திங்கள், 3 டிசம்பர், 2012

எனக்கு கிடைத்த பட்டம்

http://www.nambalki.com/2012/11/1_27.html

மேலே கொடுத்துள்ள பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
mubarak kuwait said...
பொதுவாக வெளிநாட்டில் வேலை பார்பவர்களை பார்த்து உள்ளூரில் இருப்பவர்கள் கேட்பதுதான், அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இதை ஒரு சாதரணமானவர்கள் சொன்னால் விட்டு விடலாம், படித்த சிந்தனையாளர் திரு பழனி கந்தசாமி சொல்வது நகைப்பிற்குரியது மேலும் அவரின் பொறாமையை காட்டுகிறது, இந்திய மக்கள் வரிபனத்தில் படித்த உள்ளூர் டாக்டர்கள் எல்லாம் முழு சேவை நோக்கத்தோடுதான் வைத்தியம் செய்கிறார்களா? அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்பதற்கும் இவர்கள் தனியாக கிளினிக் நடத்தும் இடங்களும் வேறுபாடுகள் இல்லையா? மக்கள் வரிபனத்தில் படித்து விட்டு மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கி கொண்டு முறையாக வைத்தியம் பார்காதவர்களை விட, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல், நாம் வெளிநாட்டில் இருந்தாலும் நம் வருமானத்தை நம் தாய் நாட்டிர்க்குதானே அனுப்பிகிறோம், நம் நாட்டிற்கு எவ்வளவு அந்நிய செலவாணியை கொடுக்கிறோம்.
அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது