சொர்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொர்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பூலோகத்திலேயே சொர்க்கத்தைப் பார்க்கலாம்

                                   

கஞ்சா என்றால் என்ன ? இது சாப்பிடும் பொருளா? அல்லது குடிக்கும் திரவமா ? அல்லது புகைக்கும் வஸ்துவா ? எதுவென்று அறியாமல் அஞ்ஞானத்தில் உழலும் மானிடரைக் கடைத்தேற்றி மெய்ஞ்ஞானம் போதிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

ராமன் என்று பெயர் கொண்டவனை அழைக்க வேண்டுமானால் "ராமா" என்று கூப்பிடுவோம் அல்லவா. அந்த மாதிரி ஒரு கஞ்சனை அழைக்கவேண்டுமானால் "கஞ்சா" என்று கூப்பிடுவார்களாக்கும் என்றுதான் இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கையில் இப்போது மண்ணை வாரிக்கொட்டி விட்டார்கள்.

கஞ்சா என்பது ஒரு சர்வதேச பொருளாதார, கலாச்சார, அரசியல் விவகாரமாமே. பல கோடிகள் புரளும் விஷயமாமே. என் இளம் வயதிலேயே தெரிந்திருந்தால் நான் இப்போது கோடிகளில் புரண்டு கொண்டிருப்பேன்.(அல்லது ஏதாவது ஜெயிலில் களி சாப்பிட்டு நன்றாக புஷ்டியாக இருந்திருப்பேன்). விதி வலியது இல்லையா? விதி அப்படி என்னை அதிர்ஷ்டக்காரனாக்கவில்லை.

Better late than never அப்படீன்னு இங்கிலீஸ்ல ஒரு பழமொழி இருக்கு. அதனால வயசானா பரவாயில்ல, இது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணினேன். கூகுளாண்டவரைத் தேடிப்போய் வேண்டினால் அவர் சொல்கிறார் - "மகனே, உன்னுடைய வயதில் இது வேண்டாம், விட்டுடு" - அப்படீங்கறார். நாம விட்டுடுவோமா? அதெல்லாம் முடியாது, எனக்குத் தெரிந்தே ஆகணும் அப்படீன்னு இரண்டு காலிலேயும் நின்றேன். ஒத்தைக் காலிலே நிக்கற வயசா எனக்கு.

அவர் சொன்னது எல்லாம் முழுவதும் எனக்கு மனசிலாகல. எனக்குப் புரிஞ்ச மட்டில் சொல்றேன். கேட்டுக்கோங்க.

கஞ்சா என்பது ஒரு செடியிலிருந்து வருவது. அந்தச் செடியின் பெயர்: Cannabis sativa. எங்கியோ கேட்ட பேரா இருக்குதே என்று மூளையைக் கசக்கியதில் காலேஜ்ல படிக்கறப்போ பாட்டனி வாத்தியார் இதைச்சொல்லிக்கொடுத்த ஞாபகம் வந்தது. "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்று சௌகார் ஜானகி பாட்டு பின்புலத்தில் கேட்டது.

உத்தரப் பிரதேசத்தில் டூர் போகும்போது ரயில்வே லைன் ஓரத்தில் இந்தச் செடி ஏகத்திற்கு முளைத்துக் கிடக்கும். படம் பாருங்கள்.



இந்தச் செடி இந்தியாவில் பல காலமாக இருந்து வருகிறது. இதை நம் ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நம்மூர் சாமியார்கள் சொர்க்கத்தைக் காணுவதற்காகவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது எப்படி என்று பார்ப்போம். நமக்கு வேண்டியது அதுதானே.

இந்தச்செடியில் Tetrahydrocannabinol என்கிற ஒரு வேதியியல் பொருள் இருக்கிறது. இது பல மருத்துவக் குணங்கள் கொண்டது.





இந்த மருத்துவ குணங்களுக்காக இதை அந்தக் காலத்தில் பல நோய்களைக் குணப்படுத்த உபயோகித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது இரண்டாவது வரியில் இருக்கிறது. அதாவது கனவு காணுவது. (dreams) இந்தக் குணம் மனிதனை இயல்பு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது.அதாவது பூலோகத்திலிருந்து ஆகாயத்திற்கு அதாவது சொர்க்கலோகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இது ஒரு பரவச நிலையாகும். தன்னைச்சுற்றி அப்சரஸ்கள் நடனமாடுவது போல் இருக்கும். ஒரு முறை இந்தப் பரவச நிலையை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த நிலைக்குப் போவதற்கு ஆசைப் படுவது இயற்கையே அல்லவா?

இதுதானுங்க "கஞ்சா". இதற்கு மார்க்கெட்டில் பல பெயர்கள் உண்டு. ஹஷீஷ், பாட், மரிஜுவானா, இப்படி பல பெயர்கள். 

இப்படி பூலோகத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தைக் காணும் இந்த மருந்திற்கு பல நாட்டு அரசு படுபாவிகள் தடை விதித்திருக்கிறார்கள். நம் நாட்டிலும்தான். ஆனால் எந்தப்பொருளுக்கும் தடை விதித்தால் அதற்கு மதிப்பு கூடி விடும் அல்லவா? அப்படி கஞ்சாவிற்கும் மதிப்பு அதிகம். நன்றாக சுத்தப்படுத்தப்பட்ட கஞ்சா ஒரு வெள்ளைப் பவுடராக இருக்கும். இது ஒரு கிலோ கோடிக்கணக்கில் விலை மதிப்புப் பெற்றது.

தெருவிற்குத் தெரு டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அனுமதிக்கும் அரசு ஏன் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கஞ்சா கிடைக்காத இடம் இல்லை. பள்ளிக்கூட வாசலில் இருக்கும் பெட்டிக்டைகளில் கூட இது கிடைப்பதாக வதந்தி.

முன்னேற்றமடைந்துள்ள அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் இதை சட்டபூர்வமானதாகச் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தைப் பற்றிய விவரம் வேண்டுவோர் இங்கே செல்லவும். ஆகவே வசதி படைத்த பதிவர்கள் பூலோக ஸ்வர்க்கத்தைக் காணத் தயாராகுங்கள்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

சொர்க்கத்தைப் பார்த்தேன்

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ்சில் வந்தோம். 400 கி.மீ. தூரம். பஸ்கள் சொகுசானவை. ஏசி பொருத்தப்பட்டவை. ரோடுகள் 6 வழி எக்ஸ்பிரஸ் வே. ரோடுகளில் எந்த குண்டு குழிகளும் கிடையாது. பஸ்கள் ரோடுகளில் அப்படியே வழுக்கிக்கொண்டு போகின்றன.  ஒரு குலுங்கல் இல்லை. 400 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து விட்டோம். 100 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் கடை, பாத்ரூம் வசதிகள் இருக்கின்றன. பாத்ரூம்கள் அவ்வளவு சுத்தமாக இருக்கின்றன. யாரும் காசு கேட்பதில்லை.

ரோடில் வருபவர்களுக்காக சுங்கச்சாவடி, குடிஉரிமைச் சோதனைச்சாவடி ஆகியவை “வுட்லேண்ட்” என்னுமிடத்தில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இரண்டு இடங்களிலும் நம் பாஸ்போர்ட், விசா ஆகியவைகளைக் காண்பித்து “சாப்பா” (ரப்பர் ஸ்டாம்ப்) குத்திக்கொள்ளவேண்டும். இவைகளை தவறு இல்லாமல் செய்யவேண்டும். எங்காவது தவறு நடந்து விட்டால் அடுத்த குடியுரிமைச் சோதனையில் நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு சிறுவன் இம்மாதிரி ஒரு தவற்றினால் ஒன்றரை மணி நேரம் போராடி அவனை மீட்டு எடுத்து வருவதற்குள் டூர் ஏஜென்டுக்கு தாவு தீர்ந்து விட்டது. எங்கேயோ ஒரு இடத்தில் அவனுடைய பாஸ்போர்ட்டில் சீல் வைக்காமல் வந்துவிட்டான். அவ்வளவுதான். அவனை தீவிரவாதிகள் ரேன்ச்சுக்கு விசாரித்து அவனை விட அவ்வளவு நேரம் ஆயிற்று.

டூர் போவதென்றால் யாரும் வழிச்செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ளாமல் புறப்பட மாட்டார்கள். டூரிஸ்ட் கம்பெனியே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால் நாம் கொண்டுபோன பணம் அப்படியே இருக்கிறது. அதை திரும்பக் கொண்டு வந்து இங்கே என்ன செய்யப்போகிறோம்? அதற்குத்தான் சிங்கப்பூருக்கு கூட்டி வருகிறார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையையும் செலவு செய்ய இங்கே வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதிக அலைச்சல் கூட இல்லை. ஒரே கடையில் நீங்கள் கொண்டுபோன அனைத்துப் பணத்தையும் செலவு செய்ய சாமான்கள் வைத்திருக்கிறார்கள். “முஸ்தபா சென்டர்” என்று அதற்குப் பெயர். அம்மா, அப்பா தவிர அனைத்துப் பொருட்களும் அங்கே கிடைக்கும். நான் 20 வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட பல மடங்கு வளர்ந்திருந்ததைப் பார்த்தேன். இதைத் தவிர இன்னும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. அத்தனையிலும் ஜனங்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கப்பூரை “வாங்குபவர்களின் சொர்க்கம்” என்று கூறுகிறார்கள்.

சிங்கப்பூரில் நாங்கள் பார்த்த முக்கிய இடங்களின் லிஸ்ட்டும் போட்டோவும் மட்டும் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப் பார்த்திருப்பார்கள்.

1.   சென்டோஸா தீவு





2.   
சிங்கப்பூர் ஃப்லையர்


3.   சங்கி ஏர்போர்ட்


4.   சிங்கப்பூர் சிங்கம்


5.   மாரியம்மன் கோவில்
  
   
   கொசுறு; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். சென்டோசா லேசர் ஷோவைப் பார்க்கலாம்.
  
  http://www.youtube.com/watch?v=AuCVmyxXO4Y