கார் மீது மரம் விழுந்து 4 பேர் நசுங்கி சாவு. 5 பேர் படுகாயம்.
இந்தச் செய்தி தினத்தந்தி, கோவை பதிப்பில் 4-8-2015 அன்று வெளியாகி இருந்தது. காரை ஓட்டியவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்துவிட்டார்கள். அதில் காரை ஓட்டியவரின் மனைவியும் ஒருவர்.
பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது கோபி அருகில் பலத்த மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது ரோடில் இருந்த ஒரு மரம் காரின் மீது விழுந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இது ஒரு மிக துர்ப்பாக்கியமான செய்தி.
இந்த துக்கத்திற்கு அப்பால் நாம் யோசித்தால் இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று கூறுவதற்கு வழி ஏதுமில்லை. ஆனால் காரை ஓட்டியவர் ஒரு ஜோதிடர். இந்த மாதிரி ஒரு விபத்து நேரிடக்கூடும் என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய பரிதாபம்.
இதிலிருந்து நான் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஜோதிடத்தின் மூலம் நடக்கப் போவதைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்பதே. அப்படியிருக்க ஏன் பலர் இந்த ஜோதிடத்தை நம்பி தங்கள் குழந்தைகளின் கல்யாண காரியங்களை தள்ளிப் போடுகிறார்கள் என்பதுதான் இந்த 21ம் நூற்றாண்டின் அதிசயம்.

வெட்டிப்பேச்சு உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"கோபியில் ஒரு விபத்து.":
பதிலளிநீக்குஉண்மைதான்.
தன் தலைஎழுத்தை அறியாதவர் ,பிறரின் தலைஎழுத்தை சொல்ல முடியும் ?
பதிலளிநீக்குநம்புபவர்களை சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவை ரசித்தேன் !
அதானே!
பதிலளிநீக்குசிந்தனையைத் தூண்டிய கருத்து. நன்றி.
பதிலளிநீக்குஐயா, வணக்கம். தங்கள் பதிவிற்கு வாதம் செய்வதற்காக இதனை எழுதவில்லை. ஒரு விளக்கத்திற்காக எழுதுகிறேன். ஒரு கணித ஆசிரியர் சரியாகக் கணிதம் சொல்லித்தரவில்லை என்பதால், கணிதம் தவறு என்று பொருள் அல்ல. சோதிடத்தைப் போல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதும், விவாதத்திற்கு உரியதுமான பொருள் உலகில் எதுவுமே இல்லை. சோதிடம் என்பது தவறாகப் போவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. சோதிடம் என்பது கணிதம் சார்ந்த அறிவியலாக இருக்கக் வாய்ப்புகள் மிக அதிகம். இதுபற்றி நீண்ட தொரு ஆய்வுக் கட்டுரையை எனது வலைதளத்தில் எழுதிவருகிறேன். நேரமிருந்தால் வருகை தாருங்கள். [nimiththigan.blogspot.com.] ஒரு மிக முக்கியத் தகவல் - எனக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாது.
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். இந்த சோதிட விஷயங்களைப் பற்றி நீங்கள் உங்கள் பதிவில் எழுதி வருவதைப் பார்த்தேன்.
நீக்குசோதிடத்தை விஞ்ஞான ரீதியில் எழுதி வருகிறீர்கள். சாமானியனான என்னைப் போன்றவர்களுக்கு அதிலிருந்து சாரத்தை எடுத்துக்கொள்வது மிகக் கடினம்.
வாதம் தவறல்ல. ஆனால் அதனால் ஏதாகிலும் பயன் விளையவேண்டும். வெறும் வாதம் மட்டும் எந்தப் பயனையும் விளைவிக்காது.
உங்கள் தளத்தில் சாதாரண ஜனங்களுக்குப் புரியும் வகையில் எழுதினால் நானும் கருத்துகள் கூறுகிறேன். இப்போது எழுதும் பாணி மயக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது.
ஐயா
நீக்குகடவுள் நம்பிக்கையைப் போல ஜோதிடம் ஒரு நம்பிக்கையாக இருந்து விட்டுப் போகட்டுமே. கோவிலில் உள்ள பூசாரி தொழில் செய்வதைப் போன்று தான் ஜோதிடரும் அவருடைய தொழில் செய்கிறார். அவ்வளவு தான்.
ஜோதிடம் உங்களுக்கு தேவை இல்லை என்றால் விட்டு விடுங்கள். அவ்வளவு தான்.
ஏன் நீங்களே கூட கிடாவெட்டு நவம்பர் 15 என்று சிலருக்கு அவசியமில்லை என்று தோன்றும் காரியங்கள் செய்யவில்லையா.
தெரிந்தோ தெரியாமலோ ஜோதிடத்தை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக அதிகம் உள்ளனர்.
நான் ஜோதிடத்தை ஆதரிப்பவனும் இல்லை. எதிர்ப்பவனும் இல்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகளுக்கு நாள் பார்த்து தான் கல்யாணம் செய்து வைத்தேன். அது ஒரு compromise.
--
Jayakumar
நடக்கப் போவதை சொல்லி விட்டால்...... அது முடியாத ஒன்று தான்!
பதிலளிநீக்குநியாயமான கேள்விதான் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
கடவுளையே களவாடிச் சென்றுவிடுகிறார்கள்
பதிலளிநீக்குஉழைப்பை நம்புவோம்
நன்றி ஐயா
தம +1
சோதிடத்தை நம்பி பலரும் தங்கள் இளமையையும் வாழ்வையும் தொலைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த சோதிட மோகம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி. சோதிடத்தில் சில கருத்துக்களில் எனக்கும் உடன்பாடில்லை. சில கருத்துக்கள் நீண்டதொரு ஆய்விற்கு உட்பட வேண்டியுள்ளது. (எ.கா. கும்பகோணம் குழந்தைகளின் கொடிய மரணம்). சில கருத்துக்கள் ஏற்புடையவையாக, நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்துதான் முடிவிற்கு வரமுடியும். அதன்பெயர்தான் பகுத்தறிவு. பொத்தாம் பொதுவாக உண்மை என்றோ பொய்யென்றோ கருத்துரைப்பது தவறு. எளிய முறையில் எழுதுவதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இதனை நான் ஆய்வு நோக்கில் எழுதுவதாலும், முழுமை அடைந்தபின், தங்களைப் போன்றோர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி, நூலாக வெளியிட இருப்பதாலும் சற்று நல்ல நடையில் எழுதிவருகிறேன். அதுமட்டுமின்றி, இதுவே எனது எழுத்து நடையாகவும் மாறிவிட்டது. முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா. தன் அடுத்த வேலை உணவு குறித்துக் கூட அறிய முடியாத கிளிப்பிள்ளைக்காரனிடம் தன் எதிர்காலத்தை ஒப்படைக்கின்றனர் பலர்....
பதிலளிநீக்குஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து சிறிய காரில் பத்து பேர் பயணித்ததாக ஒரு நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
பதிலளிநீக்குஇருக்கும்.
நீக்குவாழ்க்கையில் நிறைய compromise செய்யவேண்டித்தான் இருக்கிறது. நானும் அதை செய்கிறேன். ஏனென்றால் நான் ஒரு தனி மனிதன் அல்ல. என் குடும்பத்தில் என் சமூகத்தில் ஒரு உறுப்பினன். அப்படி இருக்கு வேண்டு நிறைய compromise செய்யத்தான் வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்கு