சனி, 20 நவம்பர், 2010

அதிர்ஷ்டம் என் பக்கம்

பதிவுலக நண்பர்களுக்கு,

இன்று எனக்கு வந்த ஈமெயிலைப் பாருங்கள்.

எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் காலையில் கோழி கூப்பிடும் முன்பாகவே என் வீட்டுக்கதவைத் தட்டுகிறது பார்த்தீர்களா?

எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட் என்றால் இந்திய மதிப்பில் எவ்வளவு இருக்கும்? பதட்டத்தில் கையும் ஓடமாட்டேன் என்கிறது. காலும் ஓடமாட்டேன் என்கிறது. இந்தப் பாழாப்போன கால்குலேட்டர் இந்நேரம் பார்த்து கைக்கு கிடைக்கமாட்டேன் என்கிறது. சார், சார், யாராவது உதவிக்கு வாங்களேன். ஒரு பவுண்ட் என்றால் எத்தனை ரூபாய் சார்? எண்பது ரூபாயா? அப்போ எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட்டுக்கு, ஐயோ, ஐயோ, ஆறு கோடி ரூபாயா? யாராச்சும் சொல்லுங்களேன் சார், கணக்கு சரிதானா?

ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ !

இந்த ஆறு கோடி ரூபாயை வச்சுட்டு நான் என்ன பண்ணுவேன், வீட்ல வக்கறதுக்கு எடம் பத்தாதே? பாங்குல போட்டா இன்கம்டாக்ஸ்காரன் கணக்கு கேப்பானே? ஐயோ, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்? ஒண்ணுமே புரியலயே? நாகேஷ் இருந்தாலாவது பொலம்பறதுக்கு தொணைக்கு வருவார், அவரும் போய்ச்சேந்துட்டாரே?

யாராச்சும் ஏதாச்சும் ஐடியா கொடுத்து என்னைக் காப்பாத்துங்களேன்? வர்ற பணத்தில பாதி கொடுக்கிறேன், பாதி என்ன, பூராத்தையும் கொடுத்து விடுகிறேன். உதவி பண்ணுங்கையா !

----------------------------------------------------------------------------------------

E-mail Promo Notification

MICROSOFT [noreply@microsoft.net]

Sent: Sat 20-Nov-10 1:46 AM

To: undisclosed-recipients:

MICROSOFT END OF YEAR NOTIFICATION

This is to inform you that you have been selected for a cash prize of seven hundred and fifty thousand Pounds (Ј750,000.00) in Microsoft End of year award held in United Kingdom, with

REF No: L/200-26937

BATCH No: 2010MJL-01

Do fill out your details for payment:

1.Full Name 2.Full Address 3.Marital Status 4.Occupation 5.Age 6.Sex 7.Nationality 8.Country Of Residence 9.Telephone Number

PROGRAM CO-ORDINATOR

Dr.Pinkett Graffin

TEL:+44-758-789-2992

Email: prinnket.graffin@vista.aero

-------------------------------------------------------------------------------------------

எவ்வளவு தத்ரூபமா இருக்கு பாத்தீங்களா?