செவ்வாய், 8 மார்ச், 2011

கோர்த்து விடுதல் (பெயர்க் காரணம் – தொடர் பதிவு)முதலில் ஒரு கதை கேளுங்கள்.
ஒரு ஊர்ல ஒரு செட்டியார் வியாபாரஞ் செய்து வந்தார். அவர் ஒரு வேலைக்காரனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். வெளியூர் செல்லும் சமயங்களில் அவனையும் துணைக்குக் கூட்டிப்போவார். அந்த வேலைக்காரனுக்கு கொஞ்சம் விவேகம் கம்மி. இருந்தாலும், சொன்ன வேலையைத் தட்டாது செய்வான். அதனாலேயே செட்டியார் அவனை வேலையை விட்டு நீக்காமல் வைத்திருந்தார்.

அப்படி ஒரு சமயம் வெளியூருக்கு பண வசூலுக்குப் போய்விட்டு காட்டு வழியில் திரும்பும் சமயம் இருட்டிவிட்டது. அப்போது திருடர்கள் வரும் சத்தமும் கேட்டது. செட்டியார் வேலைக்காரனிடம்சத்தம் போடாமல் கட்டை மாதிரி படுத்துக்கொள் என்றுகூறிவிட்டு, தானும் ஒரு புதர் மறைவில் படுத்துக்கொண்டார். வேலைக்காரனும் ஒரு கட்டை போல் படுத்துக்கொண்டான். அந்த வேலைக்காரனுக்கு செட்டியார் சாப்பாட்டு செலவிற்குக் கொடுத்ததில் ஒரு பணம் (கால் ரூபாய்) மிச்சம் பண்ணி இடுப்பில் வேட்டியில் முடி போட்டு சொருகி வைத்திருந்தான்.

திருடர்கள் அந்த வழியில் வரும்போது, ஒரு திருடன் இந்த வேலைக்காரன் படுத்திருந்ததைக் கவனிக்காமல் வந்தான். அப்போது தடுக்கியது. உடனே அந்தத் திருடன் வழியில் ஏதோ கட்டை கிடக்கிறது, பார்த்து வாருங்கள் என்று கூறினான். வேலைக்காரனுக்கு ரோஷம் வந்து விட்டது. அவன் சொன்னான், “உங்க வீட்டுக் கட்டை இடுப்புல ஒரு பணம் சொருகி வச்சிருக்குமோஎன்றான். திருடர்கள் அவனைப் பிடித்து உதைத்து அந்த ஒரு பணத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

அதைப் பிடுங்கிய திருடன் அந்தக் காசை தடவிப்பார்த்துஇந்தப் பணம் செல்லுமோ செல்லாதோஎன்று சொன்னான். உடனே வேலைக்காரன், “செல்லும் செல்லாததற்கு பக்கத்துப் புதரில் செட்டியார் படுத்திருக்கிறார், அவரைக் கேட்டால் சொல்லி விடுவார்என்றான். திருடர்கள் அப்படியா சங்கதி என்று சொல்லி செட்டியாரைப் பிடித்து அவரிடம் இருந்த பணத்தைப் பூராவும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

கதையின் நீதி ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாமா?

நான் சிவனே என்று என் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விதி வலியது. அது எந்த ரூபத்திலும் வரும் என்பது தெரிந்ததே. எனக்கு கோபி ராமமூர்த்தி ரூபத்தில் வந்தது.

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

கோபி ராமமூர்த்தி நல்ல நண்பர். ஆனால் விதி விளையாடினால் அவர் பாவம், என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்தவர்களையெல்லாம் கோர்த்து விட்டுவிட்டார். என்னையும் அதில் சேர்த்து விட்டார். இனி தப்பிக்க முடியாது.

எனக்குப் பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா? இந்தப் பதிவுக்கு பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா?

எனக்குப் பெயர் என்னைக்கேட்டு வைக்கவில்லை. அதனால் என்ன காரணத்தினால் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்று நான் இது நாள் வரை யோசித்ததில்லை. கோபி ராமமூர்த்தி கேட்ட பிறகுதான் ஏன் இந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள் என்று யோசிக்கிறேன். பதில் சொல்ல வேண்டிய இருவரும் (தந்தையும் தாயும்) வேறு ஊரில் இருப்பதால் நானும் அங்கே போன பிறகு இந்தக் கேள்விக்கு விடையைக் கேட்டு, நீங்களும் அங்கே வரும்போது மறக்காமல் சொல்கிறேன். அது வரையில் பொறுமை காக்கவும்.

இந்தப் பதிவுக்குப் பெயர் வைத்தவன் நான்தான். ஆகவே அதற்கான காரணத்தைச் சொல்ல முடியும். என் மனதில் ஓடும் எண்ணங்கள் அலை அலையாய் ஓடும். ஆகவே என் பெயரைச் சுறுக்கி அலைகளைச் சேர்த்துசாமியின் மன அலைகள்என்று பெயர் வைத்தேன். அவ்வளவுதான்.

அப்பாடா, பெரிய சிதம்பர ரகசியத்தை வெளியில் சொல்லியாயிற்று. இனி எல்லோரும் நிம்மதியாகத் தூங்கலாம்.

15 கருத்துகள்:

 1. இதை எஸ்கேப் ஆகுறதுன்னு சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 2. நல்ல பெயர்க்காரணம்! கதை அருமையாக இருந்தது! மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. நான் நீங்கள் சொல்லும் ஊருக்கு வந்து தான் உங்க பெயர்க் காரணம் தெரிஞ்சுக்கணும்னா.. ஐ ஆம் வெரி சார் ... அப்பாலிக்கா மெதுவா தெரிஞ்சுக்குறேன்...ஹி ஹி

  பதிலளிநீக்கு
 4. //அப்பாடா, பெரிய சிதம்பர ரகசியத்தை வெளியில் சொல்லியாயிற்று. இனி எல்லோரும் நிம்மதியாகத் தூங்கலாம்.//

  :) தூங்குன மாதிரித்தான்

  பதிலளிநீக்கு
 5. கோயம்புத்தூர் குசும்புங்கறது இதுதானோ:-)

  பதிலளிநீக்கு
 6. Gopi Ramamoorthy said...

  //கோயம்புத்தூர் குசும்புங்கறது இதுதானோ:-)//

  ஆமாங்கோவ்!!!!

  பதிலளிநீக்கு
 7. Speed Master said...

  //தலைப்பே குசும்பு//

  என்னங்க பண்றது? ஒடம்புல ஊறிப்போச்சுங்களே?

  பதிலளிநீக்கு
 8. //விதி வலியது. அது எந்த ரூபத்திலும் வரும் என்பது தெரிந்ததே. எனக்கு கோபி ராமமூர்த்தி ரூபத்தில் வந்தது.
  Gopi Ramamoorthy தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன் //

  ஹா..ஹா...ஆனா ஈஸியா நழுவிட்டீங்களே :-))

  பதிலளிநீக்கு
 9. ஜெய்லானி said...

  ///விதி வலியது. அது எந்த ரூபத்திலும் வரும் என்பது தெரிந்ததே. எனக்கு கோபி ராமமூர்த்தி ரூபத்தில் வந்தது.
  Gopi Ramamoorthy தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன் //

  ஹா..ஹா...ஆனா ஈஸியா நழுவிட்டீங்களே :-))///

  என்னங்க நீங்க, கதையெல்லாம் சொல்லிப் பதிவு போட்டிருக்கேன். நழுவீட்டேன்ங்கிறீங்களே, நியாயமா?

  பதிலளிநீக்கு
 10. பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதை போலாயிற்று.

  பதிலளிநீக்கு
 11. இந்த சுஜாதாவோட மெக்ஸிகோ வண்ணான் ஜோக் மாதிரி சிதம்பர ரகசியம்னா என்னான்னு தெரியாம, முளிச்சுக்கிட்டு இருந்தேன். அப்பாடி ஒண்ணு தீர்ந்தது! நானும் நிம்மதியா தூங்கப் போறேன்!

  பதிலளிநீக்கு
 12. //பதில் சொல்ல வேண்டிய இருவரும் (தந்தையும் தாயும்) வேறு ஊரில் இருப்பதால் நானும் அங்கே போன பிறகு இந்தக் கேள்விக்கு விடையைக் கேட்டு, நீங்களும் அங்கே வரும்போது மறக்காமல் சொல்கிறேன். அது வரையில் பொறுமை காக்கவும்.//

  இந்த பதிவை இப்பத்தேன் பார்த்தேன். ஹெ ஹெ ஆனாலும் இந்த குசும்பு எந்த ஊர்ல போயி நிக்கும்னுதேன் தெரியலை. :))

  ஊர்ல தேர்தல் ஆரம்பிச்சிடுச்சே...அன்றாட சம்பவங்களை சுவையா உங்க பாணியில் எழுத ஆரம்பிச்சிடுங்க. வெயிட்டிங்

  :))

  பதிலளிநீக்கு