Kanags விக்கிப்பீடியாஇல் உங்களுக்கு ஒரு புதிய செய்தியினை விட்டுச்சென்றுள்ளார்
அனுப்புனர் : விக்கிப்பீடியா wiki@wikimedia.org
கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்[தொகு]
வணக்கம், பழனி.கந்தசாமி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்றுஎன்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
என்னுடைய கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட சுட்டிக்குப் போகவும்.
http://swamysmusings.blogspot.com/2011/08/1.html
வலைப் பூதான் நமது ஏரியா ஐயா
பதிலளிநீக்குநமது எண்ணங்களைஎழுது வலைப் பூதான் சிறந்தது
வலைப் பூவில் வாசம் செய்வோம்
தம +1
நம்ம ஜம்புலிங்கம் ஐயாவிடம் பயில்வோம் ஐயா...
பதிலளிநீக்குஉங்கள் அனைவரோடும் சேர்ந்து எழுதவும், பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன். நன்றி.
நீக்குஅனுபவம்தான் முதல் பாடம். அடுத்த முயற்சியில் சிறந்த படைப்புகளை நீங்கள் தர முடியும்!
பதிலளிநீக்குவிக்கிப் பீடியா தேடலுக்கான ஒரு பிரிவு. அதில் கட்டுரைகள் எழுதும்போது உண்மை . மற்றும் உண்மையைத்தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. நிறைய விஷயங்கள் நம்பகமாகச் சேகரிக்க வேண்டும். ஏதோ எளிதான காரியம் போல் நினைக்கக் கூடாது.
பதிலளிநீக்குபோதிய செய்திகள் ஆதாரங்களோடு இணைக்கப்படவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். சில பதிவுகளை எழுத ஆரம்பித்தாலே எழுதுவது எளிது என்பது புரிந்துவிடும்.
நீக்குஇது ஒரு அனுபவம்தானே ஐயா!
பதிலளிநீக்குஉங்கள் துறை சார்ந்த பல செய்திகளைத் தங்களால் தர இயலுமே!
இது சரியான யோசனை. தகவல்களை ஆதரத்துடன் தருவது மிக அவசியம். அப்போதுதான் நம்பகத்தன்மையோடு அவைகளை மற்றவர்கள் உபயோகப் படுத்த முடியும்.
நீக்குநான் முன்னரே கூறியது போல நீக்கப்பட்ட எனது முதல் கட்டுரையின் தலைப்பு சோழ நாட்டில் பௌத்தம் என்பதாகும். பின்னாளில் விக்கிபீடியர் ஒருவர் தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஆரம்பிக்கக் கூறினார். மிகவும் சிரமப்பட்டு எழுத ஆரம்பித்துவிட்டேன். இப்போது அக்கட்டுரையைப் பார்க்கலாம். தேவையான இணைப்புகளை ஆங்காங்கே தருவது முக்கியமாகும். தங்களது ஆலோசனைப்படி பழனி கந்தசாமி ஐயா அவர்கள் துறை சார்ந்த செய்திகளைத் தர முயற்சிக்க இதன்மூலம் உங்களுடன் சேர்ந்து நானும் வேண்டுகிறேன்.
நீக்குஇப்போது புரிகிறது. அதாவது விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது போல் எழுதும் விஷயங்களுக்கு ஆதாரங்கள் மேற்கோள் காட்டி எழுத வேண்டும். பதிவு போடுகிறமாதிரி நம் கற்பனைகளுக்கு இங்கு இடம் இல்லை. சரிதானா, முனைவர் ஜம்புலிங்கம் அவர்களே. பண்ணீடலாம். முயற்சிக்கிறேன். நாம் எழுதாத ஆய்வுக் கட்டுரைகளா? ஒரு கை பார்த்துடறேன்.
நீக்குநம்மை முதன்மைப்படுத்தக்கூடாது, நம் கட்டுரைகளோ, வலைப்பூக்களோ ஆதாரங்களாகக் காட்டப்படக்கூடாது. ஒரு பொருண்மை தொடர்பாக எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பாக உள்ள அச்சு வடிவிலான மற்றும் இணைய தளத்தில் உள்ள செய்திகளைத் தொகுத்து ஓரிடத்தில் வைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு சொற்றொடருக்குமோ, ஒவ்வொரு பத்திக்குமோ அடிக்குறிப்புகள் எனப்படும் சான்றாதாரங்கள் தேவை. விக்கிபீடியாவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பின்வரும் இணைப்பில் காணலாம். தாங்கள் அவற்றைகூட மாதிரிக்கு வைத்துக்கொள்ளலாம். மறுபடியும் கூறவிரும்புகிறேன். நானும் சிறிதளவே தெரிந்துவைத்துள்ளேன். தெரிந்தவரை பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளேன். களத்தில் இறங்குங்கள். ஓரிரு கட்டுரைகள் வந்தபின் நமக்கு அசாத்தியத் துணிவு வந்துவிடும். உங்களது மனத்திண்மையை நாங்கள் அறிவோம். வாழ்த்துக்கள்.
நீக்குhttp://tools.wmflabs.org/xtools/pages/?user=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects
அன்புள்ள ஜம்புலிங்கத்திற்கு,
நீக்குஉங்கள் குறிப்புகளுக்கு நன்றி. இது ஏறக்குறைய விஞ்ஞான சஞ்சிகைகளுக்கு கட்டுரை அனுப்புகிற மாதிரி, ஏன் அதை விடவும் கடினமாகவும் இருக்கும் போல இருக்கிறது. அத்தனை செய்தாலும் எழுதினவருக்கு எந்த ஒரு பலனும் இல்லை. அவர் பெயர் கூட அந்தக் கட்டுரையில் இருக்காது போல் தோன்றுகிறது.
நம் பணிக்காலம் முழுவதும் இந்த வேலையைத்தான் செய்து வந்தோம். அது மாதிரி பணி ஓய்வு பெற்ற பிறகும் செய்வதென்றால் மெத்தக் கடினம்.
எனக்கு இந்த விக்கிபீடியாவில் எழுத முடியும் என்று தோன்றவில்லை. நமக்கு பதிவுலகம்தான் சரி. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உடனடியான வடிகால் பதிவுகள்தான். இனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி நான் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
எந்த ஒரு முடிவினையும் தெளிவாக எடுக்கும் தங்களின் மனத் தெளிவு பாராட்டத்தக்கது. தாங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். தங்களின் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து பதிவுகள் மூலமாக வலைப்பூவில் சந்திப்போம்.
நீக்குஅனுபவம் கொடுக்கும் பாடமே மீண்டும் உங்களை அதில் சிறப்பான கட்டுரையைப் பதிய வைக்கும் ஐயா...
பதிலளிநீக்குஇது தோல்வி அல்ல... வெற்றிக்கான முதல்படி...
முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாங்கள் வெளியிட்ட புரதங்கள் மற்றும் குளுக்கோஸ் பற்றிய பதிவுகளை விரிவுபடுத்தி .விக்கிபீடியாவில் வெளியிடலாமே?
விக்கிபீடியாவில் கேட்கும் ஆதாரங்களைக் கண்டு பிடிக்க பெரும்பாடு படவேண்டியிருக்கும். எனக்கு அந்த வேலை சரிப்படாது. மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது எழுத பதிவுகள்தான் எனக்கு சரிப்படும்.
நீக்குஇங்கு நானே ராஜா, நானே மந்திரி. என்னைக் கேட்பதற்கு யாரும் கிடையாது இதுவல்லவா எழுத்துச் சுதந்திரம். என் கருத்து ஒவ்வொன்றிற்கும் ஆதாரம், அதாவது அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானப் பிரசுரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம், கொடுக்கவேண்டுமென்றால், அப்பாடி, இது நமக்கு ஒத்து வராது.
நகைச்சுவையான
பதிலளிநீக்குபதிவுகள்தான்
தேவை.
அதற்கு தங்களின்
வலைப்பதிவே
பொருத்தமான
இடம்.
(விக்கிபீடியாவையும்
விடாதீர்கள்.!)
அனுபவம் பல பாடங்களை தருகிறது. நேரம் கிடைப்பின் துறை சார்ந்த விஷயங்களை அங்கேயும் எழுதுங்கள்.
பதிலளிநீக்கு