செவ்வாய், 26 செப்டம்பர், 2017
21. நான் இட்லி சாப்பிட்டேன்.
நான் இட்லி சாப்பிட்ட விவகாரம் இப்படி அரசியலாகும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே விடியோ எடுத்து யூட்யீபில் போட்டிருப்பேனே? தெரியாமப் போச்சே!
என் உடன் பிறவா சகோதரியைக் கேட்டால் சொல்லியிருப்பார்களே! இதற்கு ஏன் எல்லோரும் இப்படி வாக்குவாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
என் அன்பு சகோதரன் பதிவர் கந்தசாமி இப்போதுதான் இந்திர லோகத்திற்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிந்தேன். அந்த சர்வீஸ் ஆரம்பித்த பிறகு நானே ஒரு முறை தமிழ் நாட்டிற்கு வந்து உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறேன். அது வரை கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசாமல் இருந்தால் நல்லது.
அதுவரை எல்லோரும் அமைதியாக அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பசியாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எங்கும் அரசியல்.
பதிலளிநீக்குஐயா தோசை சாப்பிடலாமா ?
பதிலளிநீக்குநீங்கள் தோசை மற்றும் அடை மற்றும் ரவா, வெங்காய, மசால் தோசை மற்றும் சிக்கன், மீன், பீஃப் வறுவல் எது வேண்டுமானாலும் சாப்பிடத் தடையேதுமில்லை.
நீக்கு"இந்திர லோகத்திற்கு விமானப் போக்குவரத்து " - முனைவர் கந்தசாமி சார்-உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கதானே, யார் யார், மறைந்தபிறகு எங்கே இருக்கிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅன்றொரு நாள், சன் நியூஸ் சேனலில், ஒருவர், ஜெ. சமாதியின் அருகில் இருந்துகொண்டு, (உபாசகர், அல்லது ஆவிகளோடு பேசுபவர்), ஜெ. ஆவி இன்னும் கோபத்தோடு, 30 அடி ஆழத்தில்தான் சமாதியின் அருகில் இருக்கிறது, அது இன்னும் 20-30 பேரைக் காவு வாங்கும் கோபத்தோடு இருக்கிறது என்று சொன்னார்.
அது பச்சைப் பொய். நம்பாதீர்கள். நான் சொல்வதுதான் உண்மை. அம்மா நேரில் வந்து உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.
நீக்குஇட்லியை அம்மா கையில் தராமல் சாப்பிட்டுவிட்டு இப்போது 'அம்மா இட்லி எல்லாம் சாப்பிடவில்லை என பேட்டி கொடுக்கும் அமைச்சர் மேல அம்மா கோபமா இல்லையா?
பதிலளிநீக்குஅம்மாவுக்குப் பின் அம்மா உணவகங்கள் செயல் படுவதில் சுணக்கமாமே
பதிலளிநீக்குஇட்லி சாப்பிட்டது ஒரு தப்பா அய்யா
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்ற செய்தியை அப்போ படித்த போது, காய்ச்சல் வந்தால் இட்லி சாப்பிடுவதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைத்தேன்.
அரிசி இட்லியா ரவா இட்லியா காஞ்சிபுரம் இட்லியா என்று தெரியாததால் உருவான குழப்பம். அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஅவங்க ிட்லி சாப்டாங்களா சட்னி சாப்டாங்களா இல்ல முதல்ல உயிரோட அட்மிட் ஆனாங்களா என்பது டீடீவியின் சொண்தக்காரர் டாக்டர் சிவக்குமாருக்கே வெளிச்சம்
பதிலளிநீக்குஎத்தனை கதைகள் அய்யா...
பதிலளிநீக்குஇன்று புத்தன் வேடம் போடுபவனெல்லாம் அன்று கதையாசிரியர்களாய்....
எல்லாமே அரசியல்...