திங்கள், 10 செப்டம்பர், 2012

நான் வென்று விட்டேன்

தெனாலி சினிமாப் படத்தில் கமலஹாசன், அந்த டைம் பாம் மிலிருந்து தப்பித்து வந்தவுடன், "நான் வென்றுவிட்டேன், டாக்டர்" என்று கத்துவார். அது போல விண்டோஸ் 8 வுக்கும் எனக்கும் நடந்த போரில் நான் வென்று விட்டேன்.

விண்டோஸ 8 உடன் மூன்று நாட்கள் வாழ்க்கை நடத்தி, ஒரு முறை டைவோர்ஸ் பண்ணி அப்புறம் சமாதானம் (ரீஇன்ஸ்டால்) செய்தவுடன் அதன் ரகசியங்களெல்லாம் தெரிய வந்தன.

ஒரு மண்ணும் புதுசாப் பண்ணலை. பழைய பொம்மைக்குப் புதுச் சட்டை போடறாப்பல, விண்டோஸ் 7 க்கு முலாம் பூசியிருக்கிறார்கள்.  மொத்தத்தில இந்த புரொக்ராம் டேப்ளெட் பிசிக்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டது. அதாவது டச் ஸ்கிரீன் உள்ள கருவிகளுக்கு ஆனது. இன்னும் சில வருடங்களில் நம்ம குழந்தைகளுக்கு சுட்டு விரல் பாதிதான் இருக்கும்.

ஆனால் மைக்ரோசாஃப்ட் காரன் நல்லாப் பூ சுத்தறான். அந்தக் கம்பெனியில புரொக்ராம் எழுதறவங்கள விட, இந்த விளம்பரங்களை எழுதறவங்களுக்கு சம்பளம் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

இரண்டாவது அமெரிக்கா போல் 24 மணி நேரமும் மின்சாரமும் இன்டர்நெட் கனெக்ஷனும் இருக்கும் நாடுகளுக்காக ஸ்பெஷலெ புரொக்ராம் இது. ஆஊன்னா இன்டெர்நெட் கனெக்ஷ்ன் இல்லையென்று மூக்கால் அழுகிறது. அப்பறம் இண்ணொண்ணு, எது கேட்டாலும் ஸ்டோர்ல இருக்குது வாங்கிக்கோ அப்படீங்குது. ஸ்டோருக்குப் போனா காசைக்கொண்டா அப்டீங்கறான் ஸ்டோர்காரன்.

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் XP ஐ வைத்திருக்கும் பாக்கியசாலிகளே, அதிலேயே இருந்து கொள்ளுங்கள். விண்டாஸ் 8, வேலியில போகிற ஓணான்!

விண்டோஸ் 8 மூலம் நான் வரைந்த ஓவியம்.