திங்கள், 2 டிசம்பர், 2013

உலக மகாத் திருட்டு


திருட்டு என்றால் என்ன என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருப்பீர்கள். பொதுவான கருத்து, நமக்குச் சொந்தமில்லாத, அடுத்தவர்களின் பொருளை நாம் எடுத்துக் கொள்வதை திருட்டு என்று வைத்திருக்கிறோம்.

இதில் சில்லறைத்திருட்டு முதல் கோடிக்கணக்கான திருட்டு வரை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. திருட்டு என்பது திருட்டுக்கொடுப்பவனுக்குத் தெரியாமல்தான் எல்லாத் திருடர்களும் செய்வார்கள். ஆனால் விழித்திருக்கும்போதே கண்ணா முழியைத் திருடும் திருடர்களும் உலகத்தில் உண்டு.

சிலர் தோலிருக்க சுளை விழுங்கிகளாக இருப்பார்கள். நம் பொருள் தம்மிடம் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அது நம்மிடம் இருக்காது. ம்யூச்சுவல் பண்டில் போடும் பணம் இந்தக் கதைதான். சில பாங்குகளிலும் ரொம்ப நாள் நீங்கள் போகவில்லையென்றால் தோலிருக்க சுளை விழுங்கிவிடுவார்கள்.

சில அரசியல்வாதிகள் நாட்டை விற்று விடுகிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இது அக்கிரமம் என்றும் அநியாயம் என்றும் வாயால் பேசிக்கொண்டே நாம் சில நாளில் மறந்து விடுகிறோம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். விவசாயிகள் நிலத்தை உழும்போது பக்கத்து நிலத்துக்காரன் ஏமாந்தவனாக இருந்தால் ஒரு "சால்" அவன் நிலத்தையும் சேர்த்து உழுவது வழக்கம். இந்த மாதிரி விவகாரங்களில் கோர்ட், கேஸ், வெட்டு, கொலை என்று முடிவதும் உண்டு.

ஆனால் ஒரு தேசத்து மக்கள் தங்களுக்கு பாத்தியப்படாத கடல் பிரதேசத்திலிருந்து நிலத்தைத் திருடியிருக்கிறார்கள். கடலை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த நிலத்தை அபகரித்திருக்கிறார்கள். இது உலக மகாத் திருட்டல்லவா?

இப்போது நெதர்லாந்து என்று அழைக்கப்படும் அந்தக் காலத்து ஹாலந்து மக்கள் கடலோரத்தில் வெகு தூரத்திற்கு கடல் ஆழமில்லாமல் இருந்ததைப் பயன்படுத்தி கடலில் சுவர் கட்டி நிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சுவர்களுக்கு டைக்ஸ் (Dikes)  என்று பெயர்.

இந்த நிலங்களை பண்படுத்தி காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

இப்போது சொல்லுங்கள், நெதர்லாந்துக் காரர்களை நான் திருடர்கள் என்று சொன்னது சரிதானே?

இந்த அதிசயத்தைப் பார்க்க அன்று மதியத்திற்கு மேல் நான் போனேன். அந்த நிலங்கள் முழுவதும் நல்ல விவசாயம் செய்திருந்தார்கள். செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன. இந்த பூமி முழுவதும் கடல் மட்டத்திற்கு பல அடிகள் கீழே இருக்குறது என்று சொன்னால்தான் புரியும். பல இடங்களில் ராட்சத மோட்டார்கள் வைத்து கடலிலிருந்து கசிந்து வரும் நீரை அவ்வப்போது வளியேற்று கடலுக்கே அனுப்பி வைக்கிறார்கள். பார்க்கப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.

இந்த டைக்ஸ் பற்றிய கதை ஒன்று சிறு வயதில் அநேகமாக அனைவரும் படித்திருப்போம். ஒரு நாள் இந்த சுவற்றில் ஒரு சிறு துவாரம் தோன்றி அதன் வழியாக கடல் நீர் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு சிறுவன் இந்த ஓட்டையை உடனே அடைக்காவிட்டால் இது பெரிதாகி இந்த சுவர் முழுவதுமே இடிந்து விடலாம் என்று யோசித்து அந்த ஓட்டையில் தன் விரலை வைத்து அடைத்தான். தண்ணீர் கசிவது நின்று விட்டது.

அவன் பல மணி நேரம் இவ்வாறு நின்று கொண்டிருந்தும் அந்த வழியாக யாரும் வரவில்லை. வெகு நேரம் கழிந்த பிறகே அந்த வழியாக வந்த காவல்காரன் இதைப் பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் வந்து அந்த ஓட்டையை சரி செய்தார்கள். அந்தப் பையனின் வீரத்தைப் பாராட்டி அந்த ஊரில் அவனுக்கு ஒரு சிலை எழுப்பினார்கள்.

இந்தக் கதை கர்ண பரம்பரையாக எல்லா ஊர்களிலும் பள்ளிகளில் பாட புத்தகங்களில் வரும்.

இப்படி அந்த இடத்தில் போட்டோக்கள் எடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருட்டாக ஆரம்பித்தது. நான் இந்த இடத்திற்கு ஒரு பஸ்சில் வந்தேன். இறங்கிய இடத்தில் ஒரு சிறிய ரெஸ்ட்டாரென்ட் மட்டும் இருந்தது. வேறு ஒரு கட்டிடங்களும் இல்லை. நான் இந்த இடத்திற்கு அடிக்கடி பஸ்கள் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த ரெஸ்டாரென்டில் போய் விசாரித்தால் பஸ் "வரும், ஆனால் வராது" என்கிற ரீதியில் பதில் சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு வழியையும் காணோம். குளிர் வேறு. நாம் ஓட்டிலுக்குத் திரும்ப முடியாவிட்டால் இந்தக் குளிர் பிரதேசத்தில் என்ன செய்வது என்ற கவலை மனதைப் பிடித்துக்கொண்டது.

மீதி அடுத்த பதிவில். 

37 கருத்துகள்:

  1. நீங்க மகா கஞ்சன் அய்யா போட்டோவை கொஞ்சம் பெரிசாகத்தான் போடுறது...சின்னதாக போட்டதற்கு கண்டனம் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பாதிக்கும்போது கஞ்சத்தனமாக இருந்ததால்தான் இன்று சௌகரியமாக இருக்கிறேன்.

      போட்டோவை கொஞ்சம் பெரிது பண்ணியிருக்கிறேன். இதற்கு மேலும் பெரிது பண்ணினால் ஷார்ப்னெஸ் இருக்காது.

      நீக்கு
    2. அய்யா சொல்வது நூற்றுக்கு நூறு சரி.
      வங்கியின் ஏடிஎம்களின் வெளியே அமர்ந்திருக்கும் முதியவர்களை (காவலாளி என்ற பெயரில்) பார்க்கும்போது இவர்கள் தமது இளவயதில் சிக்கனமாக இருந்து வீண் செலவு செய்யாமல் கொஞ்சமோ நஞ்சமோ சேர்த்து வைத்திருந்தால் இந்த வயதில் இப்படி வந்து உட்கார்ந்திருக்கவேண்டாமோ சௌகர்யமாக இருந்திருப்பார்களோ என்று ஒரு வித பச்சாதாபம் தோன்றும்.

      சேலம் குருப்ரியா

      நீக்கு
    3. இளம் வயதில் சிக்கனம் என்பது நல்ல புத்திமதிதான்
      ஆனால் செலவுக்கே துட்டில்லாமல் ததிங்கினதோம் போடும் ஆட்களுக்கு, ஒரு நாளைக்கு மூன்று வேளை - அட்லீஸ்ட் வயிறார ஒருவேளையாவது - சாப்பிடமுடியாத ஆட்களுக்கு, குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்க்கக்கூட கையில் காசில்லாத ஆட்களுக்கு சிக்கனம், சேமிப்பு என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. என்ன 'இருப்பதை பகிர்ந்து உண்போம். அதற்கு என்னால் முடிந்த வேலையை (உதவியை) செய்கிறேன்' என்றுதான் அந்த முதியவர் கூறுவார். சரிதானே?


      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  2. அறியாத புதிய தகவல்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  3. பாடத்தில் படித்ததை படத்தில் பார்க்க உதவியமைக்கு நன்றி.


    //சில பாங்குகளிலும் ரொம்ப நாள் நீங்கள் போகவில்லையென்றால் தோலிருக்க சுளை விழுங்கிவிடுவார்கள்.//

    தங்களின் அனுபவம் பேசுகிறதோ? ஒரே ஒரு திருத்தம். ஆனால் இப்போது அப்படி செய்யமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் அந்த ஆண்டு operate செய்யப்படாத கணக்குகளை ஆய்வு செய்து அந்த வாடிக்கையாளர்களுக்கு அதுபற்றி கடிதம் எழுதவேண்டும். (எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்கின்றனாவா என்பது கேள்வி)அதற்கு அந்த வாடிக்கையாளர் operate செய்யமுடியாதற்கு சரியான காரணத்தை எழுத்து மூலம் தந்தால் இன்னும் ஒரு ஆண்டு அது operative கணக்காக கருதப்படும். நீங்கள் கணக்கை இரண்டு ஆண்டுகள் Operate செய்யாவிடில் அது Dormant கணக்குக்கு மாற்றப்பட்டுவிடும்.ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு 10 ஆண்டுகள் Operate செய்யாத கணக்குகள் பற்றி அறிக்கை தரவேண்டும். அவைகள் Unclaimed வைப்புகளாக கருதப்படும். அதோடு தங்களது Web site இல் அதுபற்றிய விவரத்தை வெளியிடவேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2012 வரை அனைத்து வங்கிகளிலும் உள்ள Unclaimed Depsits களின் மதிப்பு மட்டும் 3652.3 கோடிகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கத்திற்கு நன்றி, நடனசபாபதி.

      நீக்கு
    2. வெப் சைட்டில் வெளியிட்டு விட்டால் மட்டும் போதுமா?
      தர்ம நியாயம் என்ன சொல்கிறது? அந்த பணத்தை உரியவரிடம் திடுப்பிகொடுக்க அந்த வங்கி என்ன முயற்சிகள் எடுத்தது? சட்ட திட்டங்களை திருப்திப்படுத்த இத்த்கைஅய் முயற்சிகள் உதவுமே தவிர, உண்மையில் உரிமையாளர்களை அந்த பணம் சென்று சேராது என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை நம்மை போன்ற படித்தவர்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

      சேலம் குரு

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது சரியே திரு சேலம் குரு அவர்களே! வங்கிகள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு ஆவன செய்யவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால் பல வாடிக்கையாளர்கள் இடம் மாறும்போது,முகவரி மாற்றம் பற்றி வங்கிகளுக்கு அறிவிக்காமல் போவதால் தான் வங்கிகளால் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பதால் வங்கிகள் அவர்களது Website இல் அது பற்றி அறிவிக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் ஆணையிட்டுள்ளது.

      நீக்கு
  4. ஐயா

    கடல் கடவுளுக்கு சொந்தமானது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்க்கோ சொந்தம் அல்ல. நாம் எல்லோரும் கடவுள் சொத்தை தான் அனுபவிக்கிறோம். ஆகவே நெதர்லாந்த் கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்லலாம்.

    நெதர்லாந்து மக்கள் திருடர்கள் அல்ல.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நிந்தாஸ்துதியாகச் சொல்லப்பட்ட கட்டுரை. இயற்கையிடமிருந்துதான் நாம் அனைவரும் நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறோம். தேவைக்கு அதிகமாக எடுத்தால் நாமும் திருடர்களே.

      நீக்கு
    2. நிந்தாஸ்துதி - புதியதாக இருக்கிறதே.
      வஞ்ச புகழ்ச்சியணிக்கு நேர்மாறோ?
      இந்த ஸ்துதிக்கு இன்னும் சில உதாரணங்கள் தரமுடியுமா அய்யா?

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    3. வஞ்சப் புகழ்ச்சிக்கு எதிர்தான்.

      "தந்தை தாயிருந்தால் இந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா"

      இந்தப் பாட்டு முழுவதும் நிந்தாஸ்துதிதான்.

      அதே போல் "ஏன் பள்ளி கொண்டீரய்யா ரங்கநாதா" என்ற பாட்டும் நிந்தாஸ்துதிதான்.

      அவன் பெரிய பணக்காரன் என்பதைக் குறிக்க " அவன் பணத்தை கையிலே தொடாதவன்" என்று கூறுவதுண்டு. எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கும்போது அவன் பணத்தை எதற்குத் தொடவேண்டும்?

      நீக்கு
  5. நல்லது ஐயா... நன்றி...

    உங்களால் முடிந்தால் :


    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    பதிலளிநீக்கு
  6. அந்த நிலங்கள் முழுவதும் நல்ல விவசாயம் செய்திருந்தார்கள். செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன.

    அந்த இடங்களில் என்ன பயிர் விளைவித்திருந்தார்கள் ஐயா..?
    விவசாய நிபுணரான தாங்கள் அந்த மண்ணின் தன்மை , பயிர்களின் வகைகளை ஆராயவில்லையா..!!??/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண் களிப்பு வகையைச் சார்ந்தது. நான் பார்த்தபோது ரேப்சீட் என்னும் எண்ணைவித்துப் பயிர் பயிரிட்டிருந்தார்கள். அப்போது பூ பூத்திருந்தது. நிலம் முழுவதும் மஞ்சளாக காட்சியளித்தது.

      நீக்கு
    2. அங்கே நான் போனபோது இது பற்றி யாரும் சொல்லவே யில்லை!

      நீக்கு
  7. உலக மகாத் திருட்டு வேடிக்கையாகவும் ஆச்சர்யம் அளிப்பதாகவும் உள்ளது.

    //நாம் ஓட்டிலுக்குத் திரும்ப முடியாவிட்டால் இந்தக் குளிர் பிரதேசத்தில் என்ன செய்வது என்ற கவலை மனதைப் பிடித்துக்கொண்டது.//

    எனக்கும் ஒரே கவலையாக உள்ளது, தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. //ம்யூச்சுவல் பண்டில் போடும் பணம் இந்தக் கதைதான். //

    பின்னர் ஏன் அரசாங்கம் ம்யூச்சுவல் பண்டை தடை செய்யகூடாது?

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. டைக்ஸ் பற்றி புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
    ஆனால் அதற்கு இப்படி ஒரு வியு பாயிண்ட் (திருடுகிறார்கள்) இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக மஹா திருடர்கள் எல்லாம் இல்லை. தயவு செய்து சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இது சஸ்பென்ஸ் கொடுக்க அய்யா அவர்கள் செய்த ஒரு வார்த்தை ஜாலம். அதுதான் இது ஒருவகை நிந்தாஸ்துதி என்று சொல்லிவிட்டாரல்லவா? இப்படி நிந்தச்துதி பெரும் வகையில் நமது நாடு மக்களும் செயலாற்றினால் நல்லது

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  10. //வெகு நேரம் கழிந்த பிறகே அந்த வழியாக வந்த காவல்காரன் இதைப் பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் வந்து அந்த ஓட்டையை சரி செய்தார்கள். அந்தப் பையனின் வீரத்தைப் பாராட்டி அந்த ஊரில் அவனுக்கு ஒரு சிலை எழுப்பினார்கள்.//

    ஆனால் காவலாளி வரும்போது குளிரில் விறைத்துப்போன அந்த பையன் இறந்துவிட்டிருந்தான் என்பதாக ஞாபகம். சரிதானே

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையே உடான்ஸ் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கதை பலவாறு புழங்கி வருகிறது. ஆனாலும் சிறுவர்களுக்கு பிடித்த ஒரு நல்ல நீதிக்கதை.

      நீக்கு
  11. //இந்த சுவற்றில் ஒரு சிறு துவாரம் தோன்றி அதன் வழியாக கடல் நீர் வந்து கொண்டிருந்தது. //

    நம்ம ஊராக இருந்திருந்தால், இருக்கும் தண்ணீர் கஷ்டத்திற்கு அனைவரும் குடத்தை எடுத்துகொண்டு போய் வரிசையாக நின்றிருப்பார்கள். அந்த ஓட்டையில் ஒரு பைப் வைத்து கனெக்சன் கொடுத்திருப்பார்கள்

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
  12. //தங்களுக்கு பாத்தியப்படாத கடல் பிரதேசத்திலிருந்து நிலத்தைத் திருடியிருக்கிறார்கள் //

    தங்களுக்கு பாத்தியதை படாத கடல் என்று சொல்கிறீர்கள். அது உண்மை என்றால் இங்கு தனக்கு பாத்தியதை படாத கடலில் வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று நாள்தோறும் தமிழ் மீனவர்களை கொள்வதை ஒரு வேலையாகவே வைத்துகொண்டிருக்கும் இலங்கை அரசு செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை அரசு செய்யும் கொடுமை இருக்கட்டும்.
      நமது இந்திய அரசு இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்படையோடு சேர்ந்து பயிற்சியில் வேறு ஈடுபடபோகிறார்களாம். அந்த கொடுமையை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவையும் பார்த்துக்கொண்டு நமது தமிழ் எம்பிக்கள் டெல்லியில் பதவி சுகத்திற்காக கண்களை மூடிகொல்வது அதை விட கேவலம் இல்லையா?

      திருச்சி தாரு

      நீக்கு
    2. எம்பிக்களை விடுங்கள். ஜனங்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். சும்மாதானே இருக்கிறோம். செய்தித்தாளில் படித்தவுடன் ரத்தம் கொதிப்பது உண்மைதான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதும் உண்மைதான் ஆனால் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்ற எண்ணம் வந்தவுடனேயே எல்லாமே மறந்து போய்விடுகிறதே. மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  13. //இந்தக் கதை கர்ண பரம்பரையாக எல்லா ஊர்களிலும் பள்ளிகளில் பாட புத்தகங்களில் வரும்.//

    அது என்ன அய்யா கர்ண பரம்பரை.
    அய்யா போன்று பெரியவர்களிடமிருந்து தெரிந்து கொண்டால் நானும் கர்ண பரம்பரையாக அந்த காரணத்தை எல்லோரிடமும் சொல்லிகொண்டிருப்பேன்

    சேலம் குரு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எழுதும்போதே இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்தேன். வெகு நாட்களுக்கு முன் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருந்தேன். ஆனால் மறந்து விட்டது. கூகுளாரிடம் விசாரித்ததில் இந்த விளக்கம் கிடைத்தது.

      " கர்ண பரம்பரை கதை என்பது கதைகள் கல்வெட்டுகள், ஏட்டு சுவடிகள் , புராணங்கள் , புதினங்கள் ஆகிவற்றில் பதிய படாமல் பரம்பரை பரம்பரையாக பாட்டன் வழி வழியாக கதையாக சொல்ல பட்டு வரும் கதைகளை நாம் கர்ண பரம்பரை கதை என்று சொல்வோம்."

      இதிலும் ஒரு முழு விளக்கம் கிடைக்கவில்லை. உங்களுக்கு வந்த முக்கியமான சந்தேகம் கர்ணனுக்கும் இந்த கர்ண பரம்பரைக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்கிற சந்தேகம் தெளியவில்லை. வடமொழியில் "கர்ண" என்றால் காது என்று பொருள். பரம்பரை பரம்பரையாக செவி வழியாக வரும் கதை என்பதால் இதை கர்ண பரம்பரைக் கதை என்று நம் முன்னோர்கள் சொல் வழக்கில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். நாமும் அந்த வார்த்தையின் பொருளை அறியாமலேயே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

      கர்ணனுக்கும் பிறக்கும்போதே காதில் குண்டலங்கள் இருந்ததால் கர்ணன் என்ற பெயர் வந்தது.

      நீக்கு
    2. வேதங்களும் ஏட்டில் எழுதப்படாமல் எழுதாக்கிளவியாக குரு சிஷ்ய பாரம்பர்யத்தில் காதால் கேட்டே படித்து பயின்று வளர்ந்தது ..!

      நீக்கு
    3. இத்தகைய கர்ண பரம்பரை கதைகள் நன்றாக இருக்கும். இவையெல்லாம் அனுபவங்களின் வெளிப்பாடுகள்தானே. எனவே சுவைக்கு குறைவிருக்காது. நிதர்சனத்திலிருந்தும் அதிகமாக விலகியிருக்காது. ஆனால் இப்போது செவிவழி கதைகள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிரூக்கின்றன அல்லவா? அதையெல்லாம் சேகரம் செய்து வைக்கும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

      திருச்சி தாரு

      நீக்கு
  14. //அந்த நிலங்கள் முழுவதும் நல்ல விவசாயம் செய்திருந்தார்கள்//

    நிலத்துக்கு கீழே கடல். எப்பவும் உப்பு நிறைந்த கடல் காத்து. தண்ணீர் மேலே நிலமிருப்பதால் இலகுவாக இருக்காது. சற்றே கடினமான மண்ணாகத்தான் இருக்கும். எதில் விவசாயம் பண்ணுகிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும். உலகிலேயே இரண்டாவது பெரிய கடல் கரையை வைத்துகொண்டு அதை டூரிஸ்ட்டுக்காகவும் பயன்படுத்தாமல் இருக்கையில் இப்படி விவசாயத்துக்கு பயன் படுத்தலாமே.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  15. கடலில் விவசாயமா? வியப்பாகத்தான் இருக்கிறது. அதைவிட வியப்பு திரு நடன சபாபதி கூறியிருக்கும் வங்கிகளில் இருக்கும் கோடிக்கணக்கான unclaimed பணம் பற்றிய தகவல்கள்.

    எப்படி திரும்ப வந்தீர்கள் என்றறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பதிவைப் படித்ததும், சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த கதையும், தேன்தமிழ் வாசகம் என்ற அந்த பாடப் புத்தகமும், அதில் இந்தக் கதைக்குப் போட்டிருந்த படமும் நினைவுக்கு வருகின்றன.


    பதிலளிநீக்கு