நமது பேங்குகள் நமக்குச் செய்து தந்திருக்கிற பல வசதிகளுக்கு நாம் அவர்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறோம். நாம் போடும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து நாம் கேட்கும்போது வட்டி சேர்த்துக்கொடுப்பது சாதாரண சேவையா என்ன?
ஆனால் இதைவிட சூப்பர் சேவை ஒன்று அவர்கள் செய்து வருவது பல பேருக்குத் தெரியாமலிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். பத்து வருடத்திற்கு முன்பு இந்த சேவை எனக்குத் தெரிந்திருந்தால் நான் இப்போது ஸ்விஸ் பேங்கில் கணக்கு துவங்கி இருப்பேன். எனக்கு அதிர்ஷ்டமில்லை.
ஏடிஎம் மிஷின்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதில் நமது ஏடிஎம் அட்டையை சொருகினால் அந்த மிஷின் நம்முடைய பேங்கிற்குப் போய் (அந்த பேங்க் டிம்பக்டூவில் இருந்தாலும் சரி) நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்து நாம் கேட்கும் தொகை இருந்தால் அந்தப் பணத்தை நமக்குக் கொடுக்கிறது. இது எப்பேர்ப்பட்ட குறளி வித்தை என்று நமக்குத் தோன்றுகிறது.
அப்போ, பேங்கில் இருக்கும் அதிகாரிகளுக்கு அந்த ஏடிஎம் மிஷினில் ஒரு சமயத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாம் அல்லவா? அப்படியானால் மாதத்திற்கு ஒரு முறை அந்த மிஷினில் எவ்வளவு பணம் வைத்தார்கள், எவ்வளவு பணம் வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டது, இப்போது மீதி எவ்வளவு பணம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு விரல் சுட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
அப்படி இருக்கும்போது இன்றைய செய்தித் தாட்களில் ஏடிஎம் மிஷினில் வைத்த பணம் காணாமல் போயிற்று என்று ஒரு செய்தி பிரசுரமாயிற்று. இந்த மிஷின்களில் பணம் வைக்க ஒரு தனியார் நிறுவனத்தை இந்த பேங்குகள் நியமித்திருக்கின்றன. அதில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் ஒருவரே அதிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை எடுத்திருக்கிறார். இது நான்கு வருடங்களாக நடந்து வருகிறதென்று செய்தித்தாள்களில் போட்டிருக்கிறது.
அப்படியானால் நான்கு வருடங்களாக இந்த ஏடிஎம் மிஷின்களின் கணக்கு வழக்குகளை பேங்கில் இருந்து யாரும் சரி பார்க்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெரிந்திருந்தால் நானும் இந்த பணம் வைக்கும் தனியார் கம்பெனியில் சேர்ந்து, எப்படியாவது சூபர்வைசராகி, ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் எடுத்து ஸ்விஸ் பேங்க்கில் கணக்கு ஆரம்பித்திருப்பேன்.
எனக்கு அதிர்ஷ்டமில்லை.
ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன கணக்கோ, என்ன வழக்கோ?
பதிலளிநீக்குநல்ல நகைசுவை.
பதிலளிநீக்குஎங்க அக்கௌன்ட் ஆரம்பிசாலும்
கம்பி எண்ணும் கணக்கு சரியா இருக்கும்.
ஏடிஎம்மிற்கும் வங்கிக்கும் இடையேயான உறவு என்பதானது மிகவும் தொலைவு. தவிரவும் வாடிக்கையாளர்களின் நிலையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதுதான் (?)
பதிலளிநீக்குஇதுபோன்ற குறுக்கு வழிக்கெல்லாம் போகாமல் ஆண்டவன் புண்ணியத்தில், நல்ல வேளையாக தாங்கள் தப்பிப் பிழைத்தீர்கள்.
பதிலளிநீக்குநீங்கள் அவ்வாறு போய் ஸ்விஸ் வங்கியில் கணக்குத் துவங்கியிருந்தால் என் போட்டியில் கலந்துகொள்ளாமல் அல்லவா இருந்திருப்பீர்கள். நல்லகாலம் நானும் என் போட்டியும் பிழைத்தோம். :)
எல்லா வேலைகளையும் மிகச்சுலபமாக பிற பிரைவேட் ஏஜன்ஸிகளிடம் OFF LOAD செய்வதால், இதுபோன்ற பிரச்சனைகளை, சில வங்கிகள், சில நேரங்களில், சந்திக்கக்கூடும் என்பதில் வியப்பேதும் இல்லை.
ஆனால் எதற்குமே அவ்வப்போது ஒரு PERIODICAL CHECK UP - SURPRISE CHECK UP இருத்தல் மிகவும் அவசியம். அதுவும் பணவிஷயத்தில், யாரையும் யாரும், எப்போதுமே நம்பவே கூடாது. பணம் பத்தும் செய்யும். மிகவும் உஷாராகவே இருக்க வேண்டும்.
அதானே இது நம்பும்படியாக இல்லையே இவர்கள் சொல்வது.
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
கறுப்புப் பணத்தையும் இப்ப மீட்கிறார்களாம்.
பதிலளிநீக்குதப்பிச்சீங்கஜி!
Even confiscated Gold( bullion/jewellery )- in the Excise Dept is reported lost (stolen ) ! it has been going on for many years and- how many tonnes of gold, will not come to light, till sharing of the loot is settled...Now the banks are also planning to open new Deposit Accounts , where customers can deposit Gold ( instead of currency )and earn interest therein ...now think about the possibilities ...
பதிலளிநீக்குMawley.
கூட்டுக்களவாணிகளோ என்னமோ!
பதிலளிநீக்குஅப்படித்தான் இருக்க வேண்டும்.
நீக்குசில வங்கிகள் தானியங்கி பணம் வழங்கியில் (ATM) பணத்தை நிரப்பும் பணியை வெளி ஆட்களிடம் ஒப்படைப்பதுண்டு. அப்படி ஒப்படைக்கப்பட்ட நிறுவனத்தின் ஒரு ஊழியர் செய்த திருட்டை, அது எப்படி நடந்தது என்று விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது வங்கியில் உள்ளோரையும் சேர்த்து ‘கூட்டுக்களவாணிகள்’ என்று சொல்வது சரியாகப்படவில்லை.
நீக்கு
பதிலளிநீக்குஅதிகமாகத் திருடினால் தண்டனை கிடையாது என்று தங்களுக்குத் தெரியாதா?
இந்த செய்தியையும் பாருங்கள். அபராதம்தான். தண்டனை கிடையாது. அபராதமும் வங்கிக் கணக்கில்தான் வரும். அதாவது பங்குதாரர்களின் கணக்கில்.
http://www.reuters.com/article/2015/05/19/us-banks-forex-settlement-idUSKBN0O42PJ20150519
அடடா...! வாய்ப்பு போய் விட்டதே ஐயா...!
பதிலளிநீக்குஅதெப்படி பேங்க்காரர்களுக்குத் தெரியாமல் போகும்? அப்போ அவர்களுக்கும் இதில் பங்கு உண்டோ? அப்படித்தான் இருக்கும்.....
பதிலளிநீக்கு