செவ்வாய், 17 நவம்பர், 2009

கேள்வி பதில்?!


கேள்வி பதில்?!
அநேகமாக எல்லோரும் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தைப்பார்த்து ரசித்திருப்பார்கள. அதில் சிவாஜி ஒரு பாட்டில் ‘பாட்டும் நானே, பாவமும் நானே என்று ஒரு பாட்டு பாடுவார். என்னுடைய பதிவை என்ன செய்தும் பிரபலப்படுத்த முடியவில்லை. இப்படி கேள்வி-பதில் போட்டாலாவது பிரபலமாகிறதா என்று முயற்சிக்கிறேன்.
1.     கேள்வியின் நாயகனே! சில பதிவுகளில் மட்டும் ஹிட்டுகள் லட்சக்கணக்கில் வருகிறதே? அது எப்படி?

அது அந்தந்த பதிவுகளில் உள்ள ஹிட் கவுண்டரைப்பொருத்த்து. தனியாக ஆர்டர் கொடுத்து செய்யவேண்டும்.

2.     நீங்கள் மட்டும் ஏன் இலக்கியத்தமிழில் பதிவு போடுகிறீர்கள்?

மெட்ராஸ் பாஸைலெ என்கு ஜாஸ்தி பலக்கம் லேது.

3.     மனைவி அடித்தால் எப்படி தாங்குவது?

வடிவேலுவிடம் ஆறு மாதம் பாடம் படிக்கவும்.

4.     ஒரு நல்ல பதிவரின் இலக்கணம் என்ன?

நல்ல கேள்வி. டாஸ்மாக்கில் எட்டு ரவுண்ட் போட்டபிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும.5.     என்னென்ன பதிவுகள் போடலாம்?

எந்த கருமாந்தரத்தையும் போடலாம். ஆனால் தலைப்பு மட்டும் அட்டகாசமாக இருக்கவேண்டும்.இது ஒரு சரியான மொக்கைப்பதிவாக வந்துவிட்டது.
மீதி அடுத்த பதிவில்..
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக