திங்கள், 5 நவம்பர், 2012

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் - 360 டிகிரி போட்டோ

கடந்த பல வருடங்களாக போட்டோகிராபியில் பல நூதன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அவைகளில் ஒன்றுதான் 360 டிகிரி போட்டோக்கள். கூகுள் மேப்பில் இந்த மாதிரியான படங்கள் உள்ளன.

இதில் என்ன விசேஷம் என்றால், நாம் ஒரு இடத்தில் இருந்து கொண்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தால் எந்த மாதிரி தெரியுமோ அது மாதிரி போட்டோவில் தெரியும். அம்புக்குறிகளையோ மவுஸையோ பயன்படுத்தி இந்த போட்டோக்களை சுற்ற வைக்கலாம்.

இது என்னமோ பெரிய இந்திர ஜால வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பொழுது போகாமல் கூகுளை மேய்ந்து கொண்டிருந்தபோது இதைப்பற்றி ஆராய்ந்தேன். இந்த மாதிரி செய்து கொடுப்பதற்கு ஒரு தளம் கண்ணில் பட்டது.

http://www.panomonkey.com/

இந்த தளத்தில் சொல்லியுள்ள மாதிரி போட்டோக்கள் எடுத்து அந்த தளத்தில் அப்லோடு செய்தால் 360 டிகிரி போட்டோ செய்து கொடுக்கிறார்கள். அப்படி செய்த ஒரு போட்டோவை இங்கு இணைத்திருக்குறேன். நான் இதை காசு கொடுத்து வாங்காகததால் முதல் 100 பேருக்கு மட்டும்தான் தெரியுமாம். பார்த்து நன்றாக இருக்கிறதென்று நீங்கள் கருதினால் காசு கொடுத்து வாங்கி விடுகிறேன்.



வலது மேல் மூலையில் உள்ள Expand  அம்பை சுட்டினால் முழு ஸ்கிரீனிலும் தெரியும். நான் படித்து வேலை பார்த்து ஓய்வு பெற்று இன்று அமைதியான வாழ்க்கை வாழ உதவிய பல்கலைக்கழகம்.