வெள்ளி, 15 மார்ச், 2019

38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்

                                 
                                   

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் தேடுகின்றன. பத்திரிக்கைகள் கல்லா கட்டுகின்றன.

ஆனால் யாராவது இந்த அக்கிரமங்கள் நடப்பதற்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றி எள்ளளவாவது  சிந்திக்கிறார்களா என்றால், ஒருவரையும் காணோம். இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்தப் பெண்கள் அவர்களுடன் போனது அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா? பெற்றோர்களின் அனுமதியுடன்தான் அவர்கள் சென்றார்களா?

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் இயற்கை சில பயங்களைக் கொடுத்திருக்கிறது. இருட்டு பயம், புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை இவைகளைக் கண்டு பயம், எதிர்பாலரிடம் பேச. பழக பயம். இப்படி “தெனாலி” படத்தில் கமலஹாசன் லிஸ்ட் போடுவாரே அந்த மாதிரி நிறைய பயங்கள் இயற்கை நம்மிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கள் எல்லாம் நம்முடைய பாதுகாப்புக்குத் தானே ஒழிய சும்மா விளையாட்டுக்கல்ல.

அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்றால் அது மகா கேவலம் என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது ஒரு கட்டாயம் என்ற நிலைக்கு இன்றைய கல்லூரிப் பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி சுற்றுவதற்கு பல பொய்க் காரணங்களை
வீட்டில் சொல்லி நம்ப வைக்கிறார்கள்.

இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும்  ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.

31 கருத்துகள்:

 1. சார்... ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதியிருக்கீங்க. வாருங்கள்.

  நீங்க சொன்ன பாயின்டை ஆராய யாருக்கும் நேரமில்லை. மாட்டிக்கொண்ணவன்(ர்கள்) எந்தக் கட்சி, யாருடைய உறவினன், அதில் ஒருவன் ஸ்டாலினோடு போட்டோ எடுத்துக்கொண்டானா.... எப்படி ஒரு கட்சிக்காரனா அவர்களை ப்ரொஜக்ட் பண்ணலாம் என்பதில்தான் எல்லோரும் பிஸி. இதனுடைய எலெக்‌ஷன் முக்கியத்துவம் முடிந்ததும் அனைவரும் இந்தச் செய்தியை மறந்துவிடுவார்கள்.

  இதற்கு முன்பு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் என்ற போர்வையில் செய்தவை என்ன, அவர்கள் இப்போது யாருடன் கூட்டணி என்று யாரும் ஆராய்வதில்லை

  பிரச்சனையின் வேர் வேற எதோ. இந்த 4 பேரைத் தூக்கில் போட்டால் அந்த 200 பேர்கள் திருந்தப் போவதில்லை, இன்னும் ஒரு புதிய 4 பேர்கள் உருவாகாமல் இருக்கப்போவதில்லை. பெண்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலம்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா... வணக்கம்... பல மாதங்கள் (வருடம்..?) தங்களின் பதிவை கண்டு மகிழ்ச்சி... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. // இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை //

  ஓஹோ... இப்படி செய்தால் தான் அக்கிரமா...?

  மயக்க மருந்து கொடுத்து தான் தூக்கிக் கொண்டு சொல்ல வேண்டுமோ...?

  சர்வ சாதாரண மயக்க வைக்கும் உரையாடலே போதுமே...

  பதிலளிநீக்கு
 4. மிகச் சரியான கருத்து! அதை விட்டுவிட்டு அரசையும் காவல் துறையையும் குற்றம் சாட்டுவது சரியல்ல. காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விலாசம் போன்றவற்றை வெளியிட்டது என்னமோ தப்புத் தான்! அதற்கெனச் சட்டமே இருப்பது காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? :(((( மொத்தத்தில் இந்தப் பெண்கள் விட்டில் பூச்சிகளாகச் சென்று விழுந்ததுக்குத் தமிழ்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 5. // பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை //

  // பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். //

  எப்படி...?

  "நண்பன் கூப்பிட்டான் என்று..."

  "உங்களைத்தானே நம்பி வந்தேன்... "

  இது தான் பரிபூர்ண சம்மதமா...?

  பதிலளிநீக்கு
 6. // அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். //

  அப்படியா...?

  அதென்ன குறிப்பாக பெண்கள்...?

  அப்போ ஆண்கள்...? அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாமா...? ஆண்கள் பெற்றோர்களிடத்தில் பொய் பேசினால் தப்பில்லையா...?

  // இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். //

  ஆண்கள் என்ன பல பல வழக்கங்களை வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்கள் இந்த மாதிரி சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

   நீக்கு
 7. // ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள். //

  ஆணிற்கு போட்டியாக எந்த பெண்களும் கலாச்சாரத்தை விரும்பியதில்லை...

  ஆணிற்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க போராடுகிறார்கள்...

  உண்மை என்னவெனில் பெண் என்பவர்கள் அனைத்திற்கும் மேல்...

  பதிலளிநீக்கு
 8. இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும் ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை...

  இன்றைய கயவர்கள் யார்...?

  பொள்ளாச்சி விவகாரமா...?

  நடந்த நிகழ்வுகளை ஆராய்வதில் என்ன பிரயோசனம்...?

  தீர்வு : சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உடனே கழுவேற்றம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடந்த நிகழ்வுகள் மக்களுக்குப் பாடமாக அமைந்தால் நல்லது.

   நீக்கு
 9. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு பதிவெழுத வைத்த காரணங்கள் உங்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும்யாருமே எழுத முன்வராத காரணங்கள்

  பதிலளிநீக்கு
 10. இதில் இளம் வயது பெண்கள் மட்டுமல்ல கல்யாணம் ஆன பெண்கள் கூட பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்... கயவர்களிடம் எளிதில் ஏமாந்து போகக் கூடயவர்களாகவே இந்த பெண்கள் இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பிரச்சினை இந்த 200 பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. முழு சமுதாயத்தையும் பாதிக்கப்படக்கூடிய பிரச்சினை. இந்த மாதிரிப் பிரச்சினை நாளைக்கு என் வீட்டிலும் தோன்றலாம். உங்கள் வீட்டிலும் தோன்றலாம். இதன் காரணங்கள் என்ன என்று ஆராய வேண்டும். அதன் முடிவுகள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே என் ஆசை.

   நீக்கு
 11. பெண் குறைவான ஆடையுடனே போனாலும் , குடித்தே இருந்தாலும் ஒரு ஆண் அவள் விருப்பத்துக்கு மாறாக நடந்தால் மிக பெரிய குற்றம். அதுவும் அந்த பெண் 21 வயதுக்கு கீழ் இருந்தால் , அவளே சம்மதித்தாலும் மிக கடுமையான குற்றம். சிறையும்,கசையடியும்,வாழ்வில் மறையாத தழும்பும் கிடைக்கும். இது தான் மலேசியா , சிங்கப்பூர் நாடுகளின் சட்டம். அது தான் பெண்ணுக்கு தரும் மரியாதை. நம் நாட்டில் படித்து பெரியவர்களாக உள்ளவர்களும் ஆணாதிக்க மனபோக்கோடு உள்ளனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆணாதிக்கம் என்ற வார்த்தையின் முழுப் பொருளும் எனக்கு இதுவரை விளங்கியதில்லை. அதற்காக ஒரு தனி பதிவு இடுகிறேன். அதில் அந்த விவாதத்தை வைத்துக் கொள்வோம்.

   மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள சட்டத்தினைப் பாராட்டுகிறேன். அதே போல் லஞ்சம் வாங்குவதும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததும் பெரும் தண்டனைகளை அங்கு வாங்கிக்கொடுக்கின்றன.

   இந்திய நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பற்றி புதிதாக ஒன்றும் கூற வேண்டியதில்லை. இது இந்த நாட்டின் கலாச்சாரமாக மாறிப் போய் விட்டது. இதை யார் எப்போது மாற்றுவார்களோ, தெரியவில்லை.

   நீக்கு
 12. There are girls get raped in US in college campuses. Most of the time they walk alone from library to home after midnight. They are inviting the rapist. They can easily avoid that.

  In India, Like Sivakumar pointed out (condom problem in the drainage of IT company), young girls want sex before marriage. Married women want to get involved with other men and have sex. This is the kind of freedom they earned recently. Yes, most of the men were doing this all these years. So, Why should not we do it? is their justification. I am not going to argue with them. It is their life they can sleep with anybody.

  The problem is when you earn such "freedom", you will also get abused by some other animals. That is the price you pay for your freedom. You are abusing the freedom because you dont tell your parents that I have sex with my lovers bu carefully using condom. You LIE. You cheat your husband when you sleep with or et involved with other men. So, you are not HONEST. Obviously you run into trouble and cry now that men are animals.

  How many times you need to learn Men are animals??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை சொன்னால் நீ ஒரு ஆணாதிக்கவாதி என்று பட்டம் சூட்டுகிறார்கள். யதார்த்தத்தில் இந்திய சமுதாயத்தில் ஒரு ஆணின் நிலை வேறு, ஒரு பெண்ணின் நிலை வேறு. இதைப் புரிந்து கொள்ள இன்றைய கொள்கை வாதிகள் மறுக்கிறார்கள்.

   நீக்கு
 13. //இந்திய சமுதாயத்தில் ஒரு ஆணின் நிலை வேறு, ஒரு பெண்ணின் நிலை வேறு. இதைப் புரிந்து கொள்ள இன்றைய கொள்கை வாதிகள் மறுக்கிறார்கள்.//

  சரி, புரிந்து கொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களைக் கொஞ்சம் சமூக சட்ட திட்டங்களை (அதாவது பழக்க வழக்கங்களை) கடைப்பிடிக்கச்சொல்ல வேண்டும். ஆண் அப்படிச் செய்கிறானே, நான் ஏன் அப்படிச் செய்யக்கூடாது என்றால் அப்புறம் இந்தக் கதிதான்.

   நீக்கு
 14. ஒரு you tube சேனலில் ஒரு இளைஞர் மிக சரியாக சொன்னார் "பெண்களுக்கு இந்த சமூகத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் உள்ள பயம் தான் இந்த கயவர்களின் ஆயுதம், குற்றவாளிகள் நம்மை அதாவது சமூகத்தை தான் கேடயமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்". இது எவ்வளவு பெரிய உண்மை என்று உங்கள் பதிவையும் இங்கே போட்டிருக்கும் பெரும்பாலான கருத்துக்களையும் பார்க்கும் போது இன்னும் நன்றாக உறைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பயம் இந்தக் கயவர்களின் பின்னால் போவதற்கு முன்பும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

   நீக்கு
 15. raajsree lkcmb இந்தப் பெயருக்குள் ஏன் ஒளிந்து கொண்டு உங்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரு ரொம்ப ரொம்ப பெரிய மனுஷர், கந்தசாமி சார். அதனால அவர் ப்ரஃபைலோ, அல்லது அவர் யாரு, ஊர் பேரு, அம்மா, அப்பா பேரு எல்லாம் பெரிய ரகசியமா வச்சிருப்பாரு. ராஜஸ்ரி னு அனானிமஸாத்தான் திரிவாரு. ஆனா பெரிய மேதை மாதிரி அறீவுரை எல்லாம் வழங்குவாரு ப்ரஃபைல் இல்லாத வெளக்கெண்ண!

   நீக்கு
  2. நான் உறுதியாக நம்புவதை தான் கருத்தாக தெரிவிக்கிறேன். எதற்காக ஒளிய வேண்டும்? எனக்கு புரியவில்லை.
   இதெல்லாம் எல்லா காலத்திலும் இருந்தது தான், என்ன இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் வெளியே அதிகம் தெரிகிறது. இதை போன்ற ஏன் இதை விட கொடுமையான வக்கிரங்களை எல்லாம் கடந்து தான் இவ்வுலகில் பெண்கள் இத்தனை முன்னேறி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயந்துகொண்டு வீட்டுக்குள் முடங்கி இருந்திருந்தால் இன்று பெண்களுக்கு இத்தனை முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்காது. சுயமாக சிந்தியுங்கள், முடங்கி கிடக்காமல் தைரியமாக வெளியே வாருங்கள், சுதந்திரமாக சுவாசியுங்கள், உங்கள் விடுதலை உங்கள் கையிலேயே இருக்கிறது என்று வழிகாட்டிய, ஏன் இன்றும் கூட வழிகாட்டும் எல்லா ஆண்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
   காலத்திற்கேற்ப மாறினால் தான் அது கலாசாரம், தேங்கி கிடந்தால் அது குட்டை, சாக்கடை.

   நீக்கு
 16. சரியாக ஒரு வருடம் கழித்து பதிவுலகில் "உள்ளேன் ஐயா" என்று ஆஜர் செய்ததிற்கு நன்றி.

  நாமும் மாணவப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தாம். நம்முடைய காலத்தில் பொறுப்புகள் என்பது சிறு பிராயத்திலேயே தொடங்கிவிடும். சிறிய பிள்ளைகள் ஆக இருக்கும் போதே குடும்பத்தின் வேலைகளை பங்கிட்டு செய்யும் போது குடும்ப உறவுகள் பலமடையும். பிள்ளைகளுக்கு அனுபவம் கூடும். ஆனால் தற்போது மேல் நாகரிகம் காரணமாக தந்தை தாய் உறவுகள் என்பது ஒரு அடையாளம் மாத்திரம் ஆகிறது. நாமெல்லாம் சிறு பிராயத்தில் தவனு செய்து விட்டு பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் எவ்வளவு அடி வாங்கி இருப்போம்.

  ஒரு தாயார் தன மகன் காலையில் 6 மணிக்கு போனால் ராத்திரி 10.30 மணிக்குத்தான் வருவான் என்று பெருமையாக சொல்கிறார்கள். அவன் உத்தம புத்திரன் என்றும் சொல்கிறார்கள்.

  ஆகையால் உங்களது கருத்து மிகவும் சரியே. ஆனால் இதை உணர்பவர்க்ள மிகவும் சிலரே. காரணம் தற்போதைய வாழ்க்கை என்பது பணம் மற்றுமே.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜெயக்குமார். என் உறவினர் ஒருவர் என் பையனின் நண்பர்கள் இரவு 2 மணிக்கு வருவார்கள். எல்லோரும் எங்கோ சென்று விட்டு காலை 9 மணிக்குத்தான் வருவான். இதை மிகப் பெருமையாகச் சொல்வார். அதே பையன் இரண்டு வருடம் கழித்து ஒரு ஈவ் டீசிங்க் கேசில் மாட்டி உள்ளே இரண்டு மாதம் இருந்துவிட்டு வந்தான். அவனுக்கு இப்போது 36 வந்து ஆகிவிட்டது. பெண் கொடுப்பார் யாரும் இல்லை.

   நீக்கு
 17. ஐயா! நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்களின் அறிவுரைப்படி நடக்காமல் இக்கால இளைஞர்கள் (இருபாலரும்) தங்கள் விருப்பம்போல் நடப்பதால் தான் இது போன்ற இழிசெயல்கள் அரங்கேறுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இனியாவது இளைஞர்கள் தங்கள் நிலை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது நடக்குமா? காலம்தான் பாக்டீல் சொல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு