திரு. ஜிஎம்பி ஒரு முறை எழுதியிருந்தார். ஒருவர் மூன்று நாள் பதிவுகள் போடாவிட்டால் பதிவுலகம் அவரை மறந்து விடும் என்றார். நான் பதினைந்து நாட்கள் பதிவு போடவில்லை. என்ன நடந்திருக்கும் ? பழனி. கந்தசாமியா, யார் அது? என்று கேட்கும் அளவிற்கு பதிவுலகம் போயிருக்கும் என்று நம்புகிறேன்.
நான் பல வருடங்களாக BSNL BROADBAND வைத்திருந்தேன். என்னென்னமோ மாற்றங்கள் (தரத்தைக் குறைக்கும் மார்க்கங்கள்தான், வேறென்ன?) கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவர்களை விட்டு விலகாமலிருந்தேன்.கடந்த மூன்று மாதங்களாகவே அவர்களின் சர்வரில் ஏதோ கோளாறு.
திடீரென்று BROADBAND நின்று விடும். அதற்குண்டான நிபுணரைக் கூப்பிட்டு சொன்னால் வந்து சரி செய்வார். சில சமயம் தானாகவே சரியாய் விடுவதும் உண்டு. கடந்த மாதம் 20 ம் தேதி, ஆயுத பூஜைக்கு முந்தின நாள் BROADBAND நின்று விட்டது. வழக்கம்போல் நிபுணரை அழைத்து விபரம் சொன்னேன். அவர் ஆபீசில் புகார் பதிந்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதே என் உள் மனதில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்று மனது எச்சரிக்கை செய்தது.
அடுத்து இரண்டு நாட்கள் ஆயுத பூஜை லீவு. அதற்கடுத்த நாள் நிபுணர் வந்தார். ஒரு மணி நேரம் என்னென்னமோ செய்தார். ஒன்றும் சரியாகவில்லை. சார், எக்சேன்ச்சில் ஏதோ கோளாறு. அங்கு போய் சரி செய்து விடுகிறேன் என்று போனார். அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த நாள் போனில் நிபுணரைக் கேட்டேன். உள்ளே சொல்லியிருக்கிறேன். சரியாகி விடும் என்றார். அன்று சரியாகவில்லை.
அடுத்த நாள் எக்சேன்ச்சுக்கே போனேன். அங்கு எனக்குச் சொன்ன விபரம் - சார் அதை சரிபண்ணுகிறவர் நேற்று வரவில்லை. இன்று வருவார். வந்து சரி பண்ணி விடுவார். அப்படீன்னு சொன்னார்கள். நானும் நம்பி வீட்டுக்கு வந்து விட்டேன். அன்றும் சரியாகவில்லை.
அடுத்த நாள் நிபுணரும் போன் பண்ணி சார் இன்று சரியாகி விடும் என்று சொன்னார். அன்றும் சரியாகவில்லை. என் வீட்டில் எல்லோரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என் மாப்பிள்ளை "நான் ஏர்டெல் பிராட்பேண்ட் வைத்திருக்கிறேன். தொந்திரவு இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீங்களும் ஏன் அதற்கு மாறக்கூடாது என்றார்."
அடுத்த நாள், அடுத்த நாள் என்று ஓடி, ஏறக்குறைய 10 நாள் ஆகி விட்டது. 28ம் தேதி காலை எழுந்தவுடன் ஒரு வேகம் வந்தது. நேராக BSNL அலுவலகம் சென்று எனக்கு இந்த போனும் வேண்டாம், அதனுடன் சேர்ந்த BROADBAND ம் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தேன். ஏன் வேண்டாமென்கிறீர்கள் என்று கேட்டார்கள். என் பெண் பெங்களூரில் இருக்கிறாள். நான் அங்கு குடி பெயர்கிறேன் என்று ஒரு பொய் சொன்னேன். பொய் சொன்னால்தான் இந்தக் காலத்தில் காரியங்கள் ஒழுங்காக நடைபெறும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
நான் கொடுத்த விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டார்கள். எப்போது போனை நிறுத்துவீர்கள் என்று கேட்டேன். நாளைக்குள் நிறுத்திவிடுவோம் என்றார்கள். இந்த BSNL காரர்கள் போனை நிறுத்திவிட்டாலும் பில் அனுப்புவதை நிறுத்த மாட்டார்கள் என்று என் நணபர்கள் பலர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்கள். நானோ என் போன் பில்களை பேங்க் மூலமாக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். இந்த மாதிரி பில்கள் வந்தால் பேங்கிலிருந்து பணம் கொடுத்து விடுவார்கள். என் பணம் கோவிந்தாதான்.
ஆகவே பேங்கிற்குப் போய் இனிமேல் BSNL பில்கள் வந்தால் பணம் கொடுக்காதீர்கள் என்று எழுதிக்கொடுத்து அதை அவர்கள் கம்ப்யூட்டரில் சரி செய்த பிறகே வீட்டுக்கு வந்தேன்.
ஏர்டெல் பிரதிநிதி ஒருவர் வந்து வீட்டில் காத்திருந்தார். அவர் போட்டோ மற்றும் ஒரு அடையாள அட்டை காப்பி கேட்டார். அவைகளைக் கொடுத்து அனுப்பினேன். முந்தாநாள் இரவு 8 மணிக்கு ஒரு போன். சார், உங்க வீடு எங்கே இருக்கிறது என்று ஒருவர் கேட்டார். எதற்கு என்றேன். ஏர்டெல் போன் கனெக்ஷன் கொடுப்பதற்கு வருகிறேன் என்று சொன்னார். வீட்டு விலாசம் சொன்னேன். உடனே வந்தார். ஒரு மணி நேரத்தில் கனெக்ஷன் கொடுத்து எல்லா செட்டிங்சையும் செய்து முடித்து விட்டார். சார் இப்போது இன்டர்நேட் வேலை செய்கிறதா பாருங்கள் என்றார். பார்த்தேன். சரியாக இருந்தது.
சரி சார் என்று அவர் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்தபோது ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் வாங்கிக்குடித்தார். போகும்போது தலையைச் சொறியவில்லை.
இப்படியாக எனக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வந்து சேர்ந்தது. நானும் பதிவுகள் போடத் தயார் ஆகிவிட்டேன். இப்படி நான் தயாரானதில் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். ஏதோ கொஞ்ச நாள் நிம்மதியாக இருந்தோம். திரும்பவும் கழுத்தறுப்பு வந்து விட்டதே என்று வருத்தப்படலாம். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு தினமும் போய் என்னுடைய இன்டர்நெட் கனெக்ஷன் நிரந்தரமாக கெட்டுப்போகவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம்.
வணக்கம் அப்பா..நானும் இதுபோல் மிகவும் பி.எஸ்.என் எல் லால் கஷ்டப்பட்டு பின் நேராகப்போய் உங்கள் சர்வீஸ் சரியில்லை என்றே எழுதிக் கொடுத்து விட்டு பின் எம்டிஎஸ் கு மாறினேன் கடுமையான மன உளைச்சல்...நல்லது செய்தீர்கள்..அரசு நிறுவனங்கள் எல்லாம் ஊழியர்களாலேயே அழியப்போகின்றது..போல...மீண்டும் உங்களைத்தொடர்வதில் மகிழ்வே..நன்றி..அப்பா.
பதிலளிநீக்குஅதிகாலையிலேயே எழுந்து என் பதிவிற்குப் பின்னூட்டம் போட்ட மகளுக்கு அப்பாவின் வாழ்த்துகள்.
நீக்குபதிவு போடாவிட்டாலும் ஐயா உடல் நலக்குறைவு என்று ஜோசிப்போம் மறக்காமல்! இணையம் தொல்லை தந்தாலும் மீண்டும் மீசை முறுக்கி வந்தாச்சு சிங்கம்[[அம்மனி கூப்பிடுறா இன்னும் தூங்கல [[[ உங்களப்போல என்னால் அதிகாலை 3 மணிக்கு எழும்ப முடியாது ஐயா !இப்ப இங்க நேரம் பின்னிரவு 1 மணி!ம்ம்
பதிலளிநீக்குநன்றி, தனிமரம். உங்களைப்பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்யவேண்டுமே. என் ஈமெயிலுக்குத் தொடர்பு கொள்ள முடியுமா? drpkandaswamy1935@gmail.com
நீக்குகாலையில் எழுந்தவுடன், வழக்கம் போல ‘தமிழ்மணம்’ எட்டிப் பார்த்ததில், உங்கள் பதிவு மின்னிக் கொண்டு இருக்கும் மகிழ்ச்சியான செய்தி! அய்யாவுக்கு வாழ்த்துக்கள்! இனி வாசகர்களுக்கு நிறைய சுவாரஸ்யமான கட்டுரைகள் கிடைக்கும்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் இருப்பதும் BSNL Broadband - Landline இணைப்புதான் மழைக்காலம் வந்தால் இந்த இணைப்பிற்கு காய்ச்சல் வந்துவிடும். ஒருவாரமாக இங்கு திருச்சியில் அடிக்கடி நல்ல மழை. இண்டர்நெட் ”வருவான் போவான் திம்மப்பன்” கதைதான். எனது மகன் தனது லேப்டாப்பிற்கு வைத்திருக்கும் TATA Photon ஐ அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறேன். BSNL ஆபிஸில் wireless இற்கு மாறிக் கொள்ளும்படி சொல்கிறார்கள்.
உங்களைப் போல நான் BSNL இணைப்பை சட்டென்று தூக்கி போட்டு விட முடியாது. காரணம். ஹி.. ஹி.. ஹி .. எங்கள் வீட்டு அம்மா பணிபுரிவது BSNL இல்தான் (நகர்ப்புறம்) தனியார் இணைப்புகளில் கட்டணக் கொள்ளை அதிகம்; பல்வேறு பெயர்களில் பணத்தை உறிஞ்சி விடுவார்கள். நீங்கள் மீண்டும் BSNL Broadband இற்கே வர வாய்ப்புகள் அதிகம்.
நன்றி, தமிழ் இளங்கோ. விதி வலிது. அப்படியிருந்தால் திரும்பி வருவேன்.
நீக்குபி.எஸ் என். எல்
பதிலளிநீக்குதொல்லை நிரந்தரம்
தப்பீத்தீர்கள் ஐயா
பி எஸ் என் எல் லிருந்து மீண்டு
பதிலளிநீக்குமீண்டும் வந்தது மகிழ்வளிக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
போன மைச்சான் திரும்பி வரும் போது தனியாகவா வந்தார்?
பதிலளிநீக்குஅதெப்படி தனியா வர முடியும் ?
நீக்குஇனிமையான இம்சைகளை ரசிக்கலாம்தானே .....
பதிலளிநீக்குஎனக்கென்னவோ பி எஸ் என் எல் பரவாயில்லையோ எனத்தோன்றுகிறது ..
அவப்போது அறுந்து விடுவது உண்மைதான் .....தெரியாத பிசாசை விட தெரிந்த பேயே .....
நன்றி .
ஐயா
பதிலளிநீக்கு"போனவன் போனான்டி" வேற மச்சான் வந்தான்டி
"போனவன் திரும்பி வந்தாலும் வருவான்"
வீட்டுக்காரம்மா உங்களை BSNL Landlines இணைப்பு எடுக்க வைப்பார்கள். அவர்களுக்கு அதுதான் வசதி என்று சொல்வார்கள.
என்னுடைய laptop desktop இரண்டுமே சரி செய்ய முடியாத கோளாறு. என்றாலும் நான் mobile 3G data plan BSNL வழி இணைய தொடர்பு கொள்கிறேன்.ஆக இணைய தொடர்பும் ஒரு addiction தான்.(இரண்டாவது பெண்டாட்டி)
Airtel 4G கோவையில் நன்றாக இருக்கிறது. 4G phone உண்டு என்றால் எடுத்துக் கொள்ளுங்கள்.
Jayakumar
வீட்டுக்கார அம்மாவுக்கும் என் கம்ப்யூட்டருக்கும் எப்போதும் சக்களத்திச் சண்டைதானுங்க. அதனால அதைப்பற்றி எப்பவும் ஒண்ணும் பேச மாட்டாங்க.
நீக்குஅவர்களுக்கு இணையம் வேண்டாம். Landline phone வேண்டும். அதைத் தான் சொன்னேன்.
நீக்குவருக...வருக.....
பதிலளிநீக்குBSNL Broadband சேவைகளைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையே. அரசாங்கத்துறைகள் எப்போதும் அப்படித்தான் இருக்கும்.
பதிலளிநீக்குஇதை நானும் அவ்வப்போது அனுபவித்து வருகிறேன்.
இருப்பினும் தெரியாததோர் தேவதையை விட தெரிந்த இந்தப்பிசாசுடன் வாழ்வதே நல்லது என்று நினைத்து பல்லைக்கடித்துக்கொண்டு BSNL உடன் வாழ்ந்து வருகிறேன்.
மேலே பலரும் சொல்லியுள்ளதுபோல, கையில் காசும், உடலில் தெம்பும், உள்ளத்தில் உற்சாகமும் குறைந்தபின், தங்களின் மோகம் முற்றிலும் தீர்ந்தபிறகு, தாங்கள் என்றாவது ஒருநாள் தங்களின் முதல் மனைவியாகிய BSNL Service க்கே திரும்பி வரப்போவது உண்மை.:) ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக நம் சக்தியை (பணத்தை) ஒட்ட உறிஞ்சி, அவளுக்கு இவளே தேவலாம் என்று ஆக்கி விடுவார்கள்.
எனினும் இப்போதைக்கு மிகவும் ஜாலியாகவே இருக்கக்கூடும். ENJOY ! வாழ்த்துகள்.
இப்படியான பிரச்சனைகள் வரும் என்றுதான் நான் கைபேசியிலேயே பதிகள் எழுதிவருகிறேன் அய்யா!
பதிலளிநீக்குதங்கள் தளம் எனக்கு புதிது! இனி தொடர்கின்றேன்! நன்றி அய்யா!
அந்த வித்தை எப்படி ழ எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.
நீக்குBSNL தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறார்கள். இன்றும் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அரசு, பொதுத்துறை அலுவலர்கள் ஆகியோருக்குக் கொடுத்துக் கொண்டிருந்த சலுகையை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இன்னமும் குறைத்து விட்டார்களாம்.
பதிலளிநீக்குஇன்னொரு விளம்பரம் பார்த்தீர்களா? பிராட்பேண்ட் வேகம் 2 Mbps என்று விளம்பரம் செய்கிறார்கள். என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தால் இந்த வேகம் முதல் 1 GB க்கு மட்டுமாம். நம்ம உபயோகத்தில் 1 GB ஒரு மணி நேரத்தில் தீர்ந்து விடும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான்.
நீக்குஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தனியாரில் கொஞ்சம் பணம் பிடுங்குவார்கள்! சர்வீஸ் நன்றாகத்தான் இருக்கிறது! பி.எஸ்.என்.எல்லுக்கு நான் தலைமுழுகி மூன்று வருடம் ஆகிவிட்டது!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம் அய்யா
முகநூலில் முகம் கண்டேன்
அகம் மகிழ்ந்து விருப்பத்தை விடையாய் தந்தேன்.
அறுசுவை அறிய பதிவினை தருக
தொடர்வேன் தொடர்கதையாக!
நன்றி!
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
Good ... Airtel works well... I am using it for the past six months...no problem at all...you will get the phone connection...by which you can talk to anybody free of cost 24 h...I am fully using it...try...all the best...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎனக்கும் பி.எஸ்.என்.எல்.லில் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு. பல இன்னல்களைத் தாண்டி இணைய உலகுக்குள் பிரவேசிக்கும் தங்களை வருக வருகவென வரவேற்கிறேன் அய்யா!
பதிலளிநீக்குத ம 8
வாங்க ஐயா யாரை மறந்தாலும் முனைவர் ஐயா அவர்களை மறக்க முடியுமா ? மீண்டு(ம்) வந்ததில் சந்தோஷமே தாங்கள் வந்ததற்காக பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைப்போம் என்றால் அபுதாபியில் கோயில்கள் கிடையாது ஐயா தொடர வாழ்த்துகள்....
பதிலளிநீக்கு//பேங்கிற்குப் போய் இனிமேல் பிஎஸ்என்எல் பில்கள் வந்தால் பணம் கொடுக்காதீர்கள் என்று எழுதிக்கொடுத்து அதை அவர்கள் கம்ப்யூட்டரில் சரி செய்த பிறகே வீட்டுக்கு வந்தேன்//
ஹாஹாஹா மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 9
காசு முக்கியமில்லைங்களா?
நீக்குமொகரக்கட்டைப் புஸ்தகத்தில் புதிய முகத்தை தரி"சித்தேன்"...!
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்தவரை பிஎஸ் என் எல்சேவை இங்கு சிறப்பாகவே இருக்கிறது , மற்ற சேவைகள் பற்றி அறியும் வாய்ப்பு இதுவரை இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குAyya, welcome back...
பதிலளிநீக்குஇணையத் தொல்லையில் இருந்து மீண்டு வந்த ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களின் ரசனையான பகிர்வுகளை படிக்கக் காத்திருக்கும் போது எதற்காக பிள்ளையார் கோவில் போகணும்... கில்லர் அண்ணா சொன்னது போல் இங்கு பிள்ளையார் இல்லை...
உங்களுக்கு ஏர்டெல் இன்டர்நெட் கனெக்சன் கிடைத்ததற்கு மகிழ்ச்சி.. உங்களது பதிவுகளை படிக்க எப்பொழுதும் காத்திருக்கிறோம். பகிர்வினிற்கு நன்றி.
பதிலளிநீக்குஎனது வலைப்பூவில்: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்
மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
பதிலளிநீக்குநன்றி, டீச்சர்.
நீக்குஅப்போ அடிக்கடி பதிவு போடலைன்னா மறந்துடுவீங்க!! அப்படித்தானே ஐயா!!
பதிலளிநீக்குதனியார் இணைப்புகளில் கட்டணக் கொள்ளை அதிகம்; பல்வேறு பெயர்களில் பணத்தை உறிஞ்சி விடுவார்கள். நீங்கள் மீண்டும் BSNL Broadband இற்கே வர வாய்ப்புகள் அதிகம்.
பதிலளிநீக்குநானும் இந்த BSNL இணைப்பு தரும் தொல்லையால் அடிக்கடி கஷ்டப்படவேண்டியிருக்கிறது. நானும் இதைவிட்டு வேறு இணைப்பை பெறலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன். தங்களது அனுபவம் அறிந்து மா(ற்)றுவேன்.
பதிலளிநீக்குநானும் மாறி விட்டேன் !
பதிலளிநீக்குஎன் முகவரி! சா இராமாநுசம்
எண்(ப)178 (பு)14 அரங்கராசபுரம் சாலை
கோடம்பாக்கம் சென்னை -24
நல்லது. இனி தொடர்ந்து பதிவுகள் வரட்டும்....
பதிலளிநீக்கு