வியாழன், 8 டிசம்பர், 2011

சில தனிப்பாடல்கள்திருவண்ணாமலை தீபத்திருநாளாம் இன்று மூன்று முத்தான பாடல்களைத் தந்துள்ளேன். படித்து பலன் பெறுக.

மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொளார்
கருமமே கண்ணா யினார்.

கல்லாப் பிழையும் கருதாப் பழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

மானங்குலங் கல்வி வண்மை அறிவுடைமை தானந்
தவம் முயற்சி தாளாண்மை தேனின் கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப்
பறந்து போம்.