வெள்ளி, 19 ஜூன், 2015

நுண் கனிமங்களை பகுப்பாய்வு செய்வது எப்படி?

                                         Image result for chemistry lab equipment

இந்தப் பரந்து விரிந்த உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் கனிமங்களாலும் (Elements) அவற்றின் தனிமங்களாலும் (Atoms) உருவாக்கப்பட்டவை என்பதை உங்கள் வேதியல் பாடத்தில் படித்திருப்பீர்கள். இவைகளைப் பகுப்பாய்வு செய்வது வேதியலின் ஒரு முக்கியமான செயல்முறைப் பயிற்சி.

பிற்காலத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஒரு ஆய்வகத்தில் பணி புரிய நேர்ந்தால் இந்த செயல்முறைப் பயிற்சி அதிகம் பயன்படும். ஆனாலும் படிக்கும்போது கற்றுக்கொள்ளும் பகுப்பாய்வு முறைகளுக்கும்  ஆய்வகத்தில் நடைமுறையில் உள்ள செயல் முறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கும்.

ஒரு நவீன ஆய்வகத்தில் பல நவீன உபகரணங்கள் இருக்கும். அவை பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளவைகளாக இருக்கும். அவை அடிப்படையில் பகுப்பாய்வுக் கருவிகள்தான் என்றாலும் மிக நுண்ணிய அளவில் இருக்கும் தனிமங்களைக் கூட அளக்கும் சக்தி பெற்றவை. இப்போது செய்தித்தாள்களில் பரவலாகப் பேசப்படும் "மேகி" விவகாரத்தில் சொல்லப்படும் கனிமங்களின் அளவு இத்தகைய கருவிகளின் மூலமாகத்தான் பகுப்பாய்வு செய்யப் பட்டிருக்கும்.

சுருக்கமாக இந்த பகுப்பாய்வுக் கருவிகளின் தத்துவத்தைச் சொல்கிறேன். கனிமங்களின் அணுக்களுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. சில அலைநீளம் கொண்ட ஒளியை இவை உள் வாங்கிக்கொள்ளும். இந்த உள்வாங்கிக்கொள்ளும் அலை நீளம் ஒவ்வொரு கனிமத்திற்கும் வேறுபடும்.

இந்த வேறுபாட்டை வைத்துத்தான் ஒவ்வொரு கனிமத்தின் அளவையும் பரிசோதித்து கண்டுபிடிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை துல்லியமாக அளக்க பல்வேறு விலை உயர்ந்த சாதனங்கள் உள்ளன. இத்தகைய சாதனங்கள் இருக்கும் பரிசோதனைச் சாலையில்தான் இந்த கனிம அளவுகளைக் கண்டுபிடக்க முடியும்.

இப்படி கனிமங்களின் நுண்ணிய அளவைக் கண்டுபிடிக்க உதவும் இந்தக் கருவிகளின் செயல்பாடு எவ்வளவு நம்பகத்தன்மையுடன் இருக்கும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சட்டென்று பதில் சொல்ல முடியாது.

கருவிகளின் தரம், அவைகளைப் பராமரிக்கும் செயல்கள், அதை உபயோகிக்கப் பயிற்சி எடுத்த நபர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு, சோதனை திரவங்களின் தரம் ஆகியவை இந்தக் கருவியின் பகுத்தாய்வுத் திறனை நிர்ணயிக்கும். முக்கியமாக ஒவ்வொரு தரம் இந்தக் கருவியை உபயோகிக்கும்போதும் அதன் செயல் திறனை பரிசோதிக்கவேண்டும்.

இப்படி கருவிகள் பராமரிக்கப்படும் பரிசோதனைச் சாலையில் கண்டு பிடிக்கப்படும் முடிவுகளை மட்டுமே நம்பலாம். ஆகவே இத்தகைய பரிசோதனைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பரிசோதனைச்சலைகளில் பரீட்சித்து அந்த முடிவுகள் ஒத்துப் போகின்றனவா என்று பார்த்து பிறகுதான் ஒரு முடிவிற்கு வருவார்கள்.

"மேகி" விவகாரத்தில் இந்த பரிசோதனைகளை எப்படி செய்தார்கள் என்பதைப் பொருத்தே அதன் எதிர்காலம் இருக்கும்.

12 கருத்துகள்:

  1. பகுப்பாய்வு கருவிகளின் தரத்தை கண்டுபிடிக்க சில அளவீடுகள் (norms) வைத்திருப்பார்கள் அல்லவா...?

    + or -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு கருவிகளையும் ஒவ்வொரு கனிம reference material கொண்டு caliberate செய்த பின்னரே அதில் பரிசோதனையை செய்யத் தொடங்கவேண்டும். இதில் தான் நம்மாட்கள் ஜித்து வேலையைக் காட்டுவார்கள். caliberate செய்ய மாட்டார்கள் அல்லது வேறேதேனும் பொடி வைத்து ரிசல்டை பிரிண்ட் செய்து விடுவார்கள்.

      பொதுவாகவே இத்தகைய ஆய்வுக்கூடங்கள் NABL எனும் அக்ரிடிடேஷனுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அத்தகைய ஆய்வுக்கூடங்களிலிருந்து வரும் முடிவுகள்தான் தரமானதாக இருக்கும். ஆனால் இன்று அரசு ஆய்வுக்கூடங்களில் எத்துனை இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதென்பது கேள்விக்குறி.

      நீக்கு
  2. சரியான நேரத்தில் பயனுள்ள விவாதம். தங்கள் கருத்தை ஏற்கிறேன்.
    அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

    பதிலளிநீக்கு

  3. ஐயா! Elements ஐ தனிமங்கள் என்றும் Atoms ஐ அணுக்கள் என்றும் சொல்வதுண்டு.

    // இப்படி கருவிகள் பராமரிக்கப்படும் பரிசோதனைச் சாலையில் கண்டு பிடிக்கப்படும் முடிவுகளை மட்டுமே நம்பலாம். //

    நம் நாட்டில் இவ்வகைக் கருவிகள் சரியாக பரமரிக்கப்படுகின்றவா என்பதே தற்போதைய ஐயம். அதனால் நீங்கள் சொல்வதுபோல் இத்தகைய சோதனைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பரிசோதனைச் சாலைகளில் செய்து அந்த முடிவுகள் ஒத்துப் போகின்றனவா என்று பார்த்து பின்னர் முடிவுக்கு வருவதே நல்லது.

    பதிலளிநீக்கு
  4. ஐயா

    தவறான தலைப்பு
    .அது
    "யாரை நம்பி நான் பதிவிட்டேன் போங்கடா போங்க"
    என்று இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் " போனால் போகட்டும் போடா இந்த ரேங்கில் நிலையாய் நின்றவர் யாரடா?"
    என்று இருக்கவேண்டும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. ஐயா

    இந்த மேகி விவகாரத்தில் ரொம்ப அக்கறை காட்டுகிறீர்களே. மேகி கம்பெனி ஷேர் நிறைய வாங்கி இருக்கீங்களோ?

    அல்லது வீட்டுக்காரம்மா காலையில் நூடில்ஸ் கொடுப்பதை நிறுத்தி விட்டு பழைய சோறு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?

    இதெல்லாம் எழுதப்போகத்தான் ரேங்க் போவுது.

    பேசாமல் பழைய சோத்து மகிமை, ராகி முத்து அல்லது கேழ்வரகு உருண்டை எப்படி செய்வது என்று பதிவிடுங்கள். ரேங்க் வரும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள விவாதம் நம்மூரில் அதிலும் கோல்மால் நடக்கிறதே...
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  7. /சில அலைநீளம் கொண்ட ஒளியை இவை உள் வாங்கிக்கொள்ளும். இந்த உள்வாங்கிக்கொள்ளும் அலை நீளம் ஒவ்வொரு கனிமத்திற்கும் வேறுபடும்.

    /இந்த வேறுபாட்டை வைத்துத்தான் ஒவ்வொரு கனிமத்தின் அளவையும் பரிசோதித்து கண்டுபிடிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை துல்லியமாக அளக்க பல்வேறு விலை உயர்ந்த சாதனங்கள் உள்ளன/ ஸ்பெக்ட்ரோமீட்டர்....?

    பதிலளிநீக்கு
  8. பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம் சார்! நன்றி!

    பதிலளிநீக்கு