வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் வரலாறு

                                            Image result for drinking picture cartoon
தமிழ்நாட்டில் 1960 களில் காங்கிரஸ் கோலோச்சிக்கொண்டு இருந்தது. திமுக அப்போது அண்ணாத்துரை தலைமையில் பெரியாரின் பிடியிலிருந்து வெளி வந்த காலம். அது வரை அந்தக்கட்சியின் குறிக்கோள் சமுதாய சீர்திருத்தம் மட்டுமே. கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு, கலப்புத் திருமணங்கள் ஆகியவையே கட்சியின் பிரதானக் கொள்கைகளாக இருந்தன. அண்ணாத்துரையும் மற்ற கழகக் கண்மணிகளும் யோசித்தார்கள். நாம் இப்படியே இருந்தால் கட்சியும் வளராது, நாமும் வளரமாட்டோம் என்பதை உணர்ந்தார்கள். அரசியலில் இறங்கினால் ஒழிய கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று முடிவு செய்தார்கள்.

அரசியல் என்றால் என்ன? போராட்டம், மறியல், கடையடைப்பு, இத்தியாதிகள்தான். அண்ணாத்துரைக்கு எப்போதும் மாணவர்களின் ஆதரவு உண்டு. அவருடைய பேச்சு வன்மையில் அவர்கள் மயங்கிக்கிடந்தார்கள்.மாணவர்களை அவரால் எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். இதுதான் கட்சியின் ஒரே பலம். அது வரை காங்கிரஸ் கட்சி மாணவர்களுக்கு எந்த விதமான அரசியல் அங்கீகாரமும் தந்ததில்லை. மாணவர்களின் வேலை படிப்பதுதான். அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற கொள்கையில் இருந்தார்கள். அப்போது மத்திய அரசு இந்திக்கொள்கையப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

திமுக பல காலமாக இந்தி எதிர்ப்புக்கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த இரண்டு நிலைகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திமுக தலைவர்கள் முடிவு செய்தார்கள். இதில் உள்ள மற்றொரு சௌகரியம் என்னவென்றால் மாணவர்கள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்களை அரசும் போலீசும் ஒரு கருணை மனோபாவத்துடன்தான் நடத்துவார்கள். இதை நன்கு உணர்ந்திருந்த திமுக தலைமை அனைத்து கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் திமுக மாணவர் அமைப்பை ரகசியமாக ஆரம்பித்தார்கள். திமுக வரப்போகும் பொதுத்தேர்தலில் பங்கேற்கும் என்று விளம்பரம் செய்து தங்கள் கட்சியை அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்தார்கள்.

திரு. பக்தவத்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதல் மந்திரி. அரிசிக்கு மிகவும் தட்டுப்பாடு. இதனால் மக்கள் அப்போதைய அரசின் மீது மிகவும் அதிருப்தியுடன் இருந்தார்கள். இந்த சூழ்நிலையை திமுக பயன்படுத்திக்கொண்டது. மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் மாணவர் அமைப்புகளே நடத்தின. ஆனால் பின்புலத்தில் திமுக வின் மூளை வேலை செய்தது.

போராட்டங்கள் வலுவடைந்தன. மாணவர் தலைவர்கள் முதல் மந்திரியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கச் சென்றார்கள். இங்குதான் பக்தவத்சலம் ஒரு மாபெரும் தவறைச் செய்தார். சூதை சூதினால்தான் வெல்லவேண்டும். இந்த ராஜதந்திரம் அவருக்குத் தெரியவில்லை. மாணவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. திமுக இந்த மனநிலைக்கு நன்றாக எண்ணை ஊற்றி எரிய வைத்தார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. ஊரிலுள்ள அனைத்து போக்கிரிகளும் சந்தடி சாக்கில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 150 பேருக்கு மேல் இறந்தார்கள். இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. எல்லாம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்த போக்கிரிகள்தான். கடைசியில் பக்தவத்சலம் வழிக்கு வந்து ஒருமாதிரியாகப் போராட்டங்கள் ஓய்ந்தன. ஆனால் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனப்பான்மை வளர்ந்து விட்டது.

அடுத்த வருடம் தேர்தலில் திமுக அமோக வெற்றி அடைந்தது. அண்ணாத்துரை முதல் மந்திரியானார். பக்தவத்சலம் காணாமல் போனார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்.

திமுக வின் இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் மாணவர்களின் பங்களிப்பே. இந்த உண்மையை திமுக மறக்கவில்லை. இப்போது அதன் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள். மக்ளுக்கு மதுவிலக்கின் பேரில் திடீரென்று ஒரு வித அபிமானம் தோன்றி விட்டது. இதுதான் நல்ல சாக்கு என்று திமுக களத்தில் இறங்கி மாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை ஆரம்பித்து நடத்துகிறது.

ஆளும் கட்சி இலவசங்களை மானாவாரியாக ஆரம்பித்து விட்டு நிதி நிலைமை மிகப் பற்றாக்குறையில் இருக்கிறது. மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. ஆகவே மதுவிலக்குப் போராட்டங்களை ஒடுக்கியே ஆக வேண்டும். மக்ளின் நலன்களில் ஒரு கட்சிக்கும் ஆசை இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களை கல்லாவை நிரப்பிக்கொள்ளவேண்டும். இதுதான் இந்த இரண்டு கட்சிக்காரர்களின் நோக்கம். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


15 கருத்துகள்:

  1. டாஸ்மாக் கடைகளை அளவிலும், வேலை நேரத்திலும் குறைக்கப்போவதாய் ஒரு அறிவிப்பு ஆகஸ்ட் 15 க்கு வரும் என்கிற வதந்தி இருக்கிறது பார்ப்போம். நோக்கம் எவ்வளவு நல்ல நோக்கமாய் இருந்தாலும் மாணவர்கள் இது மாதிரிப் போராட்டங்களில் ஈடுபடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  2. இலவசங்கள் நிறுத்தினால் மதுக்கடைகளுக்கு அவசியல் இல்லை.

    எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடும் பரிதாபமான நிலை இன்று.

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. அரசியலை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை. 100 க்கு 100 உண்மை.

    அது மட்டுமல்ல. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு மக்களை மயக்குவோர்கள் தம் சுய வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் அல்லது தான் தலைமையேற்ற கட்சியையும் அல்லது தான் தலைமையேற்கும் அரசையும் அய்யன் வள்ளுவன் சொன்ன வழியில் நடத்தக் காணோம். இவையெல்லாம் தன்னையும் தன் சுற்றத்தையும் மேம்படுத்திக் கொள்ளும் வழியே. இது காலம் கடந்தே மக்களுக்குத் தெரிகிறது.

    என்ன செய்ய?

    God Bless You

    பதிலளிநீக்கு
  5. மது விலக்கை எடுத்தவர்களே திமுக தானே. மக்கள் அரசியலையும் மீறி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் அதில் குளிர் காய விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. மதுவை மக்களுக்கு பழக்கி விட்ட " கழக " புன்யாத்மாக்கள், தலைமுறைகள் மாறிவிட்டதால் மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    மதுவிலக்கு கொண்டுவந்தால். மாண்புமிகு பொதுஜனங்கள், குடித்தே தீருவார்கள், செலவிடும் பணம் கஜானாவிற்கு போகாது, வேறு எங்கெல்லாம் போகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

    கையாலாகாதவர்களின் கரங்களில் தான் அரசுஎந்திரம் மாறி மாறி போகப்போகிறது. ஏமாற்று போராட்டங்களும் மாறி மாறி வரப்போகிறது
    விடியல் ஒருநாள் வரத்தான் போகிறது ......
    நிச்சயமாக அதை நாம் யாரும் நம் காலத்தில் பார்க்க போவதில்லை !!!!!!!

    பதிலளிநீக்கு
  7. //இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. //இது முற்றிலும் தவறான செய்தி.னக்கு தெரிந்தே அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ராஜேந்திரன் இறந்திருக்கிறார்.
    மாயவரம் சாரங்கபாணி மாயவரம் A.V.C கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படித்துக் கொண்டிருந்த மாணவர். எஇந்த போராட்டம் போக்கிரிகளால் நடத்த பட்டதல்ல. உண்மையான மாணவர் போராட்டம். அந்த போராட்டம் அன்று நடக்காவிட்டால், இந்தியா முழுதும் ஆங்கிலம் முழுதும் அரசு வேலைவாய்ப்பு பொது தேர்வு மற்றும் அதன் பின் கல்வியிலிருந்து முழுமையாக வெளியேற்றபட்டிருக்கும். அதற்கான முன்னறிவிப்பாக ஒரு சில மத்திய வேலை வாய்ப்பு பொது தேர்வு இந்தியில் மட்டும் நடத்த உத்தரவிடபட்டது உதாரணம். இன்று ஆங்கிலத்தின் மூலம் தகவல் தொழிற்நுட்ப வேலைகளை பெற்றிருக்கும் மாபெரும் வாய்ப்பு இன்றைய இளைய சமூகத்தினருக்கு கிடைத்திருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் பங்கு கொண்டார்கள் என்பது உண்மை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1965 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் நாங்கள் சென்ற ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடந்து அதில் எங்களோடு படிக்துக்கொண்டிருந்த மாணவர் இராஜேந்திரன் பலியானது வரலாறு. இது குறித்து நானும் ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.

      நீக்கு
    2. எழுதுங்கள், நடனசபாபதி. கோயமுத்தூரில் இருந்த எங்களுக்கு சிதம்பரத்தில் அந்தக்காலத்தில் நடந்தவைகள் சரிவரத் தெரியவில்லை.

      நீக்கு
    3. (on googling)மாணவர் ராஜேந்திரன் தவிர, வேறு கொல்லப்பட்ட மாணவர்கள் விவரம் செய்திகளில் காண முடியவில்லை.
      மற்ற பிற எழுவர் தீக்குளித்த தகவல் கீழ்க்கண்ட இணையத்தில்.

      http://www.tamiltribune.com/03/0101-anti-hindi-agitation-history.html

      /மாணவர் இராஜேந்திரன் பலியானது வரலாறு/

      ராஜேந்திரன் பெயர் கூட விக்கிபீடியா கட்டுரையில் இல்லை..
      https://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu

      தூண்டிவிட்டவர்கள் உடனே ஆட்சியை பிடித்தனர். மனம் வைத்திருந்தால் தியாகம் செயதோரின் விவரங்களை திரட்டி அவர்கட்கு பெருமை செய்திருக்கலாம். வரலாற்றில் அவர்கள் பெயரும் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.
      அய்யா சொல்வது கழகங்களின் சந்தர்ப்பவாதம் பற்றியே

      நீக்கு
  8. மக்கள் மாற்று சிந்தனைக்கு வராதவரை மாற்றம் இல்லை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விவகாரங்கள் எல்லாம் மக்கள் கையில் இல்லை, கில்லர்ஜி.

      நீக்கு
  9. மாணவர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு