புதன், 18 பிப்ரவரி, 2009

பொது சேவை-1

பொது சேவை-1
ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.
ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள்.
இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது. பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்- காகத்தான்.
இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்த்தியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான். ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.
தொடரும்.....

4 கருத்துகள்:

  1. //உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை// ஐயா! யார் சொன்னது 'மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது- மணி கட்டிய மாடு சொன்னால் கேட்கும்'இப்போ காவிகட்டிய நித்தி சொல்லைக் கேடகவில்லையா?ஆகவே நீங்கள் கெட்டப்பை மாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. யோகன்-பாரிஸ் அவர்களுக்கு,

    என்னுடைய ஒரு வருடத்திற்கு முந்தைய பதிவைப்பார்த்து பின்னூட்டமும் போட்டிருக்கிறீர்கள். மிகமிக நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் எல்லாப் பதிவுகளையும் படிக்கிறேன். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு