக்குஇனிய உளவாக இன்னாத கூறல்
பதிலளிநீக்குகனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
( குறள் எண் : 100 )
உண்மை எப்போதும் கசப்பானது. அதனால்தான் அதை யாரும் விரும்புவதில்லை. இது தெரிந்தும் என்னால் பல சமயங்களில் சும்மா இருக்க முடிவதில்லை. இதுதான் வயதானவர்களின் தொந்திரவு.
இந்தப் பதிவுக்கு வரவேற்பில்லை. இனிப்பான பதிவு ஒன்று சீக்கிரமே போடுகிறேன்.