இந்த வசனத்தை கிராமங்களில் உள்ள வயசானவர்கள் அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் இந்த வயசில் உள்ளவர்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்கள் செய்வார்கள்.
அது என்ன வயசு என்று கேட்கிறீர்களா? 16 முதல் 22 வரையிலான வயசுதான் ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு.
செய்தித் தாள்களில் இப்போது இருவகையான விபத்துகள் அடிக்கடி வருகின்றன. ஒன்று இருசக்கர வாகனங்களின் விபத்து. இன்னொன்று தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களைப் பற்றிய செய்தி.
இந்த இருவகை விபத்துகளிலும் உயிரிழப்பவர்களின் வயதைப் பார்த்தால் இந்த ஒடுகிற பாம்பை மிதிக்கும் வயசாகத்தான் இருக்கிறது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இவ்வாறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் இந்த இளைஞர்களுடைய பெற்றோரின் நிலை எப்படியிருக்கும்?
ஏன் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இளைஞர்கள்
பதிலளிநீக்குவேகம் வேகம் வேகம்
என்றே வண்டிகளில் பறக்கிறார்கள்
பாவம் பெற்றோர்கள்
தம +1
முக்கியமாக தாய்மார்கள் தான் இதற்கு காரணம் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...!
பதிலளிநீக்குஉண்மை. தாய்ப்பாசத்திற்கு கண்ணில்லை.
நீக்குblog background நல்லாத்தான் இருக்கு.... ஆனால் படிக்க...?
பதிலளிநீக்குஅது வந்து, தனபாலன், காலைல 3 மணிக்கு எந்திரிச்சனா, தூக்கக் கலக்கத்தில என்னவோ பண்ணிப்புட்டேன் போல இருக்கு. இப்ப சரியா இருக்கா, பாத்துச் சொல்லுங்க.
நீக்குஇள ரத்தம் அப்படித்தான் இருக்கும். இக்கட்டுரையைப் படிக்கும் நான் அக்காலகட்டத்தில் செய்தனவற்றை நினைத்துப்பார்த்தேன். சற்றே வேதனையாகத்தான் இருந்தது.
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குகொஞ்ச நாளாக நீங்கள் விபத்து பற்றிய அதிர்வுகள் (பதிவுகள்) அதிகம் இடுகிறீர்கள். புது கார் மரத்தில் மோதி விபத்து, கோபியில் ஒரு விபத்து, ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு என்று தொடராக எழுதுகிறீர்கள். உங்கள் உள்மனதில் எதோ விபத்து பற்றிய எச்சரிக்கை அவ்வப்போது வெளிவருகிறது.ஆஸ்தான மன நல மருத்துவரைக் காண்பது நல்லது.
--
Jayakumar
நீங்கள் கணித்தது சரிதான். வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போதே, காரானாலும் சரி, நடையானாலும் சரி, இந்த பயம் வந்து விடுகிறது. பயம் இருக்கும் வரைதான் நாம் ஜாக்கிரதையாக இருப்போம். பயம் எப்போது நம்மை விட்டு போய்விடுகிறதோ அடுத்த நொடியில் நமக்காக ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று பொருள்.
நீக்குஐயா
பதிலளிநீக்குதவறாக எண்ணவேண்டாம்.
பயம் வேறு எச்சரிக்கை வேறு. எச்சரிக்கையாய் இருப்பது என்பது ஒரு காரியத்தைச் செய்யும் முன்னரே அதன் பின்விளைவுகளை தெரிந்து தவிர்ப்பது ஆகும். உ-ம் ஒன்வேயில் போனால் பைன் கட்டவேண்டும், ஆகையால் போகாதே என்று எச்சரிப்பதாகும். ஆனால் பயம் என்பது நாம நேரா போனாலும் ராங் சைடில் எவனாவது வந்து இடிச்சுடுவானோ என்று பயப்படுவது போன்றது. பயம் இருக்கும்போதுதான் murphy's law வேலை செய்யும். ஆகவே பயத்தை விடுங்கள். எச்சரிக்கையாய் இருங்கள்.
வெளியில் செல்லும்போது யாராவது துணை இருந்தால் பயம் இல்லாமல் செல்லலாம்.
--
Jayakumar
நீங்க சொல்றது கரெக்ட்டுங்க. நானும் ரொம்ப நாளா ஒரு நல்ல துணையைத் தேடிக்கிட்டுதான் இருக்கேனுங்க. கெடைக்கமாட்டேங்குதுங்களே.
நீக்குவிவேகமில்லாத வேகம்.
பதிலளிநீக்குகாலையில் பதிவின் பின்னணி வேறு மாதிரி இருந்தது. அவ்வளவாக லயிக்கவில்லை. கருத்திட இப்போது வந்தபோது மாற்றி இருக்கிறீர்கள் நல்லது, எப்போதும் பயந்து கொண்டு இருந்தால் நல்லதல்ல . எச்சரிக்கை அவசியம்தான்.
பதிலளிநீக்குகாலையில் மூன்று மணிக்கு என்னமோ செய்து விட்டேன். கசாமுசா ஆகிவிட்டது. அப்புறம் தனபாலன் சுட்டிக்காட்டிய பிறகு மாற்றிவிட்டேன். இது படிப்பதற்கு சரியாய் இருக்கிறதென்று நினைக்கிறேன்.
நீக்குஇதற்க்கு இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு காரணகர்த்தா ஆகிறார்கள் காரணம் விளம்பரங்களில் வண்டியில் எப்படி பறப்பது என்று விளம்பரம் செய்கிறார்கள் அறியாத இந்த வயதுக்காரர்கள் எதையும் செய்யத்துணிந்து விடுகிறார்கள் பெற்றோர்களின் நிலைதான் கஷ்டம் எந்த வீட்டிலுமே பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளைகளே இல்லை என்று சொல்லும் சூழல் இந்த வகை விளம்பரங்களை அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டும்.
பதிலளிநீக்குவேகம் தரும் வேதனை. புரிந்து கொள்ளாத வயது.
பதிலளிநீக்குமனதை வேறு சிந்தனையில் லயிக்க விட்டால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். குழப்பம் தீரும்.
பதிலளிநீக்குதேவையில்லாததைப்பற்றி கவலை கொள்ளவேண்டாம்.
கீதை படிக்கலாம். கொஞ்சம் மனம் நிலையான பிறகு வழக்கம்போல் மாறலாம்.
மனநிலை உடல் நிலையை பாதுகாப்பாக வைத்திருக்கும் முதல் கருவி.
பிளாக் பளிச் சென்று இருக்கிறது.
God Bless You
வேகப் பாம்பு கடிக்கிற பாம்பு
பதிலளிநீக்கு