புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு அசாதாரண நிகழ்ச்சி

இங்கே கொடுத்திருக்கும் ஒரு விடியோ தொடர்பை சொடுக்கிப் பார்க்கவும். இது ஒரு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். எனக்கு தற்காலத்திய சினிமாக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத தினால் இது எந்தப் படத்தில் வந்தது என்று சொல்லத் தெரியவில்லை.

       

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த ஊரில் இந்த படப்பிடிப்பை ஒரு பெரிய விஷயமாகக் கருதி எந்த விதமான கூட்டமும் சேரவில்லை என்பதுதான். நம் ஊரில் இப்படி ஒரு படப்பிடிப்பு நடத்த முடியுமா?

நேற்று நான் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். விழா ஒரு பிரபல ஓட்டலில் நடை பெற்றது. பிறந்த நாள் கேக் வெட்டியபிறகு விருந்து நடைபெற்றது. விருந்து தாங்களே எடுத்துக்கொள்ளும் ரகம். இம்மாதிரி விருந்துகளில் உணவை எடுத்துக்கொண்ட பிறகு அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்று சாப்பிடவேண்டும். அப்போதுதான் அடுத்து வருபவர்கள் உணவை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த அடிப்படைத் தத்துவத்தைக் கூட நம் ஆட்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உணவு மேஜைகளைச் சுற்றியே பெருங்கூட்டமாக நின்று கொண்டு அடுத்து வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எப்போது பண்பைக் கற்றுக்கொள்வார்கள்?

                                          Image result for buffet dinner party

19 கருத்துகள்:

  1. ஷூட்டிங் வேடிக்கைப் பார்ப்பவர்களைத் தவிர்த்துத்தான் எடுக்கப்படும் காட்சிகளை எடுப்பார்கள். கேமிராவின் பார்வையில் அவர்கள் படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். என்றாலும் வெளிநாடுகளில் ஷூட்டிங் பார்க்க அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதும் உண்மைதான்! உணவு உண்ணும் முறையில் உள்ள சங்கடம் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கஷ்டத்தை நானும் அனுபவித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கமெண்ட் போட்டு முடித்ததும் வீடியோ ஓட ஆரம்பித்தது. அந்த வெளிநாட்டுப்பெண் பிரமாதமாக ஆடியிருக்கிறாரே...

    பதிலளிநீக்கு
  3. விருந்தோம்பல் நிலையில் நல்ல தேவையான கருத்து.

    பதிலளிநீக்கு
  4. ரசிகர்கள் இருந்தால் சரி... வெறியர்கள் இருந்தால் இப்படித்தான் - இங்கு எதிலும்...!

    பதிலளிநீக்கு
  5. இந்த பாட்டு 2000 ஆம் ஆண்டு திரு மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வந்த அலைபாயுதே என்ற அதிரைப்படத்தில் வந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள எடுத்தூண் (Buffet) முறை பற்றி நானும் ஒரு பதிவு எழுத எண்ணியிருந்தேன், நீங்கள் கோடி காட்டிவிட்டீர்கள். அதை விரிவாக எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றாக சொன்னீர்கள் அய்யா. இந்த மாதிரி பபே(BUFFET) முறை - நமக்கு வேண்டிய உணவுப்பொருளை வேண்டிய அளவு மட்டும் எடுத்துகொள்வதற்கும் இதனால் உணவுபொருட்கள் வீணாவதை தடுப்பதற்கும் ஏற்பட்ட முறைதான்.
    - முதலில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு பின்னர் விரும்பினால் அதே உணவு இன்னும் கொஞ்சம் அல்லது வேறொரு உணவுபண்டம் எடுத்துக்கொள்ளலாம்.
    - இதனுடைய மற்றொரு நல்லதொரு விளைவு வெவ்வேறு மனிதர்களுடன் பேசலாம். பந்தி முறையில் அமர்ந்து உண்டால் நமக்கு இரு பக்கமும் அமருபவர்களுடன் மட்டுமே பேச முடியும் (விருந்து உன்ன வந்தீர்களா அல்லது பேச வந்தீர்களா என்று கேட்காதீர்கள்).
    - இந்த பபே(BUFFET) முறை NETWORKING செய்யவும் உதவும்.

    ஆனால் இது எதையுமே பின்பற்றாமல் ஒரே தடவையில் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பரப்பி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை உணவு வகைகளிலும் ஒன்றொன்று தனது தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு தட்டை தூக்க முடியாமல் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு எதற்காக இந்த முறை துவங்கப்பட்டதோ அதையே defeat செய்யும் வகையில்தான் நாம் இங்கு நடந்து கொள்கிறோம்.
    நீங்கள் சொன்ன மாதிரி உணவு வகைகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் அலங்கார table அருகிலயே நின்று கொள்வது இன்னொரு அசௌகர்யம்.
    இரண்டாவது முறை சென்று எடுத்துகொள்வது என்பது அநேகமாக அநாகரீகம் என்று கருதிக்கொண்டு பாதி உணவு வகைகளை விட்டு விடுவது இன்னொரு அசௌகர்யம்.
    இன்னமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. தங்களை மாதிரி வயோதிக இளைஞர்களுக்கு இந்த மாதிரி தாங்களே எடுத்துகொள்ளும் ரகத்தை சார்ந்த விருந்து கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்குமே. எல்லா வகை உணவுகளையும் தட்டில் வைத்தால் பாரமாகி விடும். ஒரு கையில் பாரமான தட்டை வைத்துகொண்டு, மேலும் நின்று கொண்டு உண்பது விருந்தின் சுவையையே கெடுத்து விடுமே. அநேகமாக நீங்கள் தட்டில் உணவு எடுத்துகொண்டு நல்ல இடமாக பார்த்து அமர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  8. பாரத நாட்டியத்தையும் பபே விருந்தையும் தொடர்பு படுத்தி ஒரு பதிவிட நமது அய்யாவால்தான் முடியும். நீங்கள் சொல்வது உண்மைதான். நமது ஊரில் சினிமா நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தேவையே இல்லாதது. என்றுதான் இந்த் மோகம் தீருமோ?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  9. அடுத்து வருபவர்களைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நமது ப்ளேட்டில் ஒன்றும் இருக்காது. பக்கத்திலேயே நின்று சாப்பிடக்காரணம் நமக்கு பிடித்த உணவு வகையின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்து, அது தீருகிற மாதிரி தெரிந்தால் உடனே ஒன்று எடுத்து நமது தட்டில் வைத்துகொண்டு விட வேண்டும் என்பதுதான்.

    சேலம் துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  10. பழனி. கந்தசாமி ஐயா...

    ஒரு சமுதாயத்தினை பொறுப்பு உள்ளவர்களாக மாற்ற முதலில் பள்ளியில் குழந்தைகளில் இருந்து துவங்க வேண்டும். திடீரென மக்களை மாற்ற முடியாது. இதற்கு ஒரு இருபது வருடமாவது ஆகும். சிங்கப்பூர் முன்னேறியது 1970லில். ஆனால் 1950லிருந்து பள்ளிகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. லஞ்ச லாவண்யங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டு குறைக்கப்பட்டன. இன்று அது ஒரு முன்னேறிய நாடு. நாம் பொருளாதார முன்னேற்றத்தில் காண்பிக்கும் முனைப்பு நமதி மக்களின் பண்புகளை முன்னேற்றுவதில் சற்றும் ஆர்வம் காண்பிப்பதில்லை.

    அன்புடன்,
    சங்கர நாராயணன். தி
    ஆம்ஸ்டர்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னது மிகவும் சரி. அதே நேரம் ஜனதொகை பெருக்கத்தை அவசியம் கட்டுபடுத்த வேண்டும்.

      நீக்கு
  11. அந்தப் பெண்மணியின் நடனம் பாந்தமாக இருந்தது. வெளி நாடுகளில் வருவோர் போவோரின் கவனம் தங்கள் வேலைகளைப் பொறுத்தே இருக்கும். கைதட்டல் கேட்க இனிமையாக இருந்தது. நம் ஊர் தான் உணவு கொள்ளும் முறை சில சமயம் சங்கடம் . சிலசமயம் ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  12. Dr. Jai Khalsa அவர்களின் பரத நாட்டிய காணொளி கண்டேன். அது எந்தப் படத்தில் வந்தால் என்ன. ?ஒன்று கவனித்தீர்களா. பாட்டின் எல்லா வரிகளுக்கும் ஒரே மாதிரியான அடவுகள் என்று எனக்குத் தோன்றியது. பஃப்ஃபே முறை உணவு வீணாவதைத் தடுக்க ஏற்படுத்திய முறை என்று எண்ணுகிறேன் உட்கொள்ளும்போது சிரமங்கள் நானும் அனுபவித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல காணொளி
    நல்ல கருத்து
    ஒரு பதிவில் இரண்டு சிறந்த அமசங்கள்
    ஒப்பிட்ட முறை மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. இந்த மாதிரி பழக்க வழக்கங்களை பால பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை நானும் ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான் ஐயா இந்த BUFFET முறையில் நமது மக்கள் இன்னும் சரியான புரிதலுக்கு வரவில்லை ஆசைப்பட்டு தட்டு நிறைய எடுத்து விடுவார்கள் பிறகு அடுத்தவரும் உபயோகப்படுத்த முடியாதவாறு கொண்டு போய் கொட்டி விடுவார்கள்.

    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
  16. இந்தக் காணொளியின் தொடக்கத்தில் உள்ள விபரத்தில் மாத்திரமன்றி ,அலைபாயுதே எனும் தமிழ் படப்பாடல்கள் அடங்கிய இறுவட்டிலும் இந்தப் பாடல் எழுதியது இசையமைத்தது ஏ.ஆர்.ரகுமான்,எனக் குறிப்பிட்டுள்ளதைப் படித்திருப்பீர்கள்.
    ஆனால் இப்பாடலும், கானடா இராகத்திலமைந்த இவ்விசை வடிவமைப்பும் " ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்" எனும் இசை மகானுக்குரியது.
    பழைய படங்களில் கர்நாடக இசை உருப்படிகளை பயன்படுத்தும் போது, உரியவர்கள் பெயர் போடும் வழக்கம் இருந்தது. ராஜபாட் ரங்கதுரை படத்தில் பல பாடல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றியவை,இப்படத்தில் அது குறிப்பிடப்பட்டது.

    இன்று இவை ஏன் மறுக்கப்படுகிறதெனப் புரியவில்லை.
    இங்கு படப்பிடிபென்ன சகலதுமே அது பாட்டுக்கு நடக்கும்.
    இந்த "எடுத்துண்ணும் முறை" எம்மவர்கள் இன்னும் சரிவரப் புரியவில்லை. எம் உணவு வகைக்குப் பொருத்தமில்லை.

    பதிலளிநீக்கு
  17. இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இது படத்தில் வந்த காட்சி இல்லை. இங்கேயென்றால் தெருவில் யாராவது துள்ளினாலே கூட்டம் கூடிவிடுவார்கள் வேறு வேலையே இல்லை.

    பதிலளிநீக்கு