மனிதாபிமானம் இந்த உலகில் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம் கருணை இல்லங்கள்தான். பிறந்த குழந்தைகளிலிருந்து நாளை மூச்சை நிறுத்தப்போகும் வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் உதவக்கூடிய பல வகை கருணை இல்லங்கள் கோயமுத்தூரில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
இவ்வகையான இல்லங்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்துடனேயே செயல்படுகின்றன. ஏதோ ஒன்றிரண்டு மாறுபாடாக இருக்கலாம். தீபாவளி அன்று இப்படிப்பட்ட கருணை இல்லம் ஒன்றிற்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரலாமே என்று எனது நண்பர் விரும்பினார்.
அதற்காக நாங்கள் போன கருணை இல்லம், கோயமுத்தூர் என்ஜிஓ காலனியில் செயல்படும் ஒரு கருணை இல்லம். இதை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது என் மச்சினன் வீட்டிற்கு எதிரில் இருந்ததுதான். முதல் நாளே என் மச்சினன் மகனுக்கு போன் செய்து நாங்கள் இது மாதிரி பலகாரங்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி கருணை இல்ல நிர்வாகியிடம் சொல்லி வைக்கச்சொன்னேன்.
எனது நண்பர், என் மச்சினன் மகன், நான்
இந்த மாதிரி கருணை இல்லங்களுக்கு உணவோ அல்லது பலகாரங்களோ கொண்டு செல்பவர்கள் முன்கூட்டியே சொல்லி அவர்கள் அனுமதி பெற்றுச் செல்வது தேவையானது. ஏனெனில் ஒரே சமயத்தில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்கள் வந்து விட்டால் அவைகளை அவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் வீணாவதற்கு வாய்ப்பு உண்டு.
நாங்கள் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததினால் இந்தக் குழப்பம் வரவில்லை. நாங்கள் காலை 10.30 மணிக்குச் சென்றோம். இந்தக் கருணை இல்லத்தில் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தம் 35 பேர் இருக்கிறார்கள். நாங்கள் போன சமயம் 15 பேர் அவர்கள் உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டார்கள். மீதி இருந்தவர்களுக்கு மட்டும் நாங்கள் கொண்டுபோன பலகாரங்களை விநியோகித்து விட்டு மேலும் இருந்தவற்றை அங்கேயே மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல்லி வைத்து விட்டு வந்தோம்.
தீபாவளி அன்றி இப்படி கருணை இல்லக் குழந்தைகளுக்கு பலகாரம் கொடுத்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.
சில படங்கள்.
கருணை இல்லக் குழந்தைகள்
கருணை இல்ல நிர்வாகி திருமதி. பாலின்.
கருணை இல்லம்
வித்தியாசமான முறையில் தீபாவளிக் கொண்டாட்டம். நல்ல செயல்.
பதிலளிநீக்குமனம் நிறைவான செயல் அப்பா....
பதிலளிநீக்குஉண்மையில் உங்களுக்கு தான் ஆனந்தம் கொண்டாடும் தீபாவளி...
பதிலளிநீக்குஉண்மையில் உங்களுக்கு தான் ஆனந்தம் கொண்டாடும் தீபாவளி...
பதிலளிநீக்குகருணை இல்ல நிர்வாகி போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்களின் நண்பருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
தம+1
கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குமனிதாபிமானத்திற்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பதிலளிநீக்குகடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
- பாடல்: குருவிக்கரம்பை சண்முகம்
- படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
மனம் நிறைவான நல்ல காரியம் செய்தீர்கள்! தங்களுக்கும், உங்களது நண்பர் மற்றும் உங்கள் மச்சினன் மகன் - மூவருக்கும் பாராட்டுக்கள் அய்யா!
பாடலைப் பாடியவர் பெயர்: திருமதி லதா ரஜினிகாந்த்.
நீக்கு.
.
.
கருணை மிக்க இந்தத் தங்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தங்களின் மனிதாபிமானத்திற்கு என் மனமார்ந்த இனிய வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇவர்களைப் போன்றோரால்தான் இன்னும் உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது. நன்முயற்சியில் தாங்கள் கைகோர்த்தவிதம் அருமை. உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபடிக்க மிக்க மகிழ்வாய் இருக்கிறது
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
முனைவர் ஐயாவுக்கு வணக்கம் கோயமுத்தூர் குருவம்பாளையத்தில் தி ஹேண்டிக் ஹேப்டிக் ஸ்கூல் இருக்கிறது அதனுடன் எனக்கு சுமார் 10 வருடமாக தொடர்பு இருக்கின்றது தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
அது குரும்பபாளையம்.
நீக்குமிக வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளீர்கள். தங்கள் கணிப்பில் பெருவாரியான இல்லங்கள், கருணையுடனே செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மிக மகிழ்வைத் தருகிறது.
பதிலளிநீக்குநல்ல விஷயம்.... பாராட்டுகள்.
பதிலளிநீக்குநற்செயல் செய்தீர்கள்!
பதிலளிநீக்குநீங்களும் மகிழ்ந்தீர்கள்!!
சிறார்களையும் மகிழ்வித்தீர்கள்!!!