வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - கடைசி பாகம் 8 நிலத்தடி நீர்ப்பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து வருகின்றது. விவசாய விஞ்ஞானிகளும், நீர்நுட்பவியல் நிபுணர்களும், பொருளாதார வல்லுநர்களும் இந்தப்பிரச்சினை பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது கருத்தரங்கங்கள் கூட்டி இதைப்பற்றி விவாதிக்கிறார்கள். பல புதிய கருத்துக்கள் அலசப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானிகளிடையே நிலவும் கருத்துகளை தொகுத்துக் கூறுகிறேன்.

1.   நிலத்தடி நீர்ப்பிரச்சினையை ஒரு தலையாய பிரச்சினையாகவும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

2.   அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய மக்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.

3.   இந்தப் பிரச்சினைக்குண்டான தீர்வுகளை தீவிரமாக அமுல் படுத்தக்கூடிய கொள்கைப் பிடிப்புள்ள அரசு வேண்டும்.

இன்று இருக்கும் ஆட்சி முறையில் இவையெல்லாம் நடக்குமா என்பதை காலம்தான் சொல்லும். அரசு மற்றும் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஒரு சமுதாயமே அழிந்து போகும் நிலை வரக்கூடும் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

வளர்ந்து வரும் நிலத்தடி நீர்ப்பிரச்சினையை  எப்படி சமுதாயம் எதிர்கொள்ளும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது

சமுதாய விழிப்புள்ள, தேசப்பற்று மிக்க, ஊழலற்ற அரசு என்றைக்கு அமைகிறதோ, அன்றைக்குத்தான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்படும். அப்படி ஒரு நாள் வருமென்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்விற்கு ஊன்றுகோல்.

                  
பின் குறிப்பு; இந்தத் தொடரில் பிரசுரம் ஆன கட்டுரை சிங்கை மணற்கேணி நடத்திய 2010 ம் ஆண்டுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கட்டுரை. அந்தப் போட்டியில் இந்தக் கட்டுரை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே இதை என்னுடைய பதிவில் 8 பகுதிகளாகப் பதிவு செய்துள்ளேன்.


முழு கட்டுரையையும் ஒன்றாகப் படிக்க இந்த லிங்குக்கு செல்லவும்:
  https://docs.google.com/document/d/1VxR_8N5C_oJdAVJmgxSs2AtQxP6HNdnGRQA7aSLFKk8/edit?hl=en_GB


இந்தக் கட்டுரையை யார் வேண்டுமானாலும் எடுத்து, எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அதிக மக்களைப் போய்ச் சேர்ந்தால் சமுதாயத்திற்கு நல்லதுதானே. எனக்குப் பேரோ, புகழோ வந்தால் அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?

வணக்கம்.

7 கருத்துகள்:

 1. தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்டுப்போடறது, எப்ப பின்னூட்டம் போடறது? இதையெல்லாம் யோசிச்சீங்களா?

  இப்படி நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன். (வேற மாதிரி தப்புகள் கைவசம் நிறைய இருக்கின்றன)

  பதிலளிநீக்கு
 2. அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்.. நானும் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்டுப்போடறது, எப்ப பின்னூட்டம் போடறது? இதையெல்லாம் யோசிச்சீங்களா?

  நீங்க ரொம்ப நல்லவர்...:)

  பதிலளிநீக்கு
 4. அருமையான தொகுப்பு சார்....
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 5. இந்த தொடரின் எட்டுப் பகுதிகளையும் படித்து விட்டேன். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்து, தங்கள் அனுபவத்துடன் நாட்டு மக்கள் போக்கையும் கலந்து நடைமுறை உண்மைகளை நிதர்சனப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  மல்சிங் களைகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் என்று நினைத்திருந்தேன். அது நீர் ஆவியாகி வெளியேறுவதையும் தடுக்கும் என்பது இங்கு படித்த பின்னர்தான் உறைத்தது.

  நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் Coconut pith-ஐ செடிகளின் வேர் பகுதியில் அதிக அளவில் பரப்பி வைப்பதன் மூலமும் நீரிழப்பை குறைக்க முடியும் என்று படித்த நினைவு. இது தென்னை நாரிலிருந்து கயிறு திரித்தபின் (மலை போல்)குவிந்து கிடக்கும் ஒரு கழிவு பொருள். அதை எரிக்கவும் முடியாது என்னும் போது நீர் சேமிப்பில் பரவலாக பயன்படுத்தலாமே. ஆனால் ஏன் இது இன்னமும் செயற்முறைப் படுத்தப்படவில்லை?
  இதனால் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா ?

  நல்ல கட்டுரைத் தொகுப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. //KABEER ANBAN said...
  இந்த தொடரின் எட்டுப் பகுதிகளையும் படித்து விட்டேன். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்து, தங்கள் அனுபவத்துடன் நாட்டு மக்கள் போக்கையும் கலந்து நடைமுறை உண்மைகளை நிதர்சனப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.//

  மிக்க நன்றி கபீர் அன்பன் அவர்களே. என் கருத்துகள் உங்களுக்குப் பிடித்துப் போனது என் பாக்கியம்.

  பதிலளிநீக்கு