எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பார்த்தது நடப்பதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம். ஆனால் இதில் பல விவசாயிகளின் பணம் முழுகிப் போய் விட்டதே. அதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.
ஈமு கோழி பித்தலாட்டம்
என்ற தலைப்பில் 17-12-2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சொல்லியுள்ள பித்தலாட்டம் இன்று அரங்கேறிவிட்டது. பெருந்துறை அருகில் உள்ள சுசி ஈமு பண்ணை இன்று முடக்கப்பட்டது (தினத்தந்தி செய்தி, 8-8-12). இதைத் தொடர்ந்து வரிசையாக மற்ற பண்ணைகளும் மூடும் செய்திகள் வெளியாகும். காத்திருங்கள்.