சனி, 21 மே, 2016

இந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்

                            Image result for ஓட்டுக்குப் பணம்

இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பல கட்சிகளின் சார்பிலும் கொடுக்கப்பட்டது என்று பலவலாகப் பேசிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். என்னுடைய காதிற்கும் இந்த செய்தி அப்படியே அரசல் புரசலாக வந்தது.

நானும் மிக ஆவலுடன் இந்த அன்பளிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசை இலவு காத்த கிளி போல் வீணாகிப்போனதில் என் மனது செக்கு நூறாக உடைந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பெவிகால் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இலவு காத்த கிளி என்றால் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பச்சைத் தமிழன் ஆகவே எனக்குத் தெரியும். அந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறேன்.

இலவம் பஞ்சு என்பது ஒரு வகையான மரத்தில் காய்க்கும் காய்களிலிருந்து எடுக்கும் பஞ்சு. இதை மெத்தை தலையணைகளில் அந்தக் காலத்தில் உள்ளே திணித்து தைப்பார்கள். உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்தக் காய்கள் பச்சைப் பசேல் என்று இருக்கும்.

சில கிளிகள் இதை ஒரு வகை பழம் போல் நினைத்து இது பழுக்கட்டும், பழுத்த பிறகு திங்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும். ஆனால் இந்தக் காய்கள் பழுக்காமல் திடீரென்று ஒரு நாள் வெடித்து விடும். காத்துக்கொண்டிருந்த கிளிகள் நமது காப்டன் மாதிரி ஏமாந்து போகும்.

நானும் இந்த மாதிரி ஆகிப்போனேன். ஒரு பயலும் என்னிடம் வந்து,  "தாத்தா, ஓட்டுப்போடுவதற்கு இதோ அன்பளிப்பு" என்று கொடுக்கவில்லை. எனக்கு என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கம் மாறவே மாட்டேனென்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து சர்வதேசக் கோர்ட்டில் ஒரு வழக்கு பதியலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

அதனால்தான் நான் ஓட்டுப்போடவில்லை என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அவைகளை ரகசியமாகப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                              Image result for கேப்டன் விஜயகாந்த்

10 கருத்துகள்:

  1. எப்படியெல்லாம் என்னால் முடிந்த மட்டில் உங்களை அறுக்கிறேனே, யாராவது ஒருத்தர் எனக்கு "அறுவைத்திலகம்" என்று பட்டம் கொடுக்கிறார்களா, பாருங்கள்?

    பதிலளிநீக்கு
  2. இலவு காத்த கிளி என்பதற்கு விளக்கம் நன்று. நன்றி. நீங்க தான் வோட்டு போடமாட்டேன் என்று முன்பே பதிவு போட்டு விட்டீர்களே. வோட்டு போடாதவனுக்கு எந்த மடையன் வோட்டுக்கு பணம் கொடுப்பான்.


    நீங்கள் "கிறுக்கர்கள்" சங்கத் தலைவர் அல்லவா. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு என்று மற்றவர்கள் நினைப்பார்களே தவிர ஏன் இந்த ஐயா இப்படி அறுக்கிறார் என்று சொல்ல மாட்டார்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. இலவு காத்த கிளியின் வரலாறு அறியத்தந்த முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி

    இருந்தாலும் வெசயகாந்தே இவ்வளவு கேவலப்படுத்தியது கண்டு எனது நெஞ்சே பஞ்சு போல வெடிச்சுருச்சு
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  4. ஹ ஹா ஹா நண்பரே
    நீங்கள் நினைக்கும் பட்டம்
    உங்களுக்கே உரியது ..
    இந்த ரகசியத்தை நான்
    சொல்லவே மாட்டேன்....

    பதிலளிநீக்கு
  5. ஓட்டு போடாததற்கு இதுதான் உண்மைக் காரணம் என்று நம்ப முடியவில்லை ஐயா! காசெல்லாம் கட்சிகாரர்களுக்கு மற்றும் இவர்கள் கட்டாயம் நமக்கு ஓட்டுப்போடுவார்கள் என்பவர்களுக்குத்தான் தந்தார்கள். அனைவருக்கும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  6. ஆங்ங்ங்
    அந்த பட்டம்
    உங்களுக்குத்தான்
    #கேப்டனார் நாக்கை கடிக்கிறார்

    பதிலளிநீக்கு

  7. திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் சொல்வது சரியே.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீட்டிலும் ஐந்து வோட்டுகள் இருந்தும் எங்களையும் யாருமே மதிக்கவில்லை ஐயா... எனவே (வழக்கம்போல) ஜெயிக்காத கட்சிக்கு வோட்டு போட்டு விட்டேன்!

    பதிலளிநீக்கு
  9. ஆகா
    ஓட்டுப் போட்டிருக்க வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  10. நானும் ஸ்ரீராம் அவர்களின் கட்சிதான்

    பதிலளிநீக்கு