சில மாதங்களுக்கு முன் ஸ்விஸ் வங்கிகளில் போட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை திரும்பக் கோண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பார்லிமென்ட்டில் போராட்டம் நடத்தியது ஞாபகம் இருக்கலாம்.
அவர்கள் அப்போது கூறியது, அந்தப் பணம் முழுவதும் கள்ளப் பணம், அதைப் பூராவும் இந்தாயவிற்குத் திரும்பக் கொண்டு வந்தால் இந்தியா வெளி நாடுகளிலுருந்து வாங்கியிருக்கும் கடன் முழுவதையும் அடைத்து விடலாம், கடன் சுமை இல்லாத இந்தியா வேகமாக முன்னேறி, வல்லரசாகிவிடும் என்றெல்லாம் கூறினார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் தோன்ற, இந்த ஸ்விஸ் சமாசாரம் கிடப்பில் போடப்பட்டது.
இன்று காலையில் தினத்தந்தியில் ஒரு செய்தி படித்தேன்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.23 லட்சம் கோடியைத் தாண்டியது, முதல் காலாண்டில் மட்டும் ரூ.11000 கோடி உயர்வு.
இதை சாதாரண மக்கள் பத்தோடு பதினொரு செய்தியாக வாசித்து விட்டுப் போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நான் தற்பொழுது சமூக மாற்றங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்ளைப் பதிவில் எழுதி வருகிறேன். பலர் பின்னூட்டத்தில் நல்ல செய்திகளே உங்கள் கண்ணில் படாதா என்று கேட்டதன் விளைவாக இந்தச் செய்தியை உங்கள் கவனத்திற்கு கோண்டு வருகிறேன்.
இந்தச் செய்தியின் சாரம் என்னவென்றால் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்பதே. எவ்வளவு நல்ல செய்தி பார்த்தீர்களா? இனி மேல் என் மேல் "கெட்டதை மட்டும் பார்ப்பவன்" என்ற பழியைப் போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.