ஒரு பதிவப் படிச்சா நல்லா இருந்தா, பின்னூட்டம் போடலாமுன்னு விரும்புகிறோம்.
முக்கால்வாசி பதிவுகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் பதிவர் கமென்ட் மாடரேஷன் வச்சிருந்தா வச்சுக்கட்டும். பின்னூட்டம் போடுவதில் அது ஒரு பிரச்சினை இல்லை.
சில பதிவுகளில் IAS பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.
அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிற அப்போ விடியட்டும்.