இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானிகளிடையே நிலவும் கருத்துகளை தொகுத்துக் கூறுகிறேன்.
1. நிலத்தடி நீர்ப்பிரச்சினையை ஒரு தலையாய பிரச்சினையாகவும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
2. அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய மக்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.
3. இந்தப் பிரச்சினைக்குண்டான தீர்வுகளை தீவிரமாக அமுல் படுத்தக்கூடிய கொள்கைப் பிடிப்புள்ள அரசு வேண்டும்.
இன்று இருக்கும் ஆட்சி முறையில் இவையெல்லாம் நடக்குமா என்பதை காலம்தான் சொல்லும். அரசு மற்றும் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஒரு சமுதாயமே அழிந்து போகும் நிலை வரக்கூடும் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
வளர்ந்து வரும் நிலத்தடி நீர்ப்பிரச்சினையை எப்படி சமுதாயம் எதிர்கொள்ளும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சமுதாய விழிப்புள்ள, தேசப்பற்று மிக்க, ஊழலற்ற அரசு என்றைக்கு அமைகிறதோ, அன்றைக்குத்தான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்படும். அப்படி ஒரு நாள் வருமென்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்விற்கு ஊன்றுகோல்.
பின் குறிப்பு; இந்தத் தொடரில் பிரசுரம் ஆன கட்டுரை சிங்கை மணற்கேணி நடத்திய 2010 ம் ஆண்டுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கட்டுரை. அந்தப் போட்டியில் இந்தக் கட்டுரை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே இதை என்னுடைய பதிவில் 8 பகுதிகளாகப் பதிவு செய்துள்ளேன்.
முழு கட்டுரையையும் ஒன்றாகப் படிக்க இந்த லிங்குக்கு செல்லவும்:
https://docs.google.com/document/d/1VxR_8N5C_oJdAVJmgxSs2AtQxP6HNdnGRQA7aSLFKk8/edit?hl=en_GB
இந்தக் கட்டுரையை யார் வேண்டுமானாலும் எடுத்து, எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அதிக மக்களைப் போய்ச் சேர்ந்தால் சமுதாயத்திற்கு நல்லதுதானே. எனக்குப் பேரோ, புகழோ வந்தால் அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?
வணக்கம்.