புதன், 10 ஜூன், 2015

அஜினோ மோட்டோவும் மேக்கி நூடுல்ஸ்ஸும்

                                     
                                      Image result for maggi noodles images

இன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த "பிபிஎம்" என்றால் என்ன என்பதாகும்.

ppm என்பது Parts per Million என்பதின் சுருக்கம். அதாவது பத்து லட்சம் கிராம் பொருளில் ஒரு கிராம் வேறு ஒரு பொருள் இருப்பதை இந்த அளவினால் குறிப்பிடுவார்கள். இது மிக மிகக் குறைந்த அளவில் அந்தப் பொருள் இருக்கிறது என்று புரிவதற்கான அளவு.

அது எப்படி இவ்வளவு குறைவாக இருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அப்படித் தோன்றவில்லை என்றால் இப்போது தோன்ற வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்காகத்தான் பல ஊர்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து
"National Analytical Laboratory" என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி, அவைகளை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியை விட்டுத் திறக்க வைத்து, பல விஞ்ஞானிகள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பல பல நூதன பகுப்பறியும் கருவிகள் இங்கே இருக்கும்.

இந்தக் கருவிகளில்தான் இந்த மாதிரியான நுண்ணிய அளவில் இருக்கும் பொருளை பகுத்தறிவார்கள். இந்த சோதனைச்சாலைகளுக்கு ஒரு டைரக்டர், பல உதவி டைரக்டர்கள், கணக்கில்லாத ஆரய்ச்சியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கும். இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கும் மேக்கி நூடுல்ஸ் மாதிரி சமாச்சாரங்களுக்கான ஆணி வேர் இத்தகைய ஆராய்ச்சி சாலைகளில்தான் உதயமாகும்.

இந்த சோதனைச் சாலைகள் பற்றிய இத்தகைய செய்திகள் எல்லாம் சும்மா உங்கள் மாதிரி பொது மக்களை மயக்குவதற்காக சொல்லப்படும் சமாச்சாரங்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களைப் போன்ற இந்த மாதிரி சோதனைச்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் நாங்கள் உண்மையை வெளியே சொல்ல மாட்டோம் ஏனென்றால் எவனாவது தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வானா?

இப்போது என்ன நடந்திருக்கும் என்றால் இந்த மேக்கிக்காரன் யாரையோ உசுப்பி விட்டிருக்கவேண்டும். என்ன உசுப்பல்? வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும்.

அதில் சம்பந்தப்பட்டவன் நாயைச் "சூ" காட்டுகிற மாதிரி தன் கீழ் இருக்கும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு ஜாடை காண்பித்திருப்பான்.  நம் ஆட்களுக்குச் சொல்ல வேண்டுமா?  "எள் என்றால் எண்ணையாக" நிற்பவர்களல்லவா? உடனே அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு இந்த சோதனைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யச்சொல்லி இருப்பார்கள்.

அந்தச் சோதனைச்சாலையில் இருக்கும் டைரக்டரும் மற்றவர்களும் இந்த "சோதனைச்சாலைக்கு வந்த சோதனையைப் பார்" என்று வருத்தப்பட்டு, சோதனை இயந்திரங்களை தூசி தட்டி, துடைத்து இந்த சேம்பிளை பகுப்பாய்வு செய்து மேல் அதிகாரிகள் விரும்பும் முடிவை விரும்பியபடி தயார் செய்து அறிக்கை கொடுத்து விடுவார்கள்.

இந்த முடிவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த விவரங்களைப் பாருங்கள். காரீயம் 2.5 பிபிஎம் க்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐயா, துல்லியமாக சோதனை செய்திருந்தால் எவ்வளவு காரீயம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு என்று சொல்லலாம் இல்லையா? ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது. அவ்வளவுதான். மேட்டர் முடிந்து விட்டது. அப்பறம் நடப்பதெல்லாம் சட்டக்காவலர்கள் செய்ய வேண்டிய வேலை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இதேபோல்தான் எம்எஸ்ஜி விவகாரமும். சட்டப்படி இருக்கவேண்டியதை விட மிக அதிகமாக இருக்கிறது.அவ்வளவுதான். எவ்வளவு என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது எங்கள் வேலையல்ல. உண்மையான காரணத்தை இதற்குள் நீங்கள் யூகித்திராவிடில் நான் வருந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஓடையில் தண்ணீர் குடித்த கதை தெரியுமல்லவா? அதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

சட்டக்காவலர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கி விற்ற கடைக்கார ர்கள் எல்லாம் மேக்கி பேக்கட்களை கடைக்குப் பின்னால் கொண்டு போய் விற்கிறார்கள். ஆபீசர்கள் வந்து கேட்டால் "மேக்கியா, அப்படீன்னா என்ன சார் ? அப்படீன்னு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

பின் சேர்க்கை. உங்கள் கவனத்திற்காக மட்டும்.

MSG எனப்படும்  குளுடாமிக் ஆசிட் பற்றி சில விபரங்கள்.

தினமும் ஒருவரது உணவில் 40 முதல் 50 கிராம் வரையிலான புரதமானது உள்ளெடுக்கப்படவேண்டும். புரதங்கள் பல்வேறு அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 9அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. இவை தவிர்ந்த ஏனையவை உடலால் தொகுக்கப்படும் பால் இறைச்சி முட்டை ஆகிய விலங்குப் புரதங்கள் மிகவும் சிறந்த புரதங்களை கொண்டவை. இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படும். குளுடாமிக் ஏசிட் என்பதுவும் இத்தகைய அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று.

குளுடாமிக் ஏசிட்டின் இராசயன அமைப்பு.


C5H9NO4                         

Image result for glutamic acid                 

அஜினோ மோட்டோ அல்லது மோனோ சோடியம் குளுடாமேட்/எம்எஸ்ஜி
- இராசயன அமைப்பு


C5H8NO4Na           



Image result for msg chemical structure

இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - எம்எஸ்ஜி யில் ஒரு ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக ஒரு சோடியம் அணு சேர்க்கப்பட்டிருக்கிறது                                


மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

MSG—or monosodium glutamate—is a flavor enhancer used in savory foods, especially Asian foods. It contains sodium, but only a third of the amount that you’d get from the same amount of salt.
MSG also includes glutamic acid (aka glutamate), an amino acid that’s found naturally in foods like tomatoes, mushrooms and soybeans and is the source of our fifth taste—umami.
In fact, we eat about 13 grams of natural glutamate a day on average, compared to only around half a gram from MSG.
Some people say they have an MSG allergy—or that MSG gives them headaches, worsens their asthma, causes chest pain or palpitations, or causes mild mood changes or other symptoms, all of which are collectively referred to as Chinese Restaurant Syndrome (because MSG is commonly found in Asian-style meals).
Contrary to popular belief, decades of research fails to support the link between MSG and these reported side effects.
Modest amount of MSG found in the typical Western diet is not linked to symptoms of Chinese Restaurant Syndrome, according to scientific literature from the 1970s to today.
No adverse symptoms were observed when people consumed MSG as part of a meal—even at high doses (up to 147 grams/day), according to a review of studies, published in 2000 in the Journal of Nutrition.
There’s one caveat though: eating MSG may lead to classic symptoms of Chinese Restaurant Syndrome when it is consumed solo and on an empty stomach.
In a 2013 study, researchers gave healthy adults about 10 grams of MSG on average (a fairly large dose) without any food.
Almost all of them experienced headaches, as well as short-term increases in blood pressure and heart rate.
But because MSG is generally used in small amounts as a flavoring (like salt), the likelihood that you’d eat it by itself is slim.
MSG might just be the most love-to-be-hated additive of the day, but the science fails to supports its “bad guy” reputation.

News:
Delhi health minister Satyendar Jain said, "Last week, we lifted 13 samples of Maggi for testing following media reports of these being unsafe for consumption. We found the masala samples, tastemakers of at least 10 such packets, had lead content beyond the prescribed limit of 2.50pm." Jain also said five samples of masala were found containing monosodium glutamate (MSG) without proper label declaration.

20 கருத்துகள்:

  1. நானும் இந்த விவகாரத்தை இப்படித்தான் கணித்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் கொக்ககோலா போன்ற பானங்கள் பட்ட பாடு ஞாபகம் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  2. ஐயா தாங்கள் கூறுவதுபோல வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும். - இதுதான் நடந்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இப்படி பட்னு உண்மையைப்போட்டு உடைச்சதுக்கு உங்களுக்கு ஒரு (சின்ன) கோவில் கட்டிக் கும்பிடணும்.

    இதுவரை சாப்பிட்ட மேகி என்ன பாடு படுத்துமோன்னு அவனவன் வயித்துலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கான்!

    கவனிச்சுருவாங்க, அதி விரைவில் என்பது........... ஹிஹி:-)

    பதிலளிநீக்கு
  4. உண்மை நிலவரம் இது தானா...? நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்...

    பதிலளிநீக்கு

  5. //இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.//

    வடிவேலு பாணியோ?

    // ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? //
    கடைசியில் இரகசியத்தை வெளியிட்டுவிட்டீர்களே!
    குளுடாமிக் ஆசிட் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அது ஒன்னும் இல்லை. நமது பிரதமர் மேக் இன் இந்தியா என்று சொன்னதை ஆராய்ச்சிக்காரன் மேகி இன் இந்தியா என்று எடுத்துக்கொண்டான்.

    33 வருசமாக இந்த மேகி நூடில்ஸ் விற்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டு யாரும் ஆசுபத்திரிக்கு போனதாக செய்தி இல்லை.இப்போது மட்டும் இது தீங்கு என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்.

    சிலர் சொல்வது போன்று இதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் சமாசாரங்களையும் சிகரட்டு பீடி சமாச்சாரங்களையும் ஏன் தடை செய்யவில்லை?
    கொஞ்ச நாள் முன்பு டாப் ரெமன் நூடில்ஸ் பற்றியும் சிறிய அளவில் செய்தி வந்தது.

    கடையில் விற்கும் மிளகாய பொடி சாம்பார் பொடி ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளி வரும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது 100 சதம் உண்மை. எல்லாவற்றையும் பதிவில் எழுத முடியவில்லை. நன்றி.

      நீக்கு
  7. முனைவர் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் என்ன, மாகி சாப்பிடலாமென்கிறீர்களா.?

    பதிலளிநீக்கு
  8. ஒருமுறை திரு. தாமு, CHEF, அவர்களை நேருக்கு நேர் ஒருவர் கேட்டார், 'அஜினோமோட்டோ உடலுக்கு நல்லது இல்லையாமே?' என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே," அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது வரை ஒன்றுமாக வில்லை' என்று சொன்னார்.

    ஆனாலும் சார்.. சில விஷயங்கள் ஸ்லோ பாய்சனைப் போல செயல் படாது என நாம் கியாரண்டி கொடுக்க முடியாது. இந்த மாதிரி விஷயங்களில் உயிர் போனால் பரவாயில்லை ஆனால் கேன்சர், அல்சீமியர் என்று எதுவேனும் வந்துவிட்டால் தொல்லை.

    மக்களுக்கு தெரிய வேண்டியவைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    GOD BLESS YOU

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள தகவல்கள் ஐயா
    மனசை ஆற்றிக்கொள்வோம் வேறென்ன செய்வது...
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  10. நம் ஊரில் எல்லாமே அரசியல் ஊழல்தானே ஐயா! மட்டுமல்ல குறிப்பிட்ட ஒரு ப்ராண்ட் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவை 12 ஆம் வகுப்பு மாணவர்களால் ஏதோ ஒரு ப்ரிசோதனைக்கு வேண்டிச் பரிசோதனைச் செய்யப்பட்டு அதில் ஏதோ லெட் இருப்பதாகச்க் சொல்லப்பட்டு இப்படி செய்தி பரவியது 7,8 வருடங்களுக்கு முன்னால்....அவ்வப்போது இப்படி ஏதேனும் ஒரு பொருள் பேசப்படும். பின்னர் அது அடங்கிவிடும். மக்களும் அதை மறந்துவிடுவார்கள். அதைப் போலத்தான் எம் எஸ் ஜி நல்லதல்ல என்று ஒருபுறம் முழங்கப்பட்டாலும், ஒவ்வொரு சானலிலும் சமையல் செய்து மக்களை எல்லாம் சாப்பிட அழைக்கும், வெயிட் போட வைக்கும் வல்லுனர்கள் (டயட் பற்றிப் பேசும் நபர்களும் வெயிட்டாகத்தான் இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது!) இந்த எம் எஸ் ஜி யால் ஒன்றுமில்லை...என்றும் சொல்லி வருவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இப்படித்தான் ஒன்றை இப்போது சாப்பிடுங்கள் என்பார்கள் அப்புறம் சாப்பிடக் கூடாது என்று பல இரசாயன விளக்கங்கள் கொடுத்து நோய் சொல்லிப் பயமுறுத்துவார்கள்! நாட்டுல என்னதான் நடக்குதோ....விளங்கலை!

    பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  11. ”பழைய மொந்தையில் புதிய கள்” – என்று ஒரு பழமொழி உண்டு. ’MAGGI’ பிரியர்கள் அனைவரும் ’NEW MAGGI’ யை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  12. அறியாதனவும் அதிலுள்ள
    சூட்சுமமும் அறிந்தோம்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமை நைனா
    உண்மையாவே தவிர்க்கப்படவேண்டிய, தடைசெய்யப்படவேண்டிய பல விஷயங்கள் நாட்டில் இலவசமா இல்லையில்லை விலையில்லாம கிடைக்குது. உதாரணம் புகை. ஒருத்தர் தான் கெடுவது போதாதுன்னு கூட இருக்கிற எல்லாருக்கும் தாராளமா தர்ரார் (அவரை என்ன செஞ்சாங்க.ஆமா பொது எடத்துல புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் வந்துச்சே என்ன ஆச்சு) இதை தடை செய்ய சொன்னால் உடனே பீடித்தொழிலாளி வாழ்க்கை என்ன ஆவது என்று (ஆ ஊன்னா கூட்டம் கூட்டமா ) கிளம்பிடுறாங்க.

    பதிலளிநீக்கு
  14. வாக்களிக்க வாய்ப்பிருந்தும்
    வாக்களிக்கத்தவறியவர்கள்.
    வாக்குரிமையை
    இழக்க கடவது.

    பதிலளிநீக்கு
  15. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே, அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம்.

    அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக 1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம் உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.

    இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது.

    பதிலளிநீக்கு