நான் காலையில் தினமும் சுமார் மூன்று மணி வாக்கில் எழுந்து விடுவேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்ற முது மொழிக்கேற்ப கம்பஃயூட்டர் படிப்பில் உட்கார்ந்து விடுவேன். அப்போது சொஞ்ச நஞ்சம் இருக்கும் தூக்கக் கலக்கம் போக நானே ஒரு காப்பி போட்டுக்குடிப்பேன். அதுதான் கம்ப்யூட்டர் காப்பி.
தேவைப்படும் பொருட்கள்.
1. இரண்டு ஸ்பூன் நெஸ்லெ பால் பவுடர்
2. ஒரு ஸ்பூன் புரூ இன்ஸ்டன்ட் காப்பித்தூள்.
3. அரை ஸ்பூன் சர்க்கரை.
4. ஒரு டம்ளர் தண்ணீர்.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு பொருத்தின கேஸ் அடுப்பின் மீது வைக்கவும். தண்ணீர் சிறிது சூடானதும் இரண்டு ஸ்பூன் பால் பவுடரை அதில் பரவலாகப் போடவும்.
ஒரு ஸ்பூன் புரூ காப்பி பவுடரை டம்ளரில் போடவும். இப்போது பால் பவுடர் நன்கு கரைந்து பால் கொதிக்க ஆரம்பிக்கும். அதை எடுத்து காப்பித்தூள் போட்டிருக்கும் டம்ளரில் ஊற்றி இரண்டு தடவை ஆற்றவும்.
அவ்வளவுதான். கம்ப்யூட்டர் காப்பி தயார். மொத்தம் மூன்று நிமிடம் ஆகும்.
3 மணிக்கேவா...? அந்தக் காப்பியில் வந்த பதிவு தானா இது...?
பதிலளிநீக்கு//தண்ணீர் சிறிது சூடானதும் இரண்டு ஸ்பூன் பால் பவுடரை அதில் பரவலாகப் போடவும்.//
பதிலளிநீக்குபால் பவுடரை போட்டுவிட்டு ஸ்பூனால் நன்றாக கலக்கவேண்டும். இல்லாவிடில் பால் பவுடர் கெட்டிப்பட்டுவிடும்.
நெஸ்கேப் எவரிடே மில்க் பவுடர் சீக்கிரமாகக் கரைந்து விடுகிறது. கெட்டிப்படுவதில்லை. மற்ற பவுடர்கள் நீங்கள் சொல்கிற மாதிரி கெட்டிப் பட்டு விடுகிறது.
நீக்கு//அவ்வளவுதான். கம்ப்யூட்டர் காஃபி தயார்.//
பதிலளிநீக்குவெரிகுட்.
//மொத்தம் மூன்று நிமிடம் ஆகும். //
மூன்றே நிமிடம் என்பது காஃபி தயாரிக்கவா?
அல்லது
தயாரித்த காஃபியை ஆற்றி தொண்டை வழியே உள்ளே இறக்கவா ?
எப்படியிருப்பினும் ஓக்கே.
YOU ARE SO SMART THAT TOO AT 3 AM .... PREPARING COFFEE FOR YOURSELF. :)
பேரெழுச்சி மிக்க தங்களை நினைக்கப் பொறாமையாக உள்ளது ஐயா.
பாராட்டுகள். வாழ்த்துகள். மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.
தயாரிப்பதற்கு மட்டும்தான் மூன்று நிமிடம். அதை தொண்டை வழியே இறக்க பத்து நிமிடம் ஆகும்.
நீக்குநீங்கள் தயாரிக்கும் காஃபி உங்களுக்கு மட்டும்தானா.?
பதிலளிநீக்குஅந்தேரத்தில் என் வீட்டில் வேறு யாரும் எழுந்து இருக்க மாட்டார்கள்.
நீக்குஎனக்கென்னவோ இன்ஸ்டன்ட் காஃபி பிடிப்பதில்லை!
பதிலளிநீக்கு:))))))
எனக்கும்தான். ஆனால் அந்நேரத்தில் எனக்கு வேறு வழியில்லையே?
நீக்குஅடடே அதிகாலை காஃபி.
பதிலளிநீக்குஅதிகாலை காபி! நல்லது..... :)
பதிலளிநீக்கு