நேற்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாகின. என் பேரனின் மார்க்குகள் அவ்வளவு தரமானதாக இல்லை. இந்த வருடம் பொதுவாகவே எல்லோரும் கம்மி மார்க்தான் என்று சொல்லுகிறார்கள். வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். ஆனால் என்ன செய்ய முடியும்? இருக்கும் மார்க்குக்கு தகுந்தமாதிரி மேற்படிப்பைத் தொடர வேண்டியதுதான்.
ஆத்மாவை அறிந்து கொள்ள பலருக்கும் விருப்பமில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த மனிதப் பிறவி எடுத்ததே தன்னை அறிவதற்காகத்தான் என்று ஆன்மீகத் தலைவர்கள் காலம் காலமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.
தன்னை அறிவது என்பது ஆத்மாவை அறிவதுதான். அதை மிகவும் எளிதாக சிறு குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் கொடுத்தால் கொள்வாரில்லை. போகட்டும், ஆத்மாவின் தலைவிதி இன்றைய நாளில் அவ்வளவுதான்.
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆத்மா எனப்படுவதும் உயிர் எனப்படுவதும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா? வேலை இருப்பவர்கள் இந்தக் கேள்வியை விட்டு விட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கவும். மற்றவர்கள் மட்டும் இதை யோசித்து மூளையைக் குழப்பவும்.
நாளையிலிருந்து ஏதாவது உருப்படியான பதிவு போடுவதற்கு சப்ஜெக்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.
வருத்தத்தில் இருக்கும் போது வெளிச்சம் புலப்படும்...!
பதிலளிநீக்குநல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். நாளைய பதிவில் சந்திப்போம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதங்கள் பேரனுக்கு அவர் விரும்பும் துறை சார்ந்த படிப்பிற்கான கல்லூரியில் இடம் கிடைக்க வாழ்த்துக்கள்!
அத்வைதம் த்வைதம் போன்றவைகள் பற்றி 9 ஆம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட இந்த ஆத்மா பற்றிய ஐயம் இன்னும் தீரவில்லை. யாரேனும் விளக்கினால் நல்லது.
நானும் பணி ஓய்வு பெற்றதிலிருந்து இதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். பல வருடங்கள் பல பெரிய பெரிய ஆன்மீகக் குருக்களின் பிரசங்கங்களைக் கேட்டதின் விளைவாக நான் அறிந்தது என்னவென்றால்- சொல்லாமா வேண்டாமா என்ற குழப்பம் வருகிறது- எதற்கும் சொல்லி விடுகிறேன். ஆத்மா என்று ஒன்று இல்லை. எப்படி கடவுள் என்று ஒருவர் இல்லையோ அதே மாதிரி ஆத்மா என்று ஒன்றும் இல்லை. ஆனால் இதை அப்படியே ஒத்துக் கொண்டால் ஆன்மீகப் பிரசிங்கிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் இதை விடமாட்டார்கள்.
நீக்குஅதே மாதிரி இன்னொறு கேள்வி - நான் யார்? இதையும் விடமாட்டார்கள். இந்தக் கேள்விக்கு விடை நான் ஆத்மா என்பதுதான். ஆத்மா என்றால் என்ன? யாருக்கும் தெரியாது. ஆனால் ஆத்மாவைப் பற்றி வருடக் கணக்கில் வியாக்கியானம் சொல்லுவார்க்ள. ஆன்மீக அன்பர்கள் என்னுடைய கருத்துகளுக்காக என்னை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் ஆன்மீகத்தின் வேரே இந்த ஆத்மாவில்தான் இருக்கிறது.
மதிப்பெண் குறைவிற்காக கவலை வேண்டாம் ஐயா
பதிலளிநீக்குமதிப்பெண்கள் எதிர்கால வாழ்வை தீர்மானிப்பதில்லை
நன்றி ஐயா
தம +1
நன்றி, ஜெயக்குமார்.
நீக்குஐயா
பதிலளிநீக்குநான் படித்துப் புரிந்து கொண்ட வகையில் (தெய்வத்தின் குரல், நான் யார்) உயிர் வேறு ஆத்மா வேறு. உயிர் உடலை இயக்குகிறது. அது ஒரு சக்தி (force). ஆத்மா அப்படி இல்லை. ஆத்மா இருப்பதே தெரியாது. உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஆத்மா இருக்கிறது அல்லது ஆத்மா இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.
தேவை என்றால், தங்களுடைய மெயில் address கொடுத்தால், தெய்வத்தின் குரல், ஒரு விஞ்ஞானப் பார்வையில் (சுஜாதா) சைவ சித்தாந்தம் வினா விடை ( ஆறுமுக நாவலர்) புத்தகங்களை (PDF) அனுப்பி வைக்கிறேன். இன்னும் கொஞ்சம் குழம்பலாம்.
--
Jayakumar
--
P.S
You can also download these books from Internet with the help of GOOGLE andavar.
ஐயா, இப்பவே என்னை அரைப் பைத்தியம் என்றுதான் என் வீட்டினர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை முழுப் பைத்தியமாக்க யோசனை சொல்லுகிறீர்கள். வேண்டாம், நான் அரைப் பைத்தியமாகவே இன்னும் கொஞ்ச காலம் இருந்து விட்டு, யமலோகம் போய், நசிகேதன் மாதிரி யமனிடமிருந்தே விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.
நீக்குமுந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ஒரு சுட்டி கொடுத்திருந்தேனே. அதைப் படித்தீர்களா.அதனால் ஆத்மா உயிர் போன்றகேள்விகள் எழுகிறதா.
பதிலளிநீக்குமார்க்குகள் தரத்தை நிர்ணயிப்பதாக நான் நினைக்கவில்லை.
படித்தேன். உங்களிடம் ஒரு மாதம் குருகுல வாசம் செய்யவேண்டும்.
நீக்குநாளை வருகிறேன் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 5
ஒன்று மாதிரிதான் தெரிகிறது. ஆன்மாவும் ஆத்மாவும் ஒண்ணுதானா? நசிகேதனைக் கேட்போமா?
பதிலளிநீக்குஅதுதான் நல்ல வழியாகத் தெரிகிறது. நசிகேதன் இப்போது எங்கு இருப்பார்? கடைசியாகக் கேள்விப்பட்டபோது யமனிடம் பாடம் கேட்டுக்கொண்டு இருந்தார். இன்னுமா பாடம் முடியாமலிருக்கும்? மேல போன பிறகு எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து விடுகிறேன்.
நீக்குமார்க் குறைவாக இருந்தால் என்ன? பேரன் ப்ளஸ் டூவில் பாஸ். ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆன்மாவும் உயிரும் ஒன்றா வேறா என்ற தத்துவ ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. எதார்த்த உலகில் இருப்பதே இப்போதைக்கு உத்தமம். தமிழ்நாட்டில் தலைப்புகளுக்காக பஞ்சம். தொடருங்கள்.
(நான் காலையிலேயே அனுப்பிய இந்த கருத்துரை ஏனோ பதிவாகவில்லை; எனவே மீண்டும் பதிந்துள்ளேன்)
தங்கள் பேரன் +2 பாஸ் செய்துள்ளதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்கள் பேரனை எல்லோரும் சேர்ந்து வருத்தப்பட வைக்காதீர்கள். நன்றாகப் பாராட்டுங்கள். அவர் விரும்பும் துறையை ஏற்று மேற்படிப்பு படிக்கட்டும்.
பதிலளிநீக்குஒருவனின் தலைவிதியை நிர்ணயிப்பது இந்த + 2 மார்க்குகள் மட்டுமே கிடையாது.
ஆயுள், ஆரோக்யம், அதிர்ஷ்டம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சல், ஏட்டுக்கல்விக்கு அப்பாற்பட்ட இயற்கையான புத்திசாலித்தனம் முதலியன மட்டுமே, ஒருவனை வாழ்க்கையில் ஒளிர வைக்கின்றது.
எனக்குத்தெரிந்தவரை உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு. உயிருக்கு என்றுமே அழிவுண்டு. ஆன்மாவுக்கு அழிவே கிடையாது.
ஒரு பிறவியில் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து சுகப்படும் அல்லது கஷ்டப்படும்.
மூளைச்சாவு அடைந்த ஒருவரின் (உயிர்) இருதயம் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் இன்று மருத்துவர்களால் பிற தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக மாற்றம் செய்யப்படுகிறது என்பதையும், இங்கு நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது.
தன் ஆன்மாவையும், கடவுளையும் சாமான்யர்களால் ஒருநாளும் அறியவே முடியாது.
மிக்க நன்றி, வைகோ.
நீக்குமதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! குறைந்த மதிப்பெண் என்று வருந்த வேண்டாம். பேரனுக்கு பிடித்த கல்வியையை படிக்க விடுங்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க்தி
பதிலளிநீக்குஉங்க பதிவை வச்சே உங்களை ...க்க வைக்கிறேன் பாருங்க ...!
என்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க்தி
பதிலளிநீக்குஉங்க பதிவை வச்சே உங்களை சி(ரி)க்க வைக்கிறேன் பாருங்க ...!
'ஆத்தா' வை
அறிந்து கொள்ள பலருக்கும் விருப்பமில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த மனிதப் பிறவி எடுத்ததே தன்னை அறிவதற்காகத்தான் என்று ஆன்மீகத் தலைவர்கள் காலம் காலமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.
தன்னை அறிவது என்பது
'ஆத்தா'வை
அறிவதுதான். அதை மிகவும் எளிதாக சிறு குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் கொடுத்தால் கொள்வாரில்லை. போகட்டும்,
'ஆத்தா'வின் தலைவிதி இன்றைய நாளில் அவ்வளவுதான்.
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். இந்த 'ஆத்தா' எனப்படுவதும் உயிர் எனப்படுவதும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா? வேலை இருப்பவர்கள் இந்தக் கேள்வியை விட்டு விட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கவும். மற்றவர்கள் மட்டும் இதை யோசித்து மூளையைக் குழப்பவும்.
இதைப் பற்றிய ஒரு வித்தியாசமான விரிவுரையை கீழேக் காணலாம்
பதிலளிநீக்குhttp://suvanappiriyan.blogspot.com/2015/02/1.html.