புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையினானே. நன்னூல் சூத்திரம்.
இந்த சட்டம் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, பதிவரக்ளுக்கு மிகவும் பொருந்தும். நான் ஏறக்குறைய ஆறு வருடங்களாகப் பதிவுலகில் வலம் வருகிறேன். பல பிரபல பதிவர்களைப் பார்த்து விட்டேன்.
எல்லோருக்கும் பொதுவான விதி என்னவென்றால் பதிவர்களுக்குண்டான ஆயுள் முடிந்தவுடன் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நான்காயிரம் பதிவுகளுக்கு மேல் பதிவிட்ட பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமார். அவர் பதிவுலகில் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார்.
தினம் தவறினாலும் தவறும், ஆனால் இவர் பதிவு தினத்திற்கு ஒன்று வந்தே தீரும் என்று பெயர் வாங்கின பதிவர் திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர்கள் பதிவுகள் இப்போது ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று வருகிறது.
துளசி தளம் டீச்சர் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாதிரி தொடர்ந்து எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.
பொதுவாக நான் பார்த்த வரையில் பதிவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் அல்லது 1000 பதிவுகள். இவைகளைத் தாண்டி பதிவு தொடர்ந்து எழுதிபவர்கள் பதிவுலகில் மிகச்சொற்பமே.
நான் ஏறக்குறைய 900 பதிவுகள் போட்டு விட்டேன். இதை வைத்து என் பதிவுலக ஆயுள் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே தோராயமாகக் கணக்குப் பண்ணிக்கொள்ளலாம். இந்தக் கணக்கு எனக்கு மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பதிவர்களுக்குமே பொருந்தும்.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பதிலளிநீக்குஆயிரத்தை நெருங்கியதும் ஒரு சலிப்போ
அல்லது ஞனமோ வரக்கூடும் போலத்தான்
படுகிறது.
ஆயிரம் தொட வாழ்த்துக்களுடன்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பதிலளிநீக்குஆயிரத்தை நெருங்கியதும் ஒரு சலிப்போ
அல்லது ஞானமோ வரக்கூடும் போலத்தான்
படுகிறது.
ஆயிரம் தொட வாழ்த்துக்களுடன்
நீங்கள் இதற்கும் மேலாகத் தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நான் நம்புகிறேன். எந்தவொரு தலைப்பிலும் தாங்கள் விவாதிக்கும் பாணியை நோக்கும்போது இந்தக் கணக்கு உங்களுக்குப் பொருந்தாது என நான் எண்ணுகிறேன்.நன்றி.
பதிலளிநீக்குஉங்களின் இந்த பதிவால் ஒரு கணக்கு பார்க்க முடிந்தது அதற்கு முதலில் நன்றி ஐயா...
பதிலளிநீக்குவரும் புதன்கிழமை 5ஆம் ஆண்டு தொடக்கம்...! அட...! இன்னும் ஒரு வருடம் தானா...?
நான்கு வருடங்களில் 166 பதிவுகள்...! 1000 பதிவுகள் - இதை நினைத்தாலும் ம்ஹீம்...
அவ்வப்போது ஒரு match ஆடி விட்டு, முடிந்தவரை coach-ஆக இருப்பதே அடியேனுக்கு லாயக்கு...!
தொடர்ந்து பதிவு எழுதி வருபவர்களுக்கு ஓய்வு தேவை இல்லையா? அதனால் சில பதிவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் பதிவுலகத்திற்கு வருவார்கள் என எண்ணுகிறேன். ஐயா! ஆனால் தாங்கள் பதிவிடுவதை 1000 த்தோடு நிறுத்தவேண்டாம். அப்படி நிறுத்தினால் நாங்கள் எல்லாம் கோவையில் உங்கள் வீட்டின் முன் ‘உண்ணும் நோன்பு’ இருப்போம்!!
பதிலளிநீக்குஆம். நிறைய பிரபலப் பதிவர்கள் இன்று எழுதுவதில்லை. அதனாலேயே எங்களைப் போன்ற பதிவர்கள் பெயர் முன்னால் வருகிறது! நாங்கள் இதுவரை 1959 பதிவுகள் எழுதி இருக்கிறோம்!! அவ்வப்போது தோன்றுவதை எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஞாயிறு புகைப்படம், திங்கற கிழமை, வெள்ளி வீடியோ, சனிக்கிழமை பாஸிட்டிவ் செய்திகள் போன்ற வாரந்தரத் தொடர்கள் வைத்துக் கொண்டிருப்பதால் எங்களுக்கு மினிமம் கியாரண்டி இருக்கிறது - பதிவின் எண்களுக்கு!
பதிலளிநீக்குஅய்யா! நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்; ஆயிரத்து ஒண்ணாவது பதிவினைத் தொட்டிட வாழ்த்துக்கள். அதற்கு மேலும் தொடர வேண்டும் என்பது வாசகர்கள் விருப்பம்.
பதிலளிநீக்குபழகப் பழக பாலும் புளிக்கும். பதிவு எழுத எழுத பதிவெழுதலும் வெறுத்து விடும். ஆனாலும் வலையை விட்டு வெளியேற முடியாது. மற்றவர் பதிவுகளைப் படிப்பதும் பின்னூட்டம் இடுவதும் தொடரும்.
பதிலளிநீக்குஜெயகுமார்
6 ஆண்டுகள் ....900 பதிவுகள். ஆச்சரியம்.
பதிலளிநீக்குபத்தரை ஆண்டுகளில் கொஞ்சமாகத்தான் எழுதியிருக்கிறேன்.............
முனைவர் ஐயாவின் எழுத்துப்பணி தொடரட்டும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு1000 தாண்டி
அதற்கு மேலும் பதிவுகளைத் தாருங்கள்
முனைப்பும் ஆர்வமும் இருப்பின் 1000 என்ன பத்தாயிரம் கூட எழுதலாம் என்பது என் எண்ணம்! இடைவெளியும் இடைவேளையும் புத்துணர்ச்சியுடன் மீண்டுவர உதவும்! நன்றி!
பதிலளிநீக்குஉங்களுக்கு எழுத நிறைய விஷயம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்......
பதிலளிநீக்குஎன் வாழ்நாட்களும் எண்ணப்பட்டு வருவதாக ஆனந்தத்துடன் அறிந்ததால்
பதிலளிநீக்குபதிவுகளைக் குறைத்துக்கொண்டேன்..!
தினசரி தொடர்ந்து 1613 வது நாளாக , இன்றைய பதிவினைப் போட்டுள்ளேன் ,என் ஆயுள் எவ்வளவு என்பதை என்னாலேயே கணிக்க இயலவில்லை ,உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் அய்யா :)
பதிலளிநீக்குமார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயதுதான். நீங்கள் பதிவுலக மார்க்கண்டேயன்.
நீக்குஆயிரம் என்ன
பதிலளிநீக்குஆயிரமாயிரம் எழுத வேண்டியவர் ஐயா தாங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
வாசிக்கக் காத்திருக்கிறோம்
தம +1
தங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
பதிலளிநீக்குநானும்கூட பதிவுகள் தற்போது எழுதாவிட்டாலும்
மற்றவர்களின் பதிவுகள் படிக்கவும்
கருத்துரைகள் இடவும்
மறப்பதில்லை!
ஐயா! தாங்கள் சொல்லுவது சரிதான். நாங்கள் வந்து இரு வருடங்களே ஆகின்றது. ஆனால் பழைய பதிவர்கள் இப்போது தொடர்வதில்லை என்று பலரும் சொல்லிக் கேட்கின்றோம்.
பதிலளிநீக்குதாங்கள் தொடர்வீர்கள்! தங்களுக்கு எழுத நிறைய கிடைக்கும் போது....தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...
அடுத்த 42 நாட்களில் எனக்கும் ஐந்து வருடங்கள் நிறைவடைய உள்ளது. 800 பதிவுகளுடன் பதிவுலகிலிருந்து வெளியேற வேண்டும் என நானும் நினைத்துள்ளேன். அதற்கு இன்னும் ஆறு பதிவுகளே பாக்கியுள்ளன. அவையும் வெளியிடத் தயார் நிலையிலேயே உள்ளன.
பதிலளிநீக்குபிற இதழ்களில் வருபவற்றை காப்பி + பேஸ்ட் செய்திருந்தால் இந்நேரம் எட்டாயிரம் பதிவுகள் கூட என்னால் கொடுத்திருக்க முடிந்திருக்கும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதில் என்ன பெரிய பெருமை இருக்க முடியும்?
நான் வெளியிடுபவை என் சொந்தச்சரக்காக மட்டுமே இருக்க வேண்டும், அதில் பலரின் பின்னூட்டங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இதுவே என் கொள்கையாகும்.
பின்னூட்டங்களே எதுவும் கிடைக்காமல் எழுதிக்கொண்டே போவது வெட்டி வேலை என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.
தாங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆவல். பகிர்வுக்கு நன்றிகள், சார்.
காப்பி பேஸ்ட் விஷயத்தில் நம் இருவரின் கருத்துகளும் ஒத்துப்போகின்றன. ஆனால் தொடர்ந்து எழுதுவது என்பதில் மட்டும் ஏன் இந்த மாறுபாடு?
பதிலளிநீக்குபின்னூட்டங்களைப் பொருத்த வரையில் நான் ஒரு முழுச் சோம்பேறி. உங்களைப்போல் பலருடைய பதிவுகளுக்கும் சென்று மிகவிரிவான பின்னூட்டங்க்ள போடுவது என்னால் முடிவதில்லை. இது என்னுடைய ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என நினைக்கிறேன். ஆபீசில் வேலை பார்க்கும்போதே மற்றவர்கள் ஒரு பக்கத்தில் எழுதுவதை நான் ஒரு பாராவில் அடக்கி விடுவேன். அதற்கு காரணம் ஒரு பக்கம் எழுதுவதற்கு நான் படும் சோம்பல்தான் என்று நினைக்கிறேன்.
எப்பொழுது என் பதிவுகளுக்கு பின்னூட்டம் மற்றும் பார்வையாளர்கள் குறைகிறார்களோ அப்போது நானும் பதிவுகளை நிறுத்தி விடுவேன். இதற்கு நான் வைத்திருக்கும் அளவுகோல் தமிழ்மணம் ரேங்க். நான் 50 வது ரேங்க் வரும் வரையில் எழுதுவேன். அவ்வளவுதான்.
//இதற்கு நான் வைத்திருக்கும் அளவுகோல் தமிழ்மணம் ரேங்க். நான் 50 வது ரேங்க் வரும் வரையில் எழுதுவேன். அவ்வளவுதான்.//
நீக்குதமிழ்மணம் உள்பட எந்தத்திரட்டிகளிலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக (2012 January to 2015 December) என் பதிவுகள் எதையும் இணைப்பது இல்லை. அதனால் எனக்கு அந்தக்கவலையே ஏதும் இல்லை. - vgk
அச்ஸ்...//எப்பொழுது என் பதிவுகளுக்கு பின்னூட்டம் மற்றும் பார்வையாளர்கள் குறைகிறார்களோ அப்போது நானும் பதிவுகளை நிறுத்தி விடுவேன்.// நான் எப்போதோ நிறுத்தியிருக்க வேண்டுமோ?
பதிலளிநீக்கு//தமிழ்மணம் ரேங்க்// அதிலெல்லாம் நான் ரொம்ப ஹை ராங்க் அல்லவா...? எத்தனைன்னு தெரியாது. அத தெரிஞ்சி மனச எதுக்கு நோகடிக்கணும்....!
இருந்தாலும் வண்டி போகுது...........
வண்டி ஓடற வரைக்கும் ஓடட்டும். சக்கரம் கழண்டு விழுந்தா ஓட்டத்தை நிறுத்தீட்டாப் போகுது.
நீக்கு