இன்றைக்கு தினமலரில் வந்த செய்தி.
“ஏழைகள் சொந்தமாக சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, 3,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் போது, அந்த ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, 1998ல் அரசு உத்தரவிட்டது. தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், 5,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.”
ஆகவே சென்னையில் 5,000 ரூபாய்க்கு சொத்து வாங்க முடியும் என்று தெரிகிறது. பதிவுலக நண்பர்கள் அப்படி ஏதாவது சொத்து கிடைப்பதாயிருந்தால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்