சனி, 8 ஜூலை, 2017

16. வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல்

இது ஒரு மீள் பதிவு. பதிவு இட்ட தேதி -  
இந்த பதிவின் கருத்துகள் எப்படி இன்றும் பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். அதுதான் தீர்க்க தரிசனம் என்று போற்றப்படுகின்றது.

                                        Image result for திருடன்

கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது தங்கள் வீட்டைப்பூட்டி விட்டு செல்வார்கள். இப்படி பூட்டியிருக்கும் வீடுகளை திருடர்கள் நோட்டம் போட்டு, அந்த வீடுகளில் இரவு நேரங்களில் (பல சமயங்களில் பகலிலேயே கூட) பல வகைகளில் உள்ளே புகுந்து திருடுகிறார்கள். தினமும் இந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன.

குறிப்பாக திருட்டு போகும் பொருட்கள் நகைகளும் பணமும்தான். அதுவும் அதிக அளவில். இதில் புரியாதது என்னவென்றால், வெளியூர் போகிறவர்கள் ஏன் அவ்வளவு நகைகளையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.

வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். வீட்டுக்குள் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் வெளியில் ஒன்றும் தெரியாது. இது ஏனென்றால் அங்கே பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் படையெடுத்து எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள மக்களின் மனோபாவம் மிகவும் மாறுபட்டது. சொத்துக்களைச் சேர்த்து திருட்டுக்கொடுப்பதை விட அதை நாமே அனுபவித்து விட்டுப்போகலாமே என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கிறது. ஆகவே அவர்கள் தாங்கள் சம்பாதிப்பதை தாங்களே அனுபவிக்கிறார்கள்.

 ஆனால் தமிழ்நாட்டில் தன் மகனுக்கு, தன் பேரனுக்கு, தன் கொள்ளுப்பேரனுக்கு என்று சேர்த்து வைக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்ததை எவனோ கொள்ளையடித்துக்கொண்டு போகிறான்.

ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது. ஆனால் மக்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று செரியவில்லை.

7 கருத்துகள்:


 1. என்ன பாதுகாப்பு செய்துகொண்டாலும் திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்! முன்பு ஒருமுறை காவல்துறையினர் 'வெளியூர்களுக்குச் செல்லும்போது உங்கள் உள்ளூர் காவல் நிலையங்களில் சொல்லி விட்டுச் செல்லுங்கள்' என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். நான் அப்போதும் ஒருக்காலும் அந்தத் தவற்றைச் செய்ததில்லை.

  :)))

  பதிலளிநீக்கு
 2. என்றைக்கும் பொருந்தும் பதிவு! மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் தீர்க்க தரிசனத்தினைப் போற்றிப் பாராட்டுகிறேன்.

  //ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது.//

  மிகவும் கரெக்ட்டூஊஊஊஊஊ.

  பதிலளிநீக்கு
 4. இருப்பவந்தானே வாரிசுகளுக்கு கொடுக்க முடியும்

  பதிலளிநீக்கு
 5. //வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். //

  அதற்கு இன்னொரு காரணமும் உண்டு ஐயா. வருமான வரித்துறையினரின் கண்ணை மறைக்கத்தான் அது.

  பதிலளிநீக்கு
 6. ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள்.- உண்மைதான். ஆனா பெரும்பாலும் 'வருங்கால சந்ததிகளைவிட, தனக்கும் மனைவிக்கும் இறக்கும் வரை பணம் தேவையே என்று சேமிக்கும் நடுத்தர வர்க்கம்தான் அதிகம்.

  ஸ்ரீராம் - "அப்போதும் ஒருக்காலும் அந்தத் தவற்றைச் செய்ததில்லை" - ரசித்தேன். இதுதான் நம் ஊரின் நிலைமை, 30+ ஆண்டுகளாக.

  பதிலளிநீக்கு