வாழ்வில் என்றும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்று சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சுகதுக்கங்களை சமமாகப் பாவிக்கவேண்டும் என்று அதில் சொல்லியிருந்தேன். அப்போதுதான் மனது அமைதியாக இருக்கும். அதுதான் ஆனந்தம் என்று சொல்லியிருந்தேன்.
அது எப்படி சுக துக்கங்களால் பாதிக்காமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். நல்ல கேள்விதான். பதில் சொல்வது கொஞ்சம் சிரமம்தான்.
ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். ஒருவனுடைய அருமை மனைவி இறந்து விட்டாள். அவள் புருஷன் "ஐயோ, நான் என் ஆசை மனைவியைப் பிரிந்து எப்படி வாழ்வேன், நானும் அவளுடனேயே இறந்து போகிறேன்" என்று பிரலாபிக்கிறான். உறவினர்கள் எப்படியோ அவனைச் சமாதானம் செய்து மனைவியின் ஈமக்கடன்களைச் செய்ய வைக்கிறார்கள்.
ஒரு வருடம் சென்றது. அவன் ஒரு அழைப்பிதழோடு உறவினர்களைப் பார்க்கப் போகிறான். என்ன அழைப்பிதழ் என்று நினைக்கிறீர்கள்? அவனுடைய இரண்டாம் கல்யாணத்திற்கான அழைப்பிதழ்தான் அது. அழைப்பிதழைப் பெற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள் "இதுதான் உலகம்" என்று. இது எப்படி நடந்தது.
காலம் செய்யும் மாயம் இது. எப்படிப்பட்ட துக்கத்தையும் நாளாவட்டத்தில் மனிதன் மறக்கிறான். இந்த இயல்பு இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி மறக்கும் இயல்பு இல்லாவிட்டால் மனிதன் நொறுங்கிப் போய்விடுவான். துக்கத்திலேயே மூழ்கிக்கிடந்தால் அவன் வாழ்வு என்ன ஆகும்?
இந்த இயற்கை நியதி எல்லோரும் அறிந்ததே. எப்படி சில காலம் சென்ற பிறகு அந்த துக்கத்தை மறக்கிறானோ, அது போல அந்த துக்கம் நிகழ்கிறபோதும் ஒரு சாட்சியாக நின்று அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு பெரிய ஆன்மீகப் புதிர். இதைத் தான் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது என்கிறார்கள். தண்ணீர் தாமரை இலையில்தான் இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டவில்லை.
ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் நிகழ்வுகளில் அதீத ஒட்டுதல் இருக்கக் கூடாது. இந்த பண்பு இளம் வயதில் வருவது கடினம். ஆனால் வயது ஆன பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட சுக துக்கங்கள் காரணமாக, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லாதது என்று உணர்கிறார்கள். அப்போது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அவர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.
இந்த நிலையை அடைந்த ஒருவன் சுகதுக்கங்களை ஒன்றாகவே ஏற்றுக்கொள்வான்.
மறதி நல்லது...
பதிலளிநீக்குபருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை...
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...
உண்மையான வார்த்தைகள் டிடி!
நீக்குதாமரை இலைத்தண்ணீர் பகிர்வு மனதில் தாமரை இலைத் தண்ணீராக இல்லாமல் நன்கு பதிந்துவிட்டது. இதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்வதே நெறிமுறையான வாழ்க்கையாகும்.
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனுபவம்தானே ஐயா
பதிலளிநீக்குசிறந்த பாடத்தினைக் கற்றுக் கொடுக்கிறது
நன்றி ஐயா
தம+1
பதிலளிநீக்குஇளம் வயதில் புரியாதது ஆண்டு அனுபவித்தபின் தான் தெரிகிறது. இதைத்தான் ‘கெட்ட பின்பு ஞானி’ என்று சொல்கிறார்களோ?
ஆனால் சுக துக்கங்களை உணர்ச்சி கரமாக வெளிப்படுத்தாமல் இருப்பவர்களை மற்றவர்கள் "கல்லுளி மங்கன்" "பைத்தியக்காரன்" என்றும் கூறுகிறார்களே?அதற்காகவே சில சமயங்களில் நடிக்க வேண்டியிருக்கிறதே.
பதிலளிநீக்குஇது போன்ற சொள்ளம்புகளையும் தாங்கிக் கொண்டு சாதரணமாக இருக்க நாம் இன்னும் சாமியாராக வில்லையே?
--
Jayakumar
இந்த வித்தையை காலம் கற்றுக் கொடுக்கிறது.
பதிலளிநீக்குஇந்தக் காலத்தையும் கடந்தவர்கள்தான் ஞானிகளாகிறார்கள்.
நல்ல பதிவு. மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
God Bless You
வாழ்வில் சுக துக்கங்களை அனலைஸ் செய்வதை விட்டு வாழ்க்கையை வாழ்ந்து பார் என்று என்னிடம் உரையாடலின் போது கடவுள் சொன்னார்.
பதிலளிநீக்கு//இந்த மறதி என்ற இயல்பு .... இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.//
பதிலளிநீக்குஆம். அதனால்தானோ என்னவோ எனக்கு இன்றுள்ள பல (வலைச்சர) வேலைகளில் இந்தத்தங்களின் பதிவுப் பக்கம் வரவே மறந்து போனேன் :)
வாழ்வியல் உண்மைகளைச் சொல்லும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் ஐயா வாழ்வின் யதார்த்தத்தை அழகாக சொன்ன விதம் அருமை
பதிலளிநீக்குஇந்த பதிவு பிறந்ததின் காரணத்தை என்னாலும் ஓரளவு யூகிக்க முடிகிறது ஐயா நன்றி
தமிழ் மணம் 5
காலமும், அனுபவங்களும் கற்றுக் கொடுக்கின்றன....மறதி மனிதனிதனுக்கு இருப்பதால் தான் வாழ்க்கையை கடக்க முடிகிறது. நல்ல பதிவு ஐயா.நன்றி
பதிலளிநீக்குதம +1
யதார்த்தம். மனித பல(வீன)ங்கள்.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/5.html
அன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
வலைத்தளம்: மன அலைகள்
http://swamysmusings.blogspot.com/2014/04/blog-post.html
திருச்சியில் ஒரு இளைஞர்
http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_16.html
என் அந்தப்புரத்து ராணிகள்
http://swamysmusings.blogspot.com/2015/02/blog-post_16.html
எங்க ஊர் பைரவ சேனை
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.
மிக நல்லதொரு வாழ்க்கைத் தத்துவம். நாம் வாழ்க்கையை அனுபவித்து ஒரு மூன்றாவது மனிதரைப் போல நோக்கி வாழ்ந்தால் இன்பமே!
பதிலளிநீக்கு