என்னால் எந்த விஷயத்தையும் விரிவாக எழுத முடிவதில்லை. இளம் வயதிலிருந்தே அப்படி பழகிவிட்டது. இப்போது, இந்த வயதுக்கு மேல் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
கடவுள் இல்லை என்று மறுப்போரும் கடவுளை இது வரையில் நான் கண்டதேயில்லை என்போருக்கும் ஒரு நற்செய்தியாக இரண்டு நாள் முன்பாக கடவுள் காட்சியளித்தார்.அதைக் கண்டவர்கள் புண்ணியாத்மாக்கள். காணாதவர்கள் பாபிகள்.
நான் கண்டேன். தத்ரூபமாகக் கண்டேன். எனக்கு கடவுள் பணரூபத்தில் காட்சி அருளினார். இனி என் பூஜை அலமாரியில் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்துக் கும்பிடப்போகிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர், பொய்க் கேஸ்களில் இருந்து விடுதலை ஆனதையும் இந்தப் பதிவையும் சம்பந்தப்படுத்தி நினைப்பவர்களும் சொல்பவர்களும் எழுதுபவர்களும் நேராக நரகத்திற்குப் போவார்கள். இது உறுதி.
பதிலளிநீக்குகாசேதான் கடவுளடா
பதிலளிநீக்குஅந்தக் கடவுளுக்கும்
அது தெரியுமடா.
--
Jayakumar
இல்லை! நான் நினைக்கவில்லை!!
பதிலளிநீக்கு:)))))
//மாண்புமிகு தமிழக முதலமைச்சர், பொய்க் கேஸ்களில் இருந்து விடுதலை ஆனதையும் இந்தப் பதிவையும் சம்பந்தப்படுத்தி நினைப்பவர்களும் சொல்பவர்களும் எழுதுபவர்களும் நேராக நரகத்திற்குப் போவார்கள். இது உறுதி.//
பதிலளிநீக்குஐயா பதிவை படித்ததும் ‘இதில் உள் குத்து ஏதும் இல்லையே?’ என எழுத இருந்தேன். ஆனால் தங்களின் மேலே குறிப்பிட்ட பின் குறிப்பைப் பார்த்ததும் நரகத்திற்கு போக விரும்பவில்லை. ஒரு சிறு திருத்தம். பதிவின் ஆரம்பம் தமிழக முன்னாள் முதலமைச்சர் என்றல்லவா இருக்கவேண்டும்.
எங்களுக்கெல்லாம் அவங்க எப்பவும் முதலமைச்சர்தான். முன்னாள், இந்நாள் என்றெல்லாம் எங்களுக்கு வித்தியாசம் கிடையாது.
நீக்குஹா... ஹா... சரி தான்...
பதிலளிநீக்குதாங்கள் காட்டியுள்ளவை மொத்தம் ஏழு ரூபாய் நோட்டுக்கள். அவற்றின் மொத்தத் தொகை ரூ. 1685 எனத் தெரிகிறது. ஒவ்வொன்றிலும் ரூபாய் நோட்டுக்களிலும் இருக்க வேண்டிய வரிசை எண்களுக்கு பதிலாக 000 000000 ஒன்பது பூஜ்யங்கள் காட்டப்பட்டுள்ளன. நான் அதன் மொத்த மதிப்பான 1685 உடன் இந்த ஒன்பது பூஜ்யங்களையும் சேர்த்து கடவுளாக நினைத்து மகிழ்ந்து வணங்கினேன்.
பதிலளிநீக்குஅதாவது எனக்குக் காட்சியளித்த கடவுள், எனக்கு மட்டும், கீழ்க்கண்டவாறு விஸ்வரூப தரிஸனம் தந்தார்.
168500,00,00,000
{அதாவது ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்து எட்டாயிரத்து ஐநூறு கோடியாக காட்சிதந்து அருளினார்}
நான் சுவர்க்கத்திற்கு மட்டுமே செல்வேன் என்பது எனக்கு நன்கு உறுதியாகி விட்டது.
எனக்கு இவ்வாறாக ஸ்பெஷல் தரிஸனம் செய்து மகிழ்வித்ததற்கு காரணமாக தங்களின் இந்தப்பதிவுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் ஐயா.
பின்னிட்டீங்க சார். அவனவன் பத்து பக்கத்துக்கு எழுதிப் புலம்பர ஒரு விஷயத்தை சும்மா பத்து பர்சண்டுக்குள்ளேயே எழுதி பச்சக்குன்னு முடிச்சிட்டீங்களே.
பதிலளிநீக்குபிரமாதம்.
இது என்ன... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி.
பதிலளிநீக்குகாசேதான் கடவுளடா
பதிலளிநீக்குஅருமை ஐயா
நன்றி
தம +1
தனலட்சுமினு சொல்லுங்க ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
நல்ல முடிவு. இப்போது காலம் இப்பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. மிக சுருக்கமாக, அதே சமயம் மனதில் பதியும் அளவு ஒருஅருமையான செய்தி.
பதிலளிநீக்குஹ ஹா ஹா ..
பதிலளிநீக்குதம +
ஹஹ்ஹஹஹஹ்ஹஹ்...... காசுதான் ஐயா இப்போது கடவுள்....ஹூம் எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை!
பதிலளிநீக்கு