செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தமிழ் ஈழம்.

நான் சில காலத்துக்கு முன் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பதிவு ஒன்று போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட கதை அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அப்போது நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து இலங்கைத் தேயிலைத்தோட்டங்களுக்கு வேலைக்காக கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள்  என்பதுதான்.

அந்த எண்ணம் தவறு என்றும் இலங்கைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றும் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படித் தெரிந்து கொண்டதின் பின்னர் சில சந்தேகங்கள் என் மனதில் உண்டாயின.

முதல் சந்தேகம் - அப்படி பல காலம் வாழ்ந்தவர்கள் ஏன் சிங்களவர்களுக்குத் தாழ்ந்து போனார்கள் என்பதுதான்?

இரண்டாவது சந்தேகம் - அப்படி ஆயிரம் ஆண்டு கால பரம்பரையான இஙல்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அப்படி என்ன இனத்தொடர்பு?

மூன்றாவது சந்தேகம் - தமிழீழம் தமிழீழம் என்று பேசிக்கொண்டிருந்தார்களே, அது கிடைத்து விட்டதா?

நான் பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டதால் எனக்கு நேரடியாக இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது என்பதை அறிவேன். எவ்வளவோ சந்தேகங்களுக்கு விடை தெரியாகல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதில் இவையெம் சேர்ந்து கொள்ளட்டுமே. என்ன குடி முழுகிப் போய் விடப் போகிறது?