திங்கள், 16 பிப்ரவரி, 2015

எங்க ஊர் பைரவ சேனை

                                           
                                       Image result for street dogs

எங்கள் ஊரில் பைரவர் சேனை மிகவும் கட்டுப்பாடாக செயல்பட்டு வருகிறது. (வாழ்க மனேகா காந்தி - அவர்கள்தானே பைரவர்களைக் காப்பாற்ற உச்ச நீதி மன்றத்தில் ஆணை வாங்கினார்கள்).

நான் தினமும் நடைப் பயிற்சிக்காக செல்லும்போது இவர்கள் தங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணி என்னவென்றால் தங்கள் தங்கள் பிரதேசத்தை பிறருடைய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது.  இவர்களுடைய கட்டுக்கோப்பு அமைப்பு மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.

இந்த சேனை பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பகுதியை எல்லையாக அமைத்திருக்கிறார்கள். பொதுவாக இது ஒரு வீதியாகும். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில் பொதுப் பகுதி ஒன்று இருக்கும். அதில் எந்தக் குழுவும் உரிமை கொண்டாடக்கூடாது.

ஒரு குழுவிலிருந்து ஒருவர் அடுத்த குழுவின் எல்லையில் பிரவேசித்து விட்டால் போர் மூண்டு விடும். ஆஹா போர் என்றால் இதுதான் போர். இந்தப் போர் நடக்கும்போது அனல் பறக்கும். அதைத் தூரத்திலிருந்தே பார்த்து கவனித்து நீங்கள் இந்தப் பகுதியை விட்டு அடுத்த பகுதியில் உங்கள் நடைப் பயிற்சியைத் தொடர வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் அடுத்த பத்து நிமிடத்தில் உங்கள் ஊரின் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள். இந்தப் போரில் ஒரு விசேடம் என்னவென்றால் பைரவர்களில் ஒருவருக்கும் எந்த விதமான ஊறும் விளையாது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டுதான் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும்.

இப்படி ஒரு அரை மணி நேரம் நடந்த பிறகு ஏதாவது ஒரு குழுவிற்கு சோர்வு வந்து  விடும். அதன்பிறகு நடப்பதுதான் போரின் உச்சகட்டம். ஒரு குழு சோர்வடைந்து விட்டது என்பதை அடுத்த குழு எப்படியோ உணர்ந்து கொள்ளும். பிறகு அந்தக் குழு எதிர்க்குழுவைத் தாக்குவது போல் ஓடும். எதிர்க்குழு உறுப்பினர்கள் தங்கள் தங்கள் வாலைக் கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு புறமுதுகிட்டு ஓடுவார்கள்.

பைரவர் வாலைத் தன் பின்னங்கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டார் என்றால் அது பயமும் தோல்வியும் அடைந்ததற்கு அடையாளம்.  தோல்வியுற்று பின்வாங்கும் கொழுவை தங்கள் எல்லையிலிருந்து வெகு தூரம் விரட்டி விட்டு அங்கே நின்று கொசுறுக்கு கொஞ்ச நேரம் வசை பாடிவிட்டு தங்கள் எல்லைக்குத் திரும்புவார்கள்.

இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிந்து இருந்தால் ஒழிய நீங்கள் தடைப் பயிற்சிக்குச் செல்லக்கூடாது. இந்தப் பயத்தானால் ஒவ்வொருவர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பைரவர்களைத் தங்கள் கூட நடைப் பயிற்சிக்கு அழைத்து வருவார்கள். இந்தச் செல்லப் பைரவர்களை காவல் பைரவர் குழு நடத்துவதே ஒரு பெரிய நாடகம் போல் இருக்கும்.

தூரமாக நின்று கொண்டு இந்தக் குழு அந்த வீட்டுப் பைரவருக்கு சவால் விடும். இதைக் கண்ட வீட்டுப் பைரவர் ஆக்ரோஷத்துடன் அந்தக் குழுவின் மேல் பாயத்துடிக்கும். இதைத் தடுக்க அந்த வீட்டுப் பைரவரின் வளர்ப்பாளர் படும் பாடு இருக்கிறதே, அது ஒரு காணக்கிடைக்காத காட்சி.

தப்பித்தவறி அவர் தன்னுடைய பிடியை விட்டு விட்டால் அப்புறம் நடப்பது ஒரு அரிய போராகும். இதில் பெரும்பாலும் வீட்டுப் பைரவர் தோற்றுப்போவார். அப்புறம் அவரை மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பார்கள்.

நான் இந்த நுணுங்கங்களை நன்கு அறிந்திருப்பதால் இது வரை மருத்துவ மனைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பதிவுலக நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: பைரவர் என்றால் யார் என்று நண்பர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களை "நாய்" என்று யாராவது சொன்னால் அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

19 கருத்துகள்:

  1. நடைபயிற்சியின் போது நடப்பதை விட்டுவிட்டு, நடையன்கள் (பைரவர்களை இப்படியும் சொல்லலாம்) என்ன செய்கின்றன என்பதை உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். கையில் ஒரு கோல் கொண்டு சென்றால் அவைகள் நம்மை நெருங்கவே பயப்படும்.

    பதிலளிநீக்கு
  2. பைரவர் - இந்த வார்த்தையினை இப்படி பயன் படுத்தியிருக்க வேண்டாமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைரவர் என்று ஒரு உப-கடவுள் இருப்பதால் இப்படிக்கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் உணர்வுகளைப் பாதித்திருந்தால் மன்னிக்கவும்.

      நீக்கு
  3. இந்தப் பதிவினைப் பார்க்கவும்.
    http://www.kulaluravuthiagi.com/bhairavar.htm
    இந்தமதத்தின் தீவீர பக்தர்கள் வார்த்தைகளின் உபயோகத்தில் கவனமாக இருப்பார்கள். எனக்கு கொஞ்சம் பக்தி குறைவாதலால் பைரவர் என்ற வார்த்தையை இங்கு உபயோகித்தது அபசாரமாகப் படலாம். அதற்காக அந்தக் கால பைரவர் என்னை மன்னிப்பாராக. காசியில் அந்தக் கால பைரவர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல ரசனையான பதிவு. நாய்களை பைரவர் என்பதாலேயே காலபைரவர் என்ற தெய்வத்தை இழிவுபடுத்துதல் ஆகாது. உண்மையில் நாய்களுக்குள் கல்யாணம், நாய்களுக்கும் ஆடுகளுக்கும் கல்யாணம் என்று செய்து வைப்பவர்களே அந்த கடவுளை இழிவுபடுத்துகிறார்கள்.

    எங்கள் வீட்டு ஜாக்கி இறந்த பிறகு, அதன் நினைவாக எங்கள் வீதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினமும் பிஸ்கட், வருக்கி, ரொட்டி மற்றும் தயிருடன் சோறு (புதியதாக வடித்தது; பழையது அல்ல) கொடுக்கிறோம். (செலவைப் பற்றி யோசிப்பது இல்லை) இதனால் இந்த நாய்கள் எங்களை எங்கு கண்டாலும் அன்புடன் வால்களை ஆட்டியபடி பின்னாலேயே ஓடி வருகின்றன.

    த.ம.3

    பதிலளிநீக்கு
  5. அவர்களின் எல்லைப் பிரதேசம் அவர்களின் முச்சா வால் நிர்ணயிக்கப் படுகிறது என்று நினைக்கிறேன். என்ன கொடுமை என்றால் சில நாய்கள் எங்கள் வீட்டுக் கேட்டில் எல்லையை வைக்கிறதுகள். முன்பெல்லாம் அதிகாலை நடைப் பயிற்சியின் போது கையில் தடியையும் எடுத்துச் செல்வது வழக்கம். ரசித்துப்படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்களின் எல்லைப் பிரதேசம் அவர்களின் முச்சா வால் நிர்ணயிக்கப் படுகிறது என்று நினைக்கிறேன். //
      அப்படியே தான்! சிங்கம், புலி, பூனை,நாய் எல்லாம் அதுதான் .

      நீக்கு
  6. அவற்றை கூர்மையாக கவனித்து எழுதியிருக்கும் தங்களின் வர்ணனைகள் மிக அருமை. ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். இவற்றின் தொல்லைக்காகவும் நான் தெருக்களில் நடைபயிற்சி மேற்கொள்வது இல்லை. முடிந்தால் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் மட்டுமே.

    அங்கு நான்கு கால்களும் ஒரு வாலும் உள்ள நாய்கள் தொல்லைகள் இல்லையே தவிர ........... வேறுசில புதுமாதிரியான ..... இரண்டு கால்கள் மட்டுமேயுள்ள ...... இளம் ஜோடி நாய்களின் ...... பிரச்சனைகள் சமயத்தில் ஏற்படுவது உண்டு. :)

    பதிலளிநீக்கு
  7. ரசனையாகச் இருக்கிறீர்கள். எங்கள் பழைய பதிவான 'நடக்கும் நினைவுகளி'ல் இது பற்றி நானும் எழுதி இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. பைரவர்களைப் பற்றி ரசிக்க வைத்த பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  9. ரசனையோடு எழுதியிருக்கின்றீர்கள் ஐயா
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. வாழ்க மனேகா காந்தி!?
    எங்களுக்கு மேனகா காந்தியத்தான் தெரியும்
    இது யாரு நைனா?
    இது ஒரு வீதியாகும்
    இப்படி விதியையே 'வீதிக்கு' இழுப்பது ஞாயமா நைனா!
    பின்வாங்கும் கொழுவை!!! இதுக்கு அர்த்தம் தெரியலை நைனா.
    கடைசியாக
    நீங்கள் தடைப் பயிற்சிக்குச் செல்லக்கூடாது. இந்தப் பயத்தானால்
    நடந்து பயின்றால் அது நடைப்பயிற்சி.
    எதைப்பயின்றால் அது தடைப்பயிற்சி?
    எத்தனை தவறு இருந்தாலும் உங்க பதிவுக்கு தம +1
    ஏன்னா நீங்க பதிவர்களின் மு..வர் ஆச்சே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. - இது தேவையில்லாத ஒன்று.
      பதிவுகளில் ஒரு சில பிழைகள் இப்படி இருக்கலாம். அதை சரியான முறையில் நீங்கள் படித்தும் கூட இப்படு ஒரு பின்னூட்டத்தை பதிந்திருக்க வேண்டாமே என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

      - நீங்களும் "இந்தப் பயத்தானால் நடந்து பயின்றால் அது நடைப்பயிற்சி" என்று சொல்லியிருக்கிறீர்களே. "இந்த பயத்தினால்" என்பது "இந்தப்பயத்தானால்" என்று ஆகி விட்டது. இங்கு "ப்" வந்திருப்பது சந்திப்பிழையாகும்.

      - கடைசியில் "ஏன்னா நீங்க பதிவர்களின் மு..வர் ஆச்சே". என்று பதிவிட்டிருக்கிறீர்கள். மு..வர் என்பதற்கு முதியவர் என்று பொருளா இல்லை முதல்வர் இன்று பொருளா. நாங்கள் முதல்வர் என்றே எடுத்துக்கொள்கிறோம்/

      சேலம் குரு

      நீக்கு
    2. அய்யா சேலத்து குருசாமி
      இது உள்ளொன்று வைத்து புறமொன்று தைக்கும்
      எண்ணத்தில் இடப்பட்ட (குதற்க) பின்னூட்டமல்ல.
      எங்க நைனாவின் பதிவில் மற்றவர் தவறு சொல்ல இடமளிக்க கூடாது என்பதற்காக
      உள்ளன்போடும் பாசத்தோடும் குத்திய செல்லக்குத்து தப்பா நினைக்காதீங்க.

      நீக்கு
  11. நடைபயிற்சி செல்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அருமையான பதிவு
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  12. உள்ளநிலையைத் தெளிவாக உணர்ந்து சுவைபட எழுதுயுள்ளீர் ! உளம் கனிந்த வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  13. அனுபவித்துச் சுவையாக எழுதியுள்ளீர்கள். வலசரவாக்கத்தில் தங்கியிருந்த தெருவில் 6-7 உருப்படியுடன் ஒரு குழு, சென்ற முதல் நாளில் இருந்து நம்முடன் சுமூகமான உறவே ! ஆனாலும் நான் இயன்ற அளவு அவதானமாகவே உலாவினேன்.
    என் பாட்டி எலியை- வீட்டுப் பிள்ளையார் எனக் குறிப்பிடுவார். எலியெனச் சொல்லக் கூடாதென்பார்.
    அதனால் பைரவ சேனை , அவருக்கும் பெருமையே!

    பதிலளிநீக்கு