ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஒரு கணக்கு

                                     Image result for mental hospital patients

10 ஆட்கள் ஒரு சுவற்றை 20 நாளில் கட்டிமுடித்தார்கள்.

அப்படியானால் அந்த சுவற்றை 10 நாட்களில் கட்டி முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும்?

இதை மனக்கணக்காகவே போட்டு முடிக்கலாம். ஆனால் கணக்கு வாத்தியார் ஒத்துக் கொள்ள மாட்டார்.

அவர் சொல்லிக்கொடுத்த வழியிலேயேதான் போடவேண்டும். அப்போதுதான் மார்க் போடுவார்.

விடை: 20 ஆட்கள்.

இதே மாதிரி இன்னோரு கணக்கு.

ஒரு தோசை சுட 5 நிமிடம் ஆகிறது. அப்படியானால் 10 தோசை சுட எவ்வளவு நேரம் ஆகும்?

விடை; 50 நிமிடம்.

இன்னொரு கணக்கு.

ஒரு வீட்டில் துணி துவைக்கிறார்கள். 10 சீலைகள் துவைத்திருக்கிறார்கள். ஒரு சீலை காய இரண்டு மணி நேரம் ஆகிறது. 10 சீலைகளும் காய எவ்வளவு நேரம் ஆகும்?

விடை;  20 மணி நேரம்

விண்டோஸ் 10 எப்ப வரும்?

விடை; சில மணி நேரத்தில், சில நாட்களில், சில வாரங்களில்.

எங்கேயோ கணக்கு தப்பாகி விட்ட மாதிரி தெரிகிறதே. எல்லாம் இந்த விண்டோஸ் 10 பண்ணுகிற வேலை. என்ன செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்றே புரியாமல் செய்து கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சம் இருங்க, என்னுடைய ஆஸ்தான மன நல டாக்டரைப் பார்த்திட்டு வந்துடறேன்.

13 கருத்துகள்:

  1. அய்யா எல்லா கணக்கும் சரி. மேலே நீங்கள் சொன்ன ஒரு கணக்கில் லாஜிக்காக இடிக்கிறதே.

    /// ஒரு வீட்டில் துணி துவைக்கிறார்கள். 10 சீலைகள் துவைத்திருக்கிறார்கள். ஒரு சீலை காய இரண்டு மணி நேரம் ஆகிறது. 10 சீலைகளும் காய எவ்வளவு நேரம் ஆகும்? விடை; 20 மணி நேரம் ///

    எத்தனை துணிகள் துவைத்தாலும் காய வைக்கும்போது ஒரே தடவையாகத்தான் எல்லாவற்றையும் காய வைப்பார்கள். நீங்கள் சொன்ன 10 சேலைகளும் காய இரண்டு மணி நேரம் மட்டுமே.

    (ஐந்து குருவிகள் சுவரில் வர்சையாக அமர்ந்து உள்ளன. ஒருவன் துப்பாக்கியால் ஒரு குருவியை சுட்ட பிறகு, மீதி அங்கே எத்தனை குருவிகள் இருக்கும்? சின்ன வயதில் கேட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைக்ரோசாப்ட் காரன் விண்டோஸ் 10 ஐ இலவசமாகக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னாலும் சொன்னான், ரொம்பப் பேருக்கு லாஜிக் போய்ட்டுதுங்க. இந்த லாஜிக் தகராறுக்காகத்தான் மனநல நிபுணரைப் பார்க்கப்போகிறேன்.

      நீக்கு
  2. புரிந்து கொண்டதை கொஞ்சம் விளக்கமாக ஒரு பதிவு போடுங்களேன் ஐயா... பலருக்கும் உதவும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விண்டோஸ் 10 வந்துடட்டும். அப்புறம் லாஜிக்காக பதிவுகள் போடறேன். (தமிழ் இளங்கோ ஜோக்குகளை ஜோக்காகப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.) அது வரைக்கும் பதிவுகள் கொஞ்சம் ஏறத்தாழத்தான் இருக்கும். அன்பர்கள் பெரிய மனது பண்ணிப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. குரங்கு ஏற்கெனவே மதுவைக் குடித்து போதையில இருக்கு. அதை தேளும் கொட்டீட்ட எப்படியிருக்கும்? அது ஆடறதுதான் கூத்து ! அது மாதிரிதான் இப்ப என் நெலமை ஆகிப்போச்சு.

      நீக்கு
  4. ஐயா

    மூணாவது பொண்டாட்டிக்கு, அதான் கணினிக்கு இப்போ இருக்கிற வேலைக்காரியே (Windows 8) போதும் என்று நினைக்கிறாங்க போல இருக்கு. நீங்க அவங்க கிட்டே " என் செல்லம். புது வேலைக்காரி (Windows 10) உனக்கு பழையவளை விட ரொம்ப நல்லா வேலை செய்வாள். வேணும் என்றால் பழையவளையும் நாம் சும்மா ஒருஓரத்தில் வச்சுக்கலாம். புதுசா வரவளுக்கு சம்பளம் ஒன்றும் கொடுக்க வேண்டாம். என்ன சில சமயம் கொஞ்சம் புது தொடைப்பம் பாத்திரம் (APPS) மாற்ற வேண்டி வரும். அதெல்லாம் பின்ன பாத்துக்கலாம். இப்போ அவளுக்கு கொஞ்சம் வழி விட்டு சீக்கிரம் வாடி என்று கூப்பிடு." என்று சொல்லிப் பாருங்கள்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குறுக்கு வழி கண்டு பிடிச்சிருக்கேன். அதில போயி என்ன ஆகுதுன்னு பாத்துட்டுச் சொல்றேன்.

      நீக்கு
    2. நீங்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி எது என்று ஊகிக்க முடிகின்றது. அவ் வழி சென்றால், கண்டிப்பாக விரும்பிய இடத்திற்குச் சுலபமாகச் சென்றடையலாம். பலதும் பத்தும் பெற்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒரு பேமிலி டாக்டர் இருக்கிற மாதிரி மன நல மருத்துவரும் இப்போ அவசியமாயிட்டுது.

      நீக்கு
  6. மன நல மருத்துவரும் இப்போ அவசியமாயிட்டுது./

    மிகச் சரி எனத்தான் படுகிறது/

    பதிலளிநீக்கு