திருப்பூர் கடின
உழைப்பாளிகள் நிறைந்த
ஊர் என்று
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்
அதே அளவு
முட்டாள்களும் இருப்பார்களென்று
நான் கனவிலும்
நினைக்கவில்லை.
மலேசியாவிலிருந்து ஒருவன்
அடிக்கடி வந்து
திருப்பூரில் ஒரு
சொகுசு ஓட்டலில்
தங்குவானாம். நம்ம
புத்திசிகாமணி திருப்பூரில்
ஒரு டிராவல்
ஏஜென்சி வைத்திருக்கிறார்.
இவரிடம் மலேசியாக்காரர்
அடிக்கடி விமான
டிக்கெட் வாங்குவாராம்.
திருப்பூர்காரர்கள் இப்படிப்பட்ட
ஆட்களைப் பார்த்தால்
பெரிய ஆள்
என்று எடை
போடுவார்கள் போல
இருக்கிறது. ஏனென்றால்
பனியன் வாங்க
வரும் வெளிநாட்டுக்காரன்
எல்லாம் இப்படித்தான்
சீன் போடுவான்.
அந்த ஆள்
ஒரு நாள்
நம்ம புத்திசிகாமணியை
ஓட்டலுக்கு வரவழைத்து
பார்ட்டி (தண்ணிப்
பார்ட்டிதான். வேறென்ன)
கொடுத்து தன்
வலையை விரித்துள்ளான்.
தன்னிடம் உள்ள
ஒரு பெட்டியைக்
காட்டி இதற்குள்
4 கோடி ரூபாயும்
ஒரு கிலோ
தங்கமும் இருக்கிறது.
இது பாரத
ஸ்டேட் வங்கியின்
பணப்பெட்டி. இதன்
பூட்டைத் திறப்பதற்கு
சென்னையிலிருந்து அந்த
பேங்கின் ஆபீசர்தான்
வரவேண்டும். அவர்
மூன்று நாள்
லீவு போட்டுவிட்டு
சொந்த வேலையாக
வெளியூர் போயிருக்கிறார்.
அதற்குள் எனக்கு
கொஞ்ச அவசரத்
தேவைக்காக 5 லட்சம்
ரூபாய் வேண்டும்.
அந்த பேங்க்கின்
ஆபீசர் வந்து
இந்த பெட்டியைத்
திறந்து கொடுத்தவுடன்
நான் உங்கள்
பணத்தை இரட்டிப்பாகக்
கொடுத்துவிடுகிறேன். இப்படியாக
ஒரு கதை
சொல்லியிருக்கிறான்.
நம்ம புத்தி
சிகாமணி, ஆஹா, மூன்று
நாளில் நம்
பணம் இரட்டிப்பாகப்
போகிறது. இந்தப்
பாழாப்போன பேங்க்குக்காரன்கள்
நம் பணத்தை
இரட்டிப்பாக்க ஏழு
வருடம் ஆகுமென்கிறான்.
இதோ நம்
கண்முன்னால் லட்சுமி
நின்றுகொண்டு என்னை
எடுத்துக்கொள் என்கிறாள்.
இதை விடலாமா
என்று பேராசைகொண்டு
உடனே வீட்டிற்குப்போய்
5 லட்சம் ரூபாயைக்
கொண்டுவந்து அந்த
ஆளிடம் கொடுத்து
விட்டான்.
அவன் இதே
மாதிரி இன்னும்
பத்து பேருக்கு
வலை விரித்துள்ளான்.
அதில் ஐந்தாறு
பேர் நம்ம
புத்தி சிகாமணிக்கு
அண்ணன்மார்கள். அவர்களும்
ஆளுக்கு ஐந்து
லட்சம் வீதம்
கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது
நாள் மலேசியாக்காரன்
ஓட்டலைக் காலி
பண்ணிவிட்டு போகுமிடத்தைச்
சொல்லாமல் போய்விட்டான்.
புத்திசிகாமணிகளெல்லாம் ஓட்டலுக்குப்
போனால் பட்சி
பறந்து போன
விஷயம் தெரிந்திருக்கிறது.
நாலு நாள்
காத்திருந்திருக்கிறார்கள். பட்சி
வரும் என்று. பட்சி
வராமல் போகவே, போலீசில்
போய் புகார்
கொடுத்திருக்கிறார்கள்.
நம்ம ஊரு
போலீசும் திருடனுக்குத்
திருடன்தானே! எப்படியோ
வலை தயார்
பண்ணி விரித்ததில்
பட்சி சிக்கிவிட்டது.
என்ன பிரயோஜனம்?
பணமெல்லாம் ஸ்வாஹா. பட்சிக்கு
இதுதான் முழுநேரத்
தொழிலாம்.
இந்த விவகாரத்தில்
எனக்குப் புரியாதது
என்னவென்றால் திருப்பூரில்
இப்படிப்பட்ட அடி
மடையன்களும் இருப்பார்களா
என்பதே?
நிற்க, எங்கள்
ஊரும் ஒன்றும்
திருப்பூருக்கு சோடை
போனதல்ல. (எங்க
ஊர் கோவைன்னு
எல்லோருக்கும் தெரியும்னு
நம்பறேன்).
கோவையைப்பற்றி
ரொம்ப நாளைக்கு
முன்பு குமுதம்
பத்திரிக்கையில் எழுதியிருந்தது
என்னவென்றால் கோயம்புத்தூர்காரனுங்க
(அப்ப கோவை
ஆகவில்லை) தண்ணியை
காசு மாதிரி
செலவழிப்பானுங்க, ஆனா
காசை தண்ணி
மாதிரி செலவழிப்பானுங்க,
அப்படீன்னு எழுதியிருந்தாங்க.
அது ஒரு
வகையில உண்மைதானுங்க.
அந்தக் காலத்தில
இங்க தண்ணிக்
கஷ்டம் அதிகம்
உண்டுங்க. (அந்தத்
தண்ணியில்லீங்க, வெறும்
தண்ணிதாங்க.) அந்தத்
தண்ணிக்கு கடவுள்
புண்ணியத்தில ஒரு
கொறையும் இல்லீங்க.
சாதா தண்ணிக்குத்தான்
கொஞ்சம் கஷ்டம். இப்ப
பரவாயில்ல.
இங்க கொஞ்சம்
காசு ஜாஸ்திதானுங்க.
(குசும்பும் கூடத்தானுங்க).
நேத்து பாருங்க
ரெண்டு பேரு (ஒருத்தன்
நெலம் வித்தவன்,
இன்னொருத்தன் நெலம்
வாங்கறவன்) இவங்க
ரெண்டு பேரும்
பணத்த காருல
வச்சுட்டு ஏதோ
வேலையா அக்கட்டால
போயிருக்காங்க. இதப்பாத்துட்டு
இருந்த முடிச்சவிக்கீக
காரு கண்ணாடியை
ஒடைச்சு பணத்தை
எடுத்துட்டு ஓடிட்டானுங்க.
காருக்காரனுங்க திரும்பி
வந்து பாக்கறப்போ
காசைக் காணோம். அப்பறம்
என்ன, போலீஸ்தான்.
பணம் என்னமோ
யானை வாயில
போன கரும்புதான்.
அப்படி என்னங்க
பணம் என்ன
பொண கனமா
இருக்கும்? அந்தப்
பணத்தை கையோட
எடுத்துட்டுப் போறதுக்கு
அத்தனை கஷ்டமா? இப்ப
பணம் முச்சூடும்
போய்ட்டுதே, எந்தக்
குட்டிச் செவுத்துல
போயி முட்டிக்கறது?
இவங்க எல்லாம் எந்த ஜன்மத்தில திருந்துவாங்க?