இது ரொம்ப
சுலபம். ஒரே
ஒரு கொள்கை
வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது
நான் நல்ல
கணவனாக இருப்பேன்
என்று. இதில் ஆழமான
பிடிப்பு வேண்டும்.
கொள்கைப்பிடிப்பு இல்லாதவன்
மனிதனே அல்ல.
முதலில் செய்யவேண்டியது
என்னவென்றால், வெட்கம்,
மானம், மரியாதை,
சூடு, சொரணை, இப்படி
வேண்டாத சாமான்களை
எல்லாம் காயலான்
கடைக்குப் போட்டு
விடவேண்டும். அப்புறம்
நல்ல கணவனாவது
வெகு சுலபம்.
வளவளவென்று சும்மா
பேசி என்ன
பிரயோஜனம்? சுருக்கமாக
பாய்ன்ட் பை
பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர்
போட்டு சொல்லிவிடுகிறேன்.
1. காலையில்
மனைவிக்கு முன்
எழுந்திருந்து நல்ல
டிகாக்ஷன் காப்பி போட்டு மனைவி
எழுந்திருக்கும்போது சூடாகக்
கொடுக்கவும்.
2. காய்கறிகள்
வாங்கி வருவதோடு
நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை
சமையலுக்குத் தேவையானபடி
அரிந்து, கழுவிக்
கொடுக்கவேண்டும்.
3. அவ்வப்போது
உபயோகித்த பாத்திரங்களை
அப்போதைக்கப்போது கிளீன்
செய்து அதது
வைக்கவேண்டிய இடத்தில்
வைக்கவும்.
4. சாப்பிடும்போது
ஆஹா, பேஷ்
என்று சொல்லிக்கொண்டே
சாப்பிடவும்.
5. துணி
துவைக்கும் வேலைக்காரி
வரவில்லையென்று துணிகளை
பாத்ரூமிலேயே விட்டு
விடக்கூடாது. உங்கள்
துணிகளைத் துவைத்து
காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும்
அடக்கம் என்பதை
மறக்காதீர்கள்)
6. மனைவிக்கு
உடம்பு சரியில்லையென்றால்
ஆபீசுக்கு மருத்துவ
விடுப்பு போட்டுவிட்டு
மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச்
செய்யவும்.
7. மனைவி
ஷாப்பிங்க் போகும்போது
கூடவே போய்
அவர்கள் வாங்கும்
பொருட்களை பத்திரமாக
வீட்டிற்குக் கொண்டுவந்து
சேர்க்கவேண்டும்.
8. மாமியார்
வீட்டு ஜனங்கள்
வந்தால் ரயில்வே
ஸ்டேஷன் அல்லது
பஸ் ஸ்டேண்டிற்குப்
போய் வரவேற்று
டாக்சி வைத்து
வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும்.
ஆட்டோவில் எக்காரணம்
கொண்டும் கூட்டி
வரக்கூடாது.
9. அந்த
ஜனங்களை உள்ளூரில்,
பக்கத்து ஊர்களில்
பார்க்க வேண்டிய
இடங்களுக்கு டாக்சியில்
கூட்டிக்கொண்டு போய்
காண்பித்துக் கூட்டி
வரவேண்டும்.
10. அவர்கள்
சில மாதங்கள்
கழித்து ஊருக்குப்
போகும்போது உண்மையாக
வருத்தப்பட வேண்டும்.
கண்களில் கண்ணீர்
வந்தால் நல்லது.
இந்த முறைகளெல்லாம்
அக்மார்க் முத்திரை
வாங்கியவை. இவை
கட்டாயம் உங்களுக்கு
நல்ல கணவன்
பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள்
மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும்.
நான் கேரன்டி.