வியாழன், 24 பிப்ரவரி, 2011

டெம்ப்ளேட் கமென்ட்டுகள்.


பதிவுகள் எக்கச்சக்கமாகி விட்டன. எல்லாப் பதிவுகளையும் படிக்க நேரம் போதவில்லை. எல்லாப்பதிவர்களும் தங்கள் பதிவுகளில் ஓட்டுப் போடவும், பின்னூட்டம் போடவும் வற்புறுத்துகிறார்கள். ஒரு மரியாதைக்காக ஓட்டுப் போடலாம் என்று பார்த்தால் ஓட்டுப்பெட்டிகள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கின்றன. 
 
அது போகட்டும், பின்னூட்டமாவது போடலாம் என்று பார்த்தால் அந்த சமயம் பார்த்து நம் மூளை (இருந்தால்தானே என்பவர்களுக்கு தனியாக ஒரு பதிவு போடுகிறேன்) அந்த சமயம் பார்த்து ஊர் மேயப்போய் விடுகிறது. அப்டிப்பட்ட சமயங்களில் உதவுவதற்காக சில “டெம்ப்ளேட்” கமென்ட்டுகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறேன். உசிதம் போல் உபயோகித்துக் கொள்ளவும். நன்றி எல்லாம் வேண்டாம். இதுநாள் வரை சேர்ந்த நன்றிகளே வீடு கொள்ளாமல் வாசலில் போட்டு வைத்திருக்கிறேன்.


1.     ரொம்ப நல்லா இருக்கு :-)
2.     very interesting video. :-)
3.     நல்லாயிருக்கு... சகோதரா
4.     போடு முத வெட்டை
5.     ரசிக்க வைத்த வரிகள்
6.     நச் வரிகள்
7.     சூப்பர்! கலக்கிட்டீங்க பாஸ்!
8.     நல்லாய் இருக்கு சார்
9.     arumaiyana pathivu....
10.  மீ த பர்ஸ்ட்டேய்...
11.  mmmmmm....
12.  என்ன சொல்வதென்றே தெரியவில்லை……………………கலக்குங்க பாஸ்..
13.  செம நக்கல். ஆட்டோ வர போகுது பாத்து பத்திரமா இருங்க ....:))
14.  நல்ல பதிவு . . . நன்றி . . .
15.  i got the vada
16.  ஆட்டோ கன்பார்ம்...
இவ்வளவு போதும்னு நினைக்கிறேன். கும்மி அடிப்பது தனிக்கலை. அதைப்பற்றி பின்னால் ஒரு ஸ்பெஷல் பதிவு போடுகிறேன்.

ரொம்ப ரொம்ப நல்ல பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்.
17.  0 comments:


 பின்குறிப்பு:  ஒரு  அட்டகாசமான (அக்கிரமமான ?) படம் போட்டிருந்தேன். படம் நல்லா இல்லைன்னு நாலு பேரு சொன்னதால படத்தை மாத்தீட்டேன்.

24 கருத்துகள்:

 1. பட்டாபட்டி.... said...

  //ரொம்ப நல்லா இருக்கு :-)

  ஹி..ஹி

  படம்....//

  செம ஸ்பீடு பட்டாபட்டி. பதிவப் போட்டுட்டு திரும்பறதுக்குள்ள கமென்ட்.

  பதிலளிநீக்கு
 2. உம்ம நேர்மை என்ன சிந்திக்க வச்சிடுச்சி..........இத தாம்பா நானும் சொல்றேன்.......அரப்பக்கதுக்குபதிவு போட்டா எல்லோரும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிக்க முடியும் அத விடுத்து என்னமா கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுராங்க........சாரி ஒரு ப்ளோ சொல்லிட்டேன்......ஹி ஹி!

  பதிலளிநீக்கு
 3. சத்தியமா அவங்க தலையில் கை வைத்திருப்பதை தவிர வேற எதையும் பார்க்கவில்லை.

  மற்றபடி பதிவு: கமென்ட் சஜஷன் எண் ஐந்து.


  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  பதிலளிநீக்கு
 4. கோவையில் நல்ல மழை,குளுகுளு வென ஊர் இருபதாக கேள்விப்பட்டேன். உண்மைதான்.
  எனக்கும் கூட வங்கே வந்துவிட ஆசைதான். ஆனால் தலை எழுத்து வேறுமாதிரியல்லவா இருக்கிறது.

  காலையில் காபி கிடைத்ததா? அண்ணி ஊரில் இல்லை போலும்? நடக்கட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. ஹெ ஹெ... சார் பயங்கர முன்னேற்றம்தேன் போங்க. பதிவுலகின் encyclopedia ஆயிடுவீங்க போலவே? எப்படி இப்படியெல்லாம்? பின்றீங்க சார்...


  (மேலே எழுதியது டெம்ப்ளேட் கமெண்ட் இல்லையே?? ஹெ ஹெ ஹெ )

  பதிலளிநீக்கு
 6. //ரொம்ப ரொம்ப நல்ல பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்.
  17. 0 comments:
  18. Post a Comment//

  இதை மிகவும் ரசித்தேன்...அட இது டெம்ப்ளேட் கம்மென்ட் இல்ல சார்...முழுசும் படிச்சுட்டு தான் இந்த கம்மென்ட்..:))

  பதிலளிநீக்கு
 7. அருமை பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  இது எப்படி இருக்கு

  சென்னையில் நான் கண்ட உலகம்

  http://speedsays.blogspot.com/2011/02/blog-post_23.html

  பதிலளிநீக்கு
 8. சார், கமெண்ட் போடற வேலையக் கூட ஈஸியாக்கிட்டீங்க. உங்க பின்னூட்ட லிஸ்ட்ல, 13வதுதான் இந்தப் பதிவுக்கான என்னோட பின்னூட்டம். ;-))))))

  பதிலளிநீக்கு
 9. தலையில் கைவைத்திருக்கும் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து எனது இதயம் கனத்தது; கண்கள் பனித்தன - இடுகையை வாசித்தபோது என் நெஞ்சம் பதைபதைத்து விட்டது.

  இது டெம்பிளேட் பின்னூட்டமில்லையே! :-))))

  பதிலளிநீக்கு
 10. ஓட்டுப்பெட்டிகள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கின்றன. //
  ரொம்ப எரிச்சல் ப்டுத்தும் விஷயம்...

  பதிலளிநீக்கு
 11. mmmm....
  இந்த பதிவை bookmark பன்னி வைத்துவிட்டேன்.அடிக்கட்டி உதவும்.

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை……………………கலக்குங்க பாஸ்..
  நல்ல பதிவு . . . நன்றி . .

  பதிலளிநீக்கு
 12. ஆகாயமனிதன்.. said...

  //கமெண்ட்ஸ் சரிங்க...
  template எங்கங்க ?//

  எல்லாப் பிளேட்டையும் பழைய பாத்திரக்கடைக்குப் போட்டுட்டனே, இப்ப என்ன பண்றது? புதுசாவே ஒண்ணு வாங்கிக்கிங்க.

  பதிலளிநீக்கு
 13. அடடா முன்னமே பார்க்காமல் விட்டேனே !! சாமி ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம்.
  இனிமே இதுமட்டும்தான் பின்னூட்டம். "வெவரமாக" பின்னூட்டம் இட்டு நொந்து போய்விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னங்க சக்திவேல், இத்தனை நாளா வெவரமில்லாமல் (அதாவது இந்தப் பதிவைப் பார்க்காமல்) இருந்திருக்கிறீர்களே என்று நினைக்க நினைக்க என் மனம் ரொம்பவும் நொந்து போகிறது. இனிமேலாவது சூதானமாப் பொழச்சுக்குங்க.

   நீக்கு