“இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க”
இந்த வார்த்தைகளை பதிவர்கள் எல்லோரும் பல பதிவுகளில் பார்த்திருப்பார்கள். இந்த வார்த்தைகளில் இருந்து நான் புரிந்து கோண்டது என்னவென்றால் :-
அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான் அவர்கள் அவா. அதனால்தான் அந்த எழுத்துக்கள் பல பேரைச் சென்றடையட்டும் என்று நம்மை பல திரட்டிகளில் ஓட்டுப்போடச் சொல்லுகிறார்கள்.
நான் புரிந்துகொண்டது சரி என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தப்பதிவை காப்பி பேஸ்ட் செய்கிறவர்களும் அதே வேலையைத்தானே செய்கிறார்கள். ஏன் அப்போது மட்டும் எல்லோரும் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த எழுத்துக்களை நீங்கள் பிறக்கும்போதே கொண்டு வந்தீர்களா, இல்லையே. நீங்களும் அந்தக் கருத்துக்களை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டவர்கள்தானே? நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.