திங்கள், 10 செப்டம்பர், 2012

நான் வென்று விட்டேன்

தெனாலி சினிமாப் படத்தில் கமலஹாசன், அந்த டைம் பாம் மிலிருந்து தப்பித்து வந்தவுடன், "நான் வென்றுவிட்டேன், டாக்டர்" என்று கத்துவார். அது போல விண்டோஸ் 8 வுக்கும் எனக்கும் நடந்த போரில் நான் வென்று விட்டேன்.

விண்டோஸ 8 உடன் மூன்று நாட்கள் வாழ்க்கை நடத்தி, ஒரு முறை டைவோர்ஸ் பண்ணி அப்புறம் சமாதானம் (ரீஇன்ஸ்டால்) செய்தவுடன் அதன் ரகசியங்களெல்லாம் தெரிய வந்தன.

ஒரு மண்ணும் புதுசாப் பண்ணலை. பழைய பொம்மைக்குப் புதுச் சட்டை போடறாப்பல, விண்டோஸ் 7 க்கு முலாம் பூசியிருக்கிறார்கள்.  மொத்தத்தில இந்த புரொக்ராம் டேப்ளெட் பிசிக்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டது. அதாவது டச் ஸ்கிரீன் உள்ள கருவிகளுக்கு ஆனது. இன்னும் சில வருடங்களில் நம்ம குழந்தைகளுக்கு சுட்டு விரல் பாதிதான் இருக்கும்.

ஆனால் மைக்ரோசாஃப்ட் காரன் நல்லாப் பூ சுத்தறான். அந்தக் கம்பெனியில புரொக்ராம் எழுதறவங்கள விட, இந்த விளம்பரங்களை எழுதறவங்களுக்கு சம்பளம் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

இரண்டாவது அமெரிக்கா போல் 24 மணி நேரமும் மின்சாரமும் இன்டர்நெட் கனெக்ஷனும் இருக்கும் நாடுகளுக்காக ஸ்பெஷலெ புரொக்ராம் இது. ஆஊன்னா இன்டெர்நெட் கனெக்ஷ்ன் இல்லையென்று மூக்கால் அழுகிறது. அப்பறம் இண்ணொண்ணு, எது கேட்டாலும் ஸ்டோர்ல இருக்குது வாங்கிக்கோ அப்படீங்குது. ஸ்டோருக்குப் போனா காசைக்கொண்டா அப்டீங்கறான் ஸ்டோர்காரன்.

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் XP ஐ வைத்திருக்கும் பாக்கியசாலிகளே, அதிலேயே இருந்து கொள்ளுங்கள். விண்டாஸ் 8, வேலியில போகிற ஓணான்!

விண்டோஸ் 8 மூலம் நான் வரைந்த ஓவியம்.

24 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ! விண்டோஸ் 8 -யில் ஒன்றுமில்லையா ? இப்படியே விளம்பரம் பண்ணியே விண்டோஸ் காரங்க நல்லா சம்பாதிக்கிறானுங்கப்பா !

    பதிலளிநீக்கு
  2. தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கூட இன்னும் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் .ஆனால் அதை நீங்கள் கஷ்டப்படு இன்ஸ்டால் செய்து பயன் படுத்தி ரெவ்யூவும் எழுதிவிட்டீர்கள். வாழ்க உங்கள் சுறுசுறுப்பு. உங்கள் ஆர்வம் ஆச்சர்யப் படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஆராய்ச்சியாளர் அல்லவா?அதனால் நன்றாகவே ஆராய்ந்து இருக்கிறீர்கள். தகவலுக்கு நன்றி! படம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. 3.10 am

    ஏண்ணா வயசானாலும் ஆச்சு., தூக்கம் சுத்தமா வர்றதில்லையாட்டிருக்குது.,விண்டோச பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்கீங்க :)))

    பதிலளிநீக்கு
  5. பதிவரான நீங்கள் அழகான ஒவியம் வரையும் ஒவியராகவும் ஆகிவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. விண்டோஸ புதுசா வரும் போது எவ்லோரும் எதிர்கொள்கிற பிரச்சனைதான்...
    அத்தொழில் நுட்பத்தை கொஞ்சம் புரிந்துக்கொண்டால் சரியாகிவிடும்...

    பதிலளிநீக்கு
  7. windows8 பற்றி புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் எளிமையாக !

    பதிலளிநீக்கு
  8. Sir...excellant.....

    நாங்க இளசுங்க " OLD LADY IN NEW SKIRT" என்று சொல்வோம் !

    பரவாயில்லை !

    பதிலளிநீக்கு
  9. முற்றிலும் உண்மை. இது புரிந்ததால்தான் நான் விண்டோஸ் 8 ஐ பதிவேற்றி, பின்னர் அவற்றை நீக்கிவிட்டு முன்பு போல விண்டோஸ் 7 க்கு மீண்டும் வந்தேன்.
    உண்மையில் விண்டோஸ் விஸ்டா வெளியிட்டு அனைவரின் அர்ச்சனைகளையும் வாங்கி கட்டிக்கொண்ட மைக்ரோ சாப்ட் அதனை சீரமைத்து விண்டோஸ் 7 ஆக மாற்றி வெளியிட்டு மார்கெட்டை காப்பாற்றிகொண்டனர்.
    விண்டோஸ் 8 பெரிய வரவேற்பினை பெறவில்லை என்பதை தெழில் நுட்ப வல்லுனர்களே கூறுகின்றனர்.
    எக்ஸ் பி அல்லது விண்டோஸ் 7 மட்டுமே சிறந்தது, போதுமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  10. நன்றி.

    சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

  11. விண்டோஸ் 7.... 8... என்று நீங்கள் என்னென்ன தளத்திலோ இருக்கிறீர்கள். கணினியில் தட்டுவது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு விண்டோஸ் எக்ஸ்பீ தான் பெஸ்டாக உள்ளது! நல்ல பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    பதிலளிநீக்கு
  13. உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்க்ள். எக்ஸ்பீ எப்பவும்பெஸ்ட்.

    பதிலளிநீக்கு
  14. \\விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் XP ஐ வைத்திருக்கும் பாக்கியசாலிகளே, அதிலேயே இருந்து கொள்ளுங்கள். விண்டாஸ் 8, வேலியில போகிற ஓணான்!\\ விண்டோஸ்காரன் குடுக்கிறது எல்லாமே ஓணான்தான் , அதனாலதான் நாங்க உபுண்டு பயன் படுதுறோம், விவரம் கேட்பவர்களுக்கு சொல்லித் தரவும் ரெடியா இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் ஐயா!.. உங்கள் முயற்சி எங்களுக்கு
    ஒரு பாடம். ஆக எங்களுக்கும் உண்மையை அறிந்து
    தெரிவித்து அவியாமல் காப்பாற்றி விட்டீர்கள் .இந்த
    வெற்றி அனைவருக்கும் என்றாகி விட்டது .அதனால்
    உங்களுக்கு எம் அன்பு கலந்த நன்றிகள் .விண்டோஸ்
    எட்டுக்கு குட்பாய்!!!........:)

    பதிலளிநீக்கு
  16. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் XP ஐ வைத்திருக்கும் பாக்கியசாலிகளே, அதிலேயே இருந்து கொள்ளுங்கள்.

    பதிவல்ல ..பாடம் !

    பதிலளிநீக்கு