வெற்றி நமதே. ஒருவாறாக விண்டோஸ் 10 ஐ எனது கணினியில் நிறுவி விட்டேன். இதற்காக ஐந்து நாட்கள் ஆராய்ச்சி செய்து மூன்று இரவுகள் தூக்கம் விழித்து பாடுபட்டேன்.
இந்த விண்டோஸ் 10 பதிப்பை வெளியிடுவதற்கு பல நாட்கள் முன்பாகவே உங்களுக்கு இந்த பதிப்பு வேண்டுமா? வேண்டும் என்றால் முன்பதிவு செய்து கொள்ளவும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். நானும் ஆவலுடன் முன்பதிவு செய்து கொண்டேன். ஜூலை மாதம் 29ந் தேதி இந்தப் பதிப்பு உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. வெளியிட்டவுடன் முன்பதிவு செய்தவர்களுக்கெல்லாம் இந்த பதிப்பை நாங்களாகவே உங்கள் கணினிக்கு அனுப்பி விடுவோம். இந்தப் பதிப்பின் கோப்புகள் எல்லாம் வந்து சேர்ந்தவுடன் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும். அந்த அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் மவுஸினால் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் என்றெல்லாம், ஈமு கோழிக்காரன் சொன்னது போல் ஆசை வார்த்தைகள் சொன்னார்கள்.
நானும் இதை முழுதாக நம்பினேன். ஜூலை 29ந் தேதி வந்தது. இணையத்தளங்களில் எல்லாம் சொர்க்கத்திற்கு ரோடு போட்டாயிற்று. அவரவர்கள் தங்கள் தங்கள் வாகனத்தில் சொர்க்கத்திற்குப் புறப்பட வேண்டியதுதான் என்று பயங்கரமாக விளம்பரங்கள் வந்தன. நானும் வாயை ஆவென்று திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. ரோட்டையும் காணோம், வாகனத்தையும் காணோம்.
என்ன ஆயிற்று என்று விசாரித்தால், மைக்ரோசப்ட் காரன் மெதுவாகச் சொல்கிறான். இந்த விண்டோஸ் 10 க்கு ஏகப்பட்ட கிராக்கி. லட்சக்கணக்கான் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் இந்தப் புரொக்ராமை கொஞ்சம் கொஞ்சமாக, அலை அலையாக எல்லோருக்கும் அனுப்புகிறோம். உங்களுக்கு வந்து சேர சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஆகலாம். நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என்கிறான். எப்படி இருக்கு பாருங்க கதை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.
எனக்குள் இருக்கும் ராட்சதனை மைக்ரோசாப்ட் காரன் உசுப்பி விட்டு விட்டான். அந்த ராட்சதன் சும்மா இருப்பானா? இரவு பகலாக சல்லடை போட்டுத் தேடி ஒரு குறுக்கு வழி இருப்பதைக் கண்டு பிடித்தான். பார்க்க- http://drpkandaswamyphd.blogspot.in/2015/08/windows-10-installation.html உடனே அந்த வழியில் போய் இந்த விண்டோஸ் 10 ஐ என் கணினிக்குக் கொண்டு வந்து நிறுவியாயிற்று. அனாலும் இந்தக் குறுக்கு வழியில் கல்லும் முள்ளும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாகவும் மெதுவாகவும்தான் நடக்க முடியும். எப்படியோ தீவிர முயற்சி செய்து லட்சியத்தை அடைந்து விட்டேன்.
இந்த Teething Trouble என்பார்களே, அந்த தொந்திரவு இருக்கிறது. அந்தப் பற்களையெல்லாம், எனக்குப் பல் பிடுங்கின மாதிரி பிடுங்கி எறிந்து விட்டால் புது வேலைக்காரி ஒழுங்காக வேலை செய்வாள் என்று எதிர்பார்க்கறேன். பாருங்கள், இப்போ இந்தப் பதிவில எழுத்துக்களை பழைய மாதிரி கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் விடமாட்டேன். எப்படியாவது, எதையாவது நோண்டி சரி செய்து விடுவேன். அது வரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
எப்படியோ இந்த ரகளையில் தமிழ் மணம் ரேங்க் 6 லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது ஒன்றே ஆறுதலான விஷயம்.
வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅயராத முயற்சியால் வெற்றியை எட்டிப் பிடித்துவிட்டீர்கள். ஜன்னலைக் கைப்பற்றியமைக்கு வாழ்த்துகள் ஐயா. இந்த முயற்சியும் ஆர்வமும் எல்லோருக்கு இருந்தால் எங்கோ போய் விடலாம். நாங்கலெல்லாம் பின்தங்கியுள்ளதற்கு வெட்கப் படுகிறோம்
பதிலளிநீக்குகடைசியிலே நான் சொன்ன ஜன்னல் (குறுக்கு வழி) வழியிலே தான் இன்ஸ்டால் பண்ணியிருக்கீங்க. இனிமேல் தான் இருக்கிறது தொந்தரவு. புது வேலைக்காரி புது துடைப்பம் புது பாத்திரம் அது இது என்று கொஞ்சம் உங்களையும் வேலை வாங்குவாள். கொஞ்சம் உஷார் ஆக இருங்க. சில பழைய பாத்திரங்களை அவளுக்கு உபயோகப் படுத்த தெரியாது.
பதிலளிநீக்குJayakumar
வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குதங்களின் இன்னொரு சோதனைக்(த)களம் இருப்பது இன்று தான் தெரியும்...!
தலைப்பைப் பார்த்ததும் நினைத்தேன், தாங்கள் சாதித்துவீட்டீர்கள் என்று. பாராட்டுகள். எப்படியும் நீங்கள் சரிசெய்துவிடுவீர்கள்என்று எங்களுக்குத் தெரியும்.
பதிலளிநீக்குஇனி ஆஸ்தான மனநல நிபுணரிடம் போக வேண்டி இருக்காதுஎன்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். இதெல்லாம் எனக்கு க்ரீக் அண்ட் லத்தீன் .
பதிலளிநீக்குலட்சியத்தை விரைவில் தொட வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
சூப்பர் ஸார்!
பதிலளிநீக்கு#தமிழ் மணம் ரேங்க் 6 லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது ஒன்றே ஆறுதலான விஷயம்.#
பதிலளிநீக்குஆறுதலா :)
ஓவ்வொரு ஞாயிறும் வெளியாகும் முன்னணி வலைப் பதிவுகள் பட்டியல் தமிழ் மணத்தில் வராத காரணம் என்னவோ ?தெரிந்தால் சொல்லுங்கள் அய்யா !
I don't know, Bagavanjee
நீக்கு6லிருந்து 8...
பதிலளிநீக்குரொம்ப உயர்ந்துவிட்டீர்கள்...
உங்கள் வலைத்தளம் நுழைந்தவுடன், ”ஆத்தா நா பாஸாயிட்டேன்” – என்று பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி ஓடிவரும் காட்சி ப்ளாஸ் பேக்காக ஓடியது. விண்டோஸ் – 10 உங்கள் அனுபவம் எப்படி? முழுக்க பார்த்த பின்புதான் என்னால் எதுவும் சொல்ல முடியும்.
பதிலளிநீக்குசின்னப் பிள்ளை போன்ற உங்களது குதூகலம்... படிக்கவே மகிழ்வாய் இருக்கிறது. மிகவே ரசித்தேன்.
பதிலளிநீக்குGod Bless You
நன்றி பல
நீக்கு