வியாழன், 26 பிப்ரவரி, 2009

சு.சாமியும் வக்கீல்களும்

சுப்பிரமணியசாமி என்கிற கோமாளி எதற்காக உயர்நீதி மன்றத்திற்கு வந்தார் என்று ஆராய்ந்தால் பல காரணங்கள் கூறலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அரசு ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதற்கு ஆதரவு கொடுக்கட்டும். ஏன் தன்னையும் ஒரு கட்சிக்காரனாக சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் போட்டு அதற்காக நேரில் ஆஜராக வேண்டும். நீ ஒரு பார்ப்பானாக இருப்பதினால் தானே இதற்கு தலைப்பட்டிருக்கிறாய்?
ஜனநாயக நாட்டில் இதற்கு கூட உரிமை இல்லையா என்று கேட்கலாம். உங்கள் ஜனநாயக உரிமையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உயர் நீதிமன்றத்தில் நின்று கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டுவதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?
பிறகு குய்யோ முறையோ என்று கத்துவது எதற்காக? இதைப்பற்றிய ஒரு வலைப்பதிவில் சில பார்ப்பனர்கள் பார்ப்பனர்களல்லாதாரை இஷ்டத்திற்கும் திட்டியிருக்- கிறார்கள். இந்த சமாசாரத்தை விரிவாகப்பேசி பட்டி மன்றம் நடத்த எனக்கு ஆசையில்லை. ஆனால் ஏதோ இவர்களுக்குத்தான் கணக்கு தியரமும் கெமிஸ்ட்ரி பார்முலாவும் வரும் என்று சொல்லியிருப்பதுதான் வேடிக்கை. போன நூற்றாண்டில் வேண்டுமானால் அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பார்பானைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பார்ப்பனல்லா -தவரும் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த வலைப்பதிவில் கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது என்ன தெரிகிறதென்றால், இந்த பார்ப்பனர்கள் இன்னும் அவர்களுடைய அடிப்படை குணங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். ஒரு பெரியார் இல்லையென்றால் நம்மை எந்த அளவு கீழே தள்ளியிருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.
தொடரும்.....