நாற்பது வயதுக்கு மேல் எழுத்துகளோடு வாழும் எவருக்கும் கண் கண்ணாடி போடுவது அவசியமாகி விடுகிறது. நான் என்னுடைய 43 வது வயதில் கண்ணாடி போட்டேன். அது வரை மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்த எழுத்துக்கள் எல்லாம் பளிச்சென்று இருந்தன. கண்ணாடி போடவேண்டியதின் அவசியம் அன்று புரிந்தது.
அப்போதெல்லாம் "பைஃபோகல்" எனப்படும் கண்ணாடிகள்தான் பிரபலமாக இருந்தன. (ஏன் இப்போதும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட கண்ணாடிகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.) அப்போது கம்ப்யூட்டர்கள் வரவில்லை. அதனால் இந்தக் கண்ணாடிகள் போதுமானவையாக இருந்தன.
கம்ப்யூட்டர்கள் இன்று இருக்கும் மாதிரியில் வர ஆரம்பித்த உடன் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு கண்ணாடி போட்டவர்கள் கஷ்டப்பட்டார்கள். "பைஃபோகல்" கண்ணாடி புத்தகங்களைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு தலையைத் தூக்கித் தூக்கி பார்த்ததில் கழுத்து வலி வந்தது.
இந்த சிரமத்தைப் போக்குவதற்காக "பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் பாகத்தின் பவரில் ஒரு தனிக்கண்ணாடி தயார் செய்து உபயோகப் படுத்தினார்கள். இதனால் தலையைத் தூக்கி கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகப் பார்த்தால் போதும்.
இது வரைக்கும் எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் எங்கள் சங்கத்திற்கு ஒரு கண் டாக்டர் வந்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு நுணுக்கம் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.
"பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் உள்ள பாகத்தின் பவர் புஸ்தகங்கள் படிப்பதற்காக நிர்ணயித்தது. புத்தகங்களை நாம் சாதாரணமாக ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் படிப்போம். அதற்கு இந்த "பைஃபோகல்" கண்ணாடிகள் போதுமானவை. ஆனால் கம்ப்யூட்டர் திரையை நாம் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்க்கறோம். அதற்கும் இந்த புத்தகம் படிப்பதற்கான பவர் உள்ள கண்ணாடியையே பயன்படுத்தினால் கண்ணிற்கு அசதி உண்டாகும்.
படிப்பதற்கு உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவரில் 0.5 பவரைக் குறைத்து ஒரு கண்ணாடி உபயோகப்படுத்தினால் இந்த அசதி வராது. இந்த நுணுக்கத்தை அந்த கண் டாக்டர் கூறினார்.
நான் அதற்கு முன்பிருந்தே அப்படியான ஒரு கண்ணாடியைத்தான் உபயோகப்படுத்தி வருகிறேன். சைனா கண்ணாடிகள் எல்லா பவர்களிலும் மிகவும் சலீசாகக் கிடைக்கின்றன. விலை 100 முதல் 150 க்குள்தான் இருக்கும். எனக்கு படிப்பதற்கான பவர் +3.0. கம்ப்யூட்டரைப் பார்ப்பதற்காக நான் உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவர் +2.5. இந்த முறையில் நான் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி வருகிறேன்.
பலரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் சிலருக்குத் தெரியாமல் இருக்க க்கூடும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
மிகவும் பயனுள்ளதோர் தகவல்
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்
இதுவரை அறியாத தகவல். ப்ராக்ரஸ்ஸிவ் க்லாஸ் என்று ஒன்று இருக்கிறதே அதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்களோ என்று பார்த்தேன்!
பதிலளிநீக்குப்ராக்ரஸ்ஸிவ் க்ளாஸ் சரியல்ல என்பது என் அபிப்பிராயம். என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.
நீக்குபயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குசுமார் இரண்டாண்டுகளாக நானும் பை போகல் கண்ணாடியை பயன் படுத்தியே
கணினியில் தட்டச்சு செய்து வந்தேன். பிறகு ஒரு நாள் கண்ணாடிக் கடைக்கே
சென்று விசாரித்த போதுதான் , தாங்கள் கூறிய காரணம் அறிந்து,
கணினிப் பயன்படுத்த என்று தனியொரு கண்ணாடி வாங்கினேன்
தற்பொழுது சிரமம் இல்லை
நன்றி ஐயா
தம +1
இந்தப் பதிவு தேவையா என்கிற யோசனையில் இருந்தேன். உங்கள் அனுபவத்தைப் பார்க்கும்போது இந்தப் பதிவு வெகு நாட்களுக்கு முன்பே வந்திருக்கவேண்டும் போல் உள்ளது.
நீக்குதேவையான பதிவு ..அப்பா...
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பயனுள்ள தகவல். பணியாற்றும் போது, கம்ப்யூட்டரில் உட்கார்ந்தவுடனேயே கம்யூட்டருக்கென தனி கண்ணாடி வாங்கி விட்டேன்.
பதிலளிநீக்குபலரும் அறியாத தகவல் தான்... Contact lens பற்றி...
பதிலளிநீக்குContact lens எல்லோருக்கும் உதவாது. அது சிலருக்கு தான் கண்ணாடி போட்டிருப்பது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்ற வறட்டு கௌரவத்திற்காக போடுவது. அது ஒரு நச்சுப்பிடித்த வேலை.
நீக்குஅறிந்திராத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் ஐயா! நன்றி!
பதிலளிநீக்குபலருக்கும் பயன் பெரும் விடயம் தந்த முனைவர் ஐயாவுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் 7
ஐயா
பதிலளிநீக்குஎனக்கும் இந்த அனுபவம் உண்டு. கிண்டிலில் பொடி எழுத்து படிக்க கஷ்டமாக இருக்கிறது என்று கண் மருத்துவரிடம் சென்று கண்ணாடி மாற்றினேன்,ஆனால் அதை வைத்து கணினியில் வேலை செய்ய முடியவில்லை.தற்போது இரண்டு கண்ணாடி உபயோகிக்கிறேன். 40 வருட கணினி உபயோகத்தில் 30 வருடம் CRT monitor உபயோகித்தேன். பலன் இடது கண் 6/60 வலது கண் -3.5; + 5.0. அப்படி இருந்தும் கணினி உபயோகிக்கிறேன்.
--
Jayakumar
தகவல் அறிந்துகொண்டேன்...
பதிலளிநீக்குநன்றி!
நல்ல தகவல் அய்யா. பகிர்ந்ததற்கு நன்றி .
பதிலளிநீக்குprogressive lens என்ற வசதியான கண்ணாடிகள் இப்போது கிடைக்கின்றன. இதில் மூன்று விதமான குவியங்கள் உள்ளன. அதனால், (௧) அருகிலுள்ளதைப் பார்த்தல் (௨) தூரத்தில் உள்ளதைப் பார்த்தல், மற்றும் (௩) இரண்டுக்கும் இடைப்பட்டதைப் பார்த்தல் - அதாவது கணினியைப் பார்த்தல் - ஆகிய மூன்றும் மிக எளிதாகவும் கண்களுக்கு வேலை கொடுக்காத வகையிலும் செய்ய முடிகிறது. விலைதான் சற்றே அதிகம். எட்டாயிரத்தில் இருந்தே கிடைக்கும் என்றாலும் பதினைந்தாயிரம் கொடுத்தால்தான் உச்சகட்ட பார்வைத்தேளிவு அமையும். நான் அதைதான் மூன்றாண்டுகளாக உபயோகிக்கிறேன். (கணினிக்கென்று தனியாக உள்ளதைப் பயன்படுத்துவதில் உள்ள சங்கடம் என்னவென்றால், ஒரு கண்ணாடியைக் கழற்றி இன்னொன்றை மாட்டிக்கொள்ளவேண்டும். அதாவது, எப்பொழுதும் இரண்டு கண்ணாடிகளைக் கையில் வைத்திருக்கவேண்டும். அது மட்டுமல்ல, அப்படி அடிக்கடி கண்ணாடிகளை மாற்றிப் போடுவதால் கண்ணின் பார்வைத்திறன் வேகமாக பாதிப்படையும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.) - இராய செல்லப்பா
பதிலளிநீக்குஓ இதுதான் காலக்கண்ணாடியா.....நன்றி அய்யா...அருமை
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. பலருக்கும் பயன்படும்.
பதிலளிநீக்கு