மனிதன் எக்காலத்திலும் சூழ்நிலைக்கு அடிமையே. இயற்கைச் சூழ்நிலை மட்டுமல்ல. சமூகச் சூழ்நிலைக்கும் அவன் அடிமையே. அடிமை என்ற வார்த்தை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போதல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
ஒவ்வொருவரும் சுகமாகவே வாழ விரும்புகிறான். துக்கத்தை ஒருவரும் விரும்புவதில்லை. இது உலக வழக்கம். இதில் தவறு எதுவுமில்லை. அடுத்தவர்களைக் கெடுக்காமல் சுகமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
ஒருவனுக்கு எது சுகம் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது. அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதே மாதிரி ஒருவன் சுகம் என்று அனுபவிப்பதை இன்னொருவன் அது சுகம் அல்ல என்று சொல்லலாம். அது அவனுடைய கருத்து. எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
பழக்க வழக்கங்களும் அம்மாதிரியேதான். அவரவர்களுக்குப் பிடித்த எண்ணங்களுடன்தான் ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவான். இதுதான் சரி, இது தவறு என்ற ஒரு பொது விதி சில செயல்களுக்குத்தான் பொருந்தும். வீதிகளில் வண்டிகள் ஓட்டுவது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லோருக்கும் பொது. அதை மீறினால் சிக்கல்கள் வரும்.
ஆனால் கோயிலுக்குப் போவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையிருப்பவர்கள் போகலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்குப் போவது தவறு என்று கோவிலுக்குப் போகாதவர்கள் கோவிலுக்குப் போகிறவர்களைப் பார்த்து சொல்லுவது தேவையில்லை. அதே மாதிரி கோவிலுக்குப் போகாமல் இருப்பது தவறு என்றும் கோவிலுக்குப் போகிறவர்கள் சொல்லக் கூடாது.
எனக்குத் தெரிந்த தத்துவம் இதுதான்.
இதுதான் உண்மை. ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களும், கருத்துக்களும். தன்னுடைய கருத்துக்களே சரியென்று உறுதியாக நம்புவது மட்டுமின்றி, மற்றவர்கள் மேல் திணிக்க முற்படுவதும், ஏற்காதவர்களை ஏசுவதுமே பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம்.
பதிலளிநீக்குகடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வைக்காதாவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துக் கொள்ளுங்கள் உங்களின் நம்பிக்கையால் அடுத்தவர்களுக்கு கெடுதல் ஏற்படாமல் மட்டும் பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்பதுதான் என் தத்துவம் . யாரும் யாரையும் அல்லது அவர்களது நம்பிக்கைகளை மாற்ற முயற்சிக்க வேண்டாம்
பதிலளிநீக்குடிட்டோ! இதேதான்...
நீக்குதங்களது தத்துவத்தோடு நான் உடன்படுகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட அங்குள்ள கட்டட, சிற்பக் கலைகளை ரசிக்க கோயிலுக்குச் செல்லலாம் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பி. ஜம்புலிங்கம் அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன் பதிவு நன்று ஐயா.
நீக்குதமிழ் மணம் 5
உங்கள் இறுதிக் கருத்து சரியே...
பதிலளிநீக்குகருத்திடவந்த போது டக்கென்று மதுரைத் தமிழனின் கருத்தைப் பார்க்க நேர்ந்தது. அதே போன்ற கருத்தைத்தான் இட வந்தோம். அவருடைய கருத்தையே வழிமொழிகின்றோம்...
சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்... அதுவே அவர்களுக்கு வேலையும் கூட...!
பதிலளிநீக்குதங்களது அனுபவம் பேசுகிறது. வாழ்வியல் சிந்தனையைப் பதிவாக்கிய அய்யாவுக்கு நன்றி!
பதிலளிநீக்குதன்னுடைய கருத்தை மற்றவர்களின் மேல் திணிக்காமல் இருந்தாலே எந்த சிக்கலும் வராது. தங்களின் கருத்தை/தத்துவத்தை ஆதரிக்கிறேன்!
பதிலளிநீக்குதங்களின் தத்துவம் சிறப்பு! உண்மையும் கூட! யாரும் யாருடைய நம்பிக்கையையும் இழிக்க வேண்டாம்! அருமை!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநம்பாதவர்கள் நம்புபவர்களை
தொந்தரவு செய்வதுபோல்
நம்புபவர்கள் நம்பாதவர்களை
அவ்வளவு தொந்தரவு செய்வதில்லை
என நினைக்கிறேன்
உண்மை.
பதிலளிநீக்குஉண்மை ஐயா
பதிலளிநீக்குஉண்மை!
பதிலளிநீக்குநம் நம்பிக்கைகளைத் திணிப்பு கூடாது. அடுத்தவர் எண்ணங்களையும் குறைத்து மதிக்கவும் தேவையில்லை.
பதிலளிநீக்குகோவிலுக்கு இனிய நாதஸ்வர இசை கேட்ட போவேன், குறிப்பாக வீதியுலா மல்லாரி கேட்க கோவிலுக்குதானே போகவேண்டும். இலங்கையில் தமிழகம் போல் சிற்பங்கள் நிறைந்த கோவில்கள் இல்லை. தமிழகம் வந்த போது பார்த்து மலைத்தேன், வாழ்நாள் போதாது. கோவிலில் ஆண்டவன் இருக்கிறானோ, ஆனால் கலைகள் வாழ்கிறது.போகத் தானே வேண்டும்.
அவரவர் விருப்பம் அவரவரோடு..... அடுத்தவர் விஷயத்தில்/விருப்பத்தில் தலையிடாதவரை தொல்லையில்லை.
பதிலளிநீக்கு